Tamil Actress Manorama History in Tamil – நடிகை மனோரமா  வாழ்க்கை வரலாறு

ஆச்சி என தமிழ் திரைப்பட ரசிகர்களால் அழைக்கப்படும் மனோரமா அவர்கள், இந்தியத் சினிமா துறையில் மாபெரும் சாதனைப் படைத்த ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ் நாட்டில் இருந்த முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என அனைவர் உடனும் இவர் பல படங்கள் நடித்து உள்ளார்.

தமிழ் சினிமா துறையில் 5000 நாடகங்களிலும்,1200 திரைப்படங்களில் நடித்து உலகப் கின்னஸ் புத்தகத்தில் இவர் பெயரை பதியவைத்தார். தமிழ் சினிமா துறையில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் எனப் பல கதாபாத்திரங்களை இவர் நடித்து உள்ளார். மாபெரும் சாதனைப் படைத்த ‘ஆச்சி’அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

மே 26 ஆம் நாள் 1943 ஆம் ஆண்டு மன்னார்குடியில் தந்தை காசி கிளார்க்குடையார் என்பவருக்கும், தாய் ராமாமிர்தம்மாள் என்பவருக்கும் மகளாகப் பிறந்தார்.

இளமைப் பருவம் :

வறுமை காரணமாக மனோரமா தன் தாயாருடன் இளமை பருவத்தில் காரைக்குடிக்கு அருகிலுள்ள பள்ளத்தூர் என்ற இடத்தில் வசித்தனர். அங்கு அவர் பள்ளிப்படிப்பை தொடங்கினார், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார்.

ஒரு காலகட்டத்தில் அவரது அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போக, அவரது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு ஒரு பண்ணையார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார்.

நடிகை மனோரமா  வாழ்க்கை வரலாறு

நாடகத் துறையின் வாழ்க்கை :

ஒரு நாள் அவருடைய ஊரில் நாடகம் நடைப்பெற்றது. அதில் பெண் வேடம் போடா யாரும் இல்லை. அதனால் மனோரம்மாவை அதில் நடிக்க வைத்தார்கள். இவருடைய குரல் தேன்போல இருப்பதால் பலரும் இவரை பாரட்டினார்கள், இவர் நடனத்தையும் பார்த்த பலரும் இவரை பாராட்டினார்கள்.

அந்த நேரத்தில் தான் நாடக குழுவை சேர்ந்தவர்கள் இவர் பெயரை ‘மனோரமா’
என மாற்றினார்கள். இதை தொடர்ந்து பல நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர் நாடக உலக ராணி என பட்டம் பெற்றார்.அவர் நாடகத்தில் இருக்கும் போது ஜானகிராமன் என்பவர் இவரைத் தேடிவந்து இவர் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ய கூறினார்.

ஆனால், அவரின் நேரம் அந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்க்கு பிறகு கவிஞர் கண்ணதாசனின் ‘ஊமையன்கோட்டை’ படத்தில் நடித்தார். அந்தப் படமும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது , மனமுடைந்து மனோரமா. 1958 ஆம் ஆண்டில் மாலையிட்ட மங்கை என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகம் ஆனார்.

தனிப்பட்ட வாழ்க்கை :

எஸ். எம். ராமநாதன் என்பவரை , மனோரமா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார்.

திரையுலக வாழ்க்கை :

அவருடைய முதல் திரைப்படத்திற்கு பிறகு திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், எதிர் நீச்சல் என பல படங்கள் நடித்து தமிழ் சினிமா துறையில் மட்டும் இல்லாமல் பல மொழில் 1000 திரைப்படங்களில் நடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் பெயரை பதிவு செய்தார்.

முதல்வர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என பலருடன் மனோரமா மட்டுமே நடித்து உள்ளார். இந்த பெருமை அவரையே சேரும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் எனப் பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களின் பெயரை சொல்ல ஒரு நாள் போதாது.

விருதுகள் :

தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி விருது.

மத்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது.
.
புதிய பாதை திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது

1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

மலேசிய அரசிடம் இருந்து டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது.
கேரளா அரசின் கலா சாகர் விருது.

சினிமா எக்ஸ்பிரஸ் விருது
.
சிறந்த குணச்சித்திர நடிகைக்காக தமிழ் நாடு அரசு அண்ணா விருது, என்.எஸ்.கே விருது, எம்.ஜி.ஆர். விருது, ஜெயலலிதா விருது எனப் பல்வேறு விருதுகளை அவருக்கு வழங்கி கெளரவித்தது.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை ஆட்சி செய்த ‘ஆச்சி’ மனோரமா இன்று நம் உடன் இல்லை .

Leave a Comment