Tamil Actor Dhanush History in Tamil – நடிகர் தனுஷ் வாழ்க்கை வரலாறு

தனது சகோதரர் செல்வராகவன் மூலமாகத் சினிமா துறையில் நுழைந்தவர் தனுஷ். பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ் ஆவார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்புகள் இருந்தாலும் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலமாக தன்னை இந்த உலகத்திற்க்கு அடையாள படுத்தி கொண்டார்.

துள்ளுவதோ இளமை என்ற படம் மூலமாக 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதோட மட்டும் தன்னை நிறுத்தி கொள்ளாமல் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் படிப்படியாக தன்னை சினிமா துறையில் வளர்த்து கொண்டார்.

இவர் பாலிவுட்,ஹாலிவுட் என அனைத்து இடங்களிலும் தன்னை ஒரு நடிகனாக நிரூபித்து காட்டினார். அவர் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் சிறந்த நடிகருக்காக தேசிய விருது வென்றார். குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் தனுஷ் அவர்களின் வாழ்க்கை வரலாறை தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

ஜூலை 28 ஆம் தேதி 1984 ஆம் ஆண்டு தனுஷ் சென்னையில், இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் ராஜேஸ்வரி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரர் மற்றும் இரண்டு சகோதிரிகள் உள்ளனர்.

இளமைப் பருவம் :

அவர், தனது ஆரம்பா படிப்பை சென்னையில் உள்ள ஆழ்வார்த் திருநகரில் இருக்கும் செயின்ட் ஜான்’ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து முடித்தார். பின்பு சினிமாவில் நுழைய அவரோட அண்ணன் வற்புறுத்தியதால் அவர் படிப்பை நிறுத்திக் கொண்டு சினிமாவுக்கு சென்றார்.

நடிகர் விக்ரம் வாழ்க்கை வரலாறு

திரையுலக வாழ்க்கை :

2002 ஆம் ஆண்டில் செல்வராகவன் எழுதி இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற படம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படம் வெற்றிப் பெற்றதால், அடுத்த ஆண்டே இருவரும் மீண்டும் காதல் கொண்டேன் திரைப்படத்தை எடுத்தனர். இந்த படமும் நன்றாக ஓடி வெற்றி பெற்றது.

பின் இயக்குனர் வாசு அவரது படமான திருடா திருடி திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றது. பின்பு பல படங்கள் நடித்து தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமா துறையில் உருவாக்கினார் தனுஷ்.

2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல். ராய் இயக்கியபாலிவுட் திரைப்படமான ‘ரஞ்சனா’ என்ற படத்தில் நடித்த தனுஷ் ஒரே வாரத்திலேயே 34 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்தார்.இந்த நிகழ்வு அவரை ஹிந்தித் திரையுலகிலும்
ஒரு அற்புத நடிகரென்ற முத்திரையைப் பதிக்கச் செய்தது.

இல்லற வாழ்க்கை :

004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி தனுஷ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர். சில காரணத்தால் இருவரும் விவாகரத்தும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மதம் செய்து கொண்டனர்.பின் ஒன்று சேர்ந்து உள்ளனர்.

பிறப் பணிகள் :

நடிகராக சாதித்த தனுஷ் ஒரு சில படங்களில் பாடல்கள் பாடி வந்தார். அவர் பாடிய பல பாடல்கள் பெரும் வரவேற்பையும் மக்களிடம் பெற்றுத் தந்தது. பின்பு அவரே பாடல் எழுதி பட தொடங்கினர்.

மயக்கம் என்ன திரைப்படத்தில் அவர் பிறைத் தேடும் இரவிலே, ஓட ஓட மற்றும் காதல் என் காதல் என மூன்று பாடல்கள் எழுதி பாடினார். அவர் எழுதிப் பாடிய பாடலான ஒய் திஸ் கொலவெறி உலகம் முழுக்க பரவி புழப்பெற்றது.3 மற்றும் எதிர் நீச்சல் படங்களைத் தயாரித்து ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்றும் அவரை நிரூபித்துள்ளார்.

விருதுகள் :

2008 ஆம் ஆண்டு யாரடி நீ மோகினி படத்திற்காக சிறந்த கேளிக்கையாளருக்கான விஜய் விருது வென்றார்.

2011 ஆம் ஆண்டு ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது, ஃபிலிம்ஃபேர் விருது மற்றும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வென்றார்.

2011 ஆம் ஆண்டு மயக்கம் என்ன படத்திற்காக சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதை ‘ஓட ஓட ஓட ஒன்னும் புரியல’ என்றபாடலுக்காகப் வென்றார்.

2012 ஆம் ஆண்டு 3 படத்தின் சிறந்த நடிகருக்கான விஜய் விருது வென்றார்.

ஆடுகளம் மற்றும் அசுரன் படத்துக்காக தேசிய விருது வாங்கியுள்ளார்.

Leave a Comment