T.V.Sundram Iyengar History in Tamil – தி.வே. சுந்தரம் அய்யங்கார வாழ்க்கை வரலாறு

தி.வே. சுந்தரம் அய்யங்கார் திருக்குறுங்குடி வேங்ககுருஸ்வாமி சுந்தரம் அவர்கள், இந்திய தொழில் துறை, ஆட்டோமொபைல் துறையின் உண்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் கொண்ட மாமனிதர்.

தி.வே. சுந்தரம் அய்யங்கார் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1877ல் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்கருங்குடி என்ற இடத்தில் தி. வே. சுந்தரம் ஐயங்கார் பிறந்தார்.

குஷ்வந்த சிங் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

திருநெல்வேலியுள்ள ஒரு பள்ளியில் படிக்க தொடர்ந்த அவர், பின் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார்.

ஒரு வழக்கறிஞராக இருந்து கொண்டே தொழில்துறையைத் தொடங்கினார். பின் இந்திய ரயில்வே மற்றும் வங்கியிலும் வேலை செய்தார்.

தொழில்துறை :

இளமையிலேயே சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்த டிவிஎஸ் அவர்கள்.

1911 ஆம் ஆண்டு, மதுரையில் முதல் பஸ் சேவையை துவக்கினார். தொடர்ந்து 1923 இல் டி.வி.சுந்தரம் ஐயங்கார் மற்றும் சன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவினார். 1929-ல் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியில் தொடர்பு ஏற்பட்டு ஏஜென்ஸி உரிமை பெற்றார், பின் தான் டிவிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி தொடங்கியது.

பின் அவர் சுந்தரம் மோட்டார்ஸ் லிமிடெட் பெயரில் தொழிற்சாலைகளை தொடங்கினார்.

அப்போது இரண்டாம் உலகப் போரின் போது, சென்னை மாகாணத்தில் பெரும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, அவர் ‘டி.வி.எஸ் கரி எரிவாயு ஆலையை’ உருவாக்கினார்.

மிக எளிமையாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம். இப்போது இந்தியாவின் மிகப் பெரும் நிறுவனமாக இருக்கிறது.

தி.வே. சுந்தரம் ஐயங்கார் தன் நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் தன்னுடைய பிள்ளைகளிடம் ஒப்படைத்த பின், “டி.வி.எஸ்” என்ற பெயரின் கீழ் நான்கு தனித் தனி கிளைகள் தொடங்கினார். சுமார் 50,000 பேர், 40 நிறுவனங்களும் இவர்கள் இயங்கி வருகின்றன.

நிறுவனங்கள் :

டி.வி.எஸ் குழுமத்தின் கீழ் வரும் சில நிறுவனங்கள் வீல்ஸ் இந்தியா, ப்ரேக்ஸ் இந்தியா, சுந்தரம் ஃபாஸ்டநெர்ஸ், டி.வி.எஸ் இன்ஃபோடெக், டி.வி.எஸ் மோட்டார் கம்பெனி, சுந்தரம் ஃபைனான்ஸ், டர்போ எனர்ஜி லிமிடெட், ஆக்சல்ஸ் இந்தியா, சுந்தரம் கிளேட்டன், லூகாஸ் டி.வி. எஸ், சுந்தரம் மோட்டார்ஸ், சுந்தரம் பிரேக் லைனிங், டி.வி.எஸ் லாஜிஸ்டிக்ஸ், டி.வி.எஸ் சதர்ன் ரோட்வேஸ் லிமிடெட்.

தொழிலாளர்களுக்கு செய்த வசதி :

தி.வே. சுந்தரம் ஐயங்கார் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். ஊழியர் குடியிருப்புகள், அவர்களது குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற வசதிகளையும் செய்து கொடுத்தார்.

தொழிலை விட்டு விட்டு சாதனை :

திருக்குறுங்குடி வேங்ககுருஸ்வாமி சுந்தரம் ஐயங்கார், தனது இலாபகரமான ரயில்வே தொழிலை விட்டு விட்டு, தனது சொந்த தொழிலைத் தொடங்கினார். போக்குவரத்துத் தொழில் என்று எங்கேயும் கேள்விப்படாத காலத்தில், குறிப்பாக தென்னிந்தியாவில், முதன் முறையாக பஸ் சேவையை தொடங்கி, போக்குவரத்து வணிகத்தில் தனது முன்னிலையை உறுதிப்படுத்தினார்.

இறப்பு :

சுந்தரம் ஐயங்கார் அவர்கள், 78வது வயதில், ஏப்ரல் 28, 1955ல் கொடைக்கானலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Leave a Comment