சுந்தர் பிச்சை வாழ்க்கை வரலாறு – Sundar Pichai History in Tamil

கூகுள் நிறுவனம் ஆகஸ்ட் 2015 ஆண்டு ஒரு புதிய சிஈஓ வின் நியமனத்தை அறிவித்து உலகை வியப்புற வைத்தது. அது தொழில்நுட்ப துறை நிறுவன தலைமை அதிகாரிகள் பட்டியல் அதில் நம் தமிழ்நாட்டில் மக்களை எப்போதும் பின் தங்கிய நிலையிலே வைத்திருந்தார்கள்.

அந்த நிலையினை தகர்த்து நம் தமிழராலும் அனைத்து துறையிலும் சாதிக்க முடியும் என்று நிருபித்து காட்டியவர் கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை. சுந்தர் பிச்சை அவர்கள் அவருடைய வாழ்க்கை பாதையில் நடந்த தோல்வி மற்றும் வெற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

12 ஜூலை 1972 அன்று பிச்சை சுந்தர் ராஜன் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் பிறந்தார். அவரது தந்தை ரகுநாதா பிச்சை மற்றும் தாயார் லெட்சுமி பிச்சை.

இவர் தந்தை பிரிட்டிஷ் கூட்டு நிறுவனமான ஜி.இ.சியின் மின் பொறியியலா – ளராக பணியாற்றினார். சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கார் போன்றவை இருந்திருக்கவில்லை.

ஆனால், சுந்தர் பிச்சையின் தந்தை, தன் மகன்களின் கல்வியில் கூடுதல் கவனத்தைச் செலுத்திவந்தார்.

சத்ய நாடெல்லா வெற்றி பயணம் – Satya Nadella Success Story

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

பிச்சை ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே அவர் கல்வியில் சிறந்த மாணவராக விளங்கினார். அவருக்கு படிப்பில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதே அளவுக்கு விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியவர் அவர்.

அவர் பத்மா சேஷாத்ரி பள்ளியில் பயின்றார். பிறகு அவர் கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிப்புரிந்தார். அது இந்தியாவில் உள்ள முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாகும். அவர் கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி யில் பி.டெக் படித்தார். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் அறிவியல் மற்றும் இயற்பியலில் பட்டம் பெற்றார்.

காதல் திருமணம் :

சுந்தர் பிச்சை ஐஐடி கரக்பூரில் படித்துக் கொண்டிருக்கும்போது அஞ்சலியை சந்தித்தார். அஞ்சலி அவரின் வகுப்பில் படித்தவர்.


இவர்களின் திருமணம் காதல் திருமணம் ஆகும். இவர்களுக்கு காவ்யா மற்றும் கிரண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சுந்தர்பிச்சை குழுவில் கூகுளின் தேடல் :

பிச்சை சிலிக்கான் வேலியில் உள்ள செமி கண்டக்டர் தயாரிப்பு நிறுவனத்தில் பொறியாளராகவும் தயாரிப்பு மேலாளராகவும் சேர்ந்தார். அவர் 2004 இல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார்.


ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவில் கூகுளின் தேடல் பகுதியில் வேலை பார்த்தார். பிறகு கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்துவந்தது.

அவர் மூத்த ஊழியர்களுடன் தனது யோசனை குறித்து விவாதித்தார். அப்போதைய தலைமை நிர்வாகியாக எரிக் ஷ்மிட்டன் இதற்கு எதிர்ப்பு
தெரிவித்தார்.

ஒரு உலாவியை உருவாக்குவது மிகவும் விலையுயர்ந்த விவகாரம் என அவர் நினைத்தார்.இருப்பினும் கூகுளின் உலாவியை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தார் பிச்சை.

Parag Agrawal Success Story – பராக் அக்ரவால் வெற்றி பயணம்


இதற்காக அவர் கூகுள் ஊழியர்களை சமாதானப்படுத்தினார். இறுதியில் 2008 ஆம் ஆண்டு கூகுள் குரோம் என்ற இணைய உலாவி வெளியிடப்பட்டது. கூகுள் க்ரோம் வெற்றியில் சுந்தர் பிச்சைக்கு முக்கிய பங்கு இருந்தது.

பின் அந்நிறுவனத்தின் உயர்பதவியில் இருந்த லாரி பேஜ், செர்ஜி ப்ரின் போன்றவர்கள் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்
பொறுப்புகளை சுந்தர் பிச்சையிடம் அளித்து வந்தனர்.

தொடர்ந்து, 2015ல் அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அவர் பதவியேற்றார்.

சொத்தின் நிகர மதிப்பு :

பிப்ரவரி 2016 இல் கூகுளின் நிறுவனமான ஆல்பாபெட்டின் 2,73,328 பங்குகள் சுந்தர் பிச்சையிடம் இருந்தன. இந்த பங்குகளின் மொத்த மதிப்புகள் 199 (1500 கோடி) மில்லியன் டாலர்கள் ஆகும்.

இந்த பங்குகளின் மதிப்பு 650 (7000 கோடி) மில்லியன் டாலர் வரை உயர்ந்தது.சுந்தர் பிச்சையின் சொத்தின் நிகர மதிப்பு 1.2 பில்லியன் டாலர் ஆகும் (9000 கோடி).

சுந்தர்பிச்சை பேச்சு :

யார் என்ன பாதையை வேண்டும் என்றாலும் தேர்வு செய்யலாம் ஆனால் நமது கனவு மற்றும் மனது என்ன சொல்கிறது என்பதை பின்பற்ற வேண்டும். அதுதான் முக்கியம். நீங்கள் துணிந்து செயல்படுவது உங்களுக்கு உடனடியாக பலனளிக்காமல் இருக்கலாம் ஆனால் காலம் செல்ல செல்ல உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.

சுந்தர் பிச்சை :

சுந்தர் பிச்சை ஒரு கிரிக்கெட் ரசிகர் ஆவார்.

அவர் கூகுளில் சேருவதற்கு முன்பு தனது நண்பரை கூகுளில் பணிப்புரிவது குறித்து பேசினார்.

கூகுள் பொதுவான நிறுவனமாக ஆவதற்கு முன்பே பிச்சை கூகுளில் சேர்ந்துவிட்டார்.

அவர் எண்களை மனதில் நினைவு வைத்துக்கொள்வதில் வல்லவர். அவர் தனது சிறு வயதில் டயல் செய்த ஒவ்வொரு தொலைபேசி எண்ணையும் நினைவு வைத்திருந்தாராம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு சுந்தர் பிச்சை போட்டியிட்டார். ஆனால் இறுதியில் அந்த பதவி சத்யா நாதெல்லா என்பவருக்கு சென்றது.

தூத்துகுடி இளைஞர் Linkedin மூலம் லட்சக்கணக்கில் சம்பாரித்து சாதனை – Ganapathy Success Story

சில வருடங்களுக்கு முன்பு சுந்தர் பிச்சையை டிவிட்டர் வேலைக்கு அமர்த்த நினைத்ததாகவும் ஆனால் கூகுள் அவருக்கு அதிக சம்பளம் கொடுத்து தக்க வைத்து கொண்டதாகவும் ஒரு வதந்தி பரவியது.

டிசம்பர் 2019 இல், பிச்சை ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியானார்.

ஆகஸ்ட் 2017 இல், நிறுவனத்தின் பன்முகத்தன்மை கொள்கைகளை விமர்சித்து பத்து பக்க அறிக்கையை எழுதிய கூகுள் ஊழியரை பணிநீக்கம் செய்ததற்காக பிச்சை விளம்பரம் பெற்றார்.

விருது :

2022 ஆம் ஆண்டில், பிச்சை இந்திய அரசாங்கத்திடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றார், இது இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதாகும்.

Leave a Comment