fbpx

சத்ய நாடெல்லா வெற்றி பயணம் – Satya Nadella Success Story

ஐதராபாத்தில் பிறந்த சத்ய நாடெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆவார். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கணிமை இயக்குதளங்களையும், உருவாக்குநருக்கான கருவிகளையும், மேகக் கணிமை போன்றவற்றை உருவாக்கி நடத்தியுள்ளார்.

சத்ய நாடெல்லா அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

படிப்பு மற்றும் வேலை :

ஐதராபாத்தில் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் நாள் 1967 ஆம் ஆண்டில் பிறந்தார் . ஐதராபாத்தின் பேகம்பட் பகுதியில் உள்ள ஐதராபாத்து பொதுப் பள்ளியில் பயின்றார்.

விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் மில்வாக்கி வளாகத்தில், கணினி அறிவியல் துறையில் பட்டமேற்படிப்பு முடித்தார்.

இவர் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புப்
பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

முன்னதாக நாடெல்லா ஆரக்கிள் நிறுவனத்தின் அங்கமாக உள்ள சன் மைக்ரோசிஸ்டம்சில் வேலை பார்த்துள்ளார்.

இவர் 1992ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்.இவருக்கு மைக்ரோசாப்ட்டில் வேலை கிடைத்தபோதும் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்தில் பணிப்புரியும் போது படிப்பு முடியவில்லை.

இருந்தாலும் வேலை மற்றும் படிப்பை தொடர முடிவு செய்தார் இதனால், வெள்ளிக்கிழமை இரவுகளில் சிகோகாவுக்கு விமானத்தில் போவார் .

சனிக்கிழமை கல்லூரிப் படிப்பு. அதை முடித்து விட்டு மறுபடியும் ரெட்மான்ட் திரும்பி வந்து வேலையைத் தொடருவார். இப்படியே செய்து படிப்பை முடித்தார்.

சுந்தர் பிச்சை வாழ்க்கை வரலாறு

குடும்பம் மற்றும் சமூக சேவை :

சத்யா நாடெல்லா மற்றும் அவரது மனைவி அனுபமா நாடெல்லா ஆகிய இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஜைன் நாடெல்லா எனும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தனர்.

ஜைன் நாடெல்லா பிறக்கும் போதே ‘cerebral palsy’ என்ற பெருமூளை வாத நோயின் பாதிப்பிற்குள்ளானவர்.இதன் காரணமாகவே சத்யா நாடெல்லா 2014 இல் மைரோசாப்ட்டில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த சேவை வழங்குவதற்கான தயாரிப்புகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.


பின்னர் நாடெல்லா, அவரின் மகன் சிகிச்சைப் பெற்று வந்த அந்தக் குழந்தைகள் நல மருத்துவமனையுடனே இணைந்து மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டில் பல ஆராய்ச்சிகளையும் தயாரிப்புகளையும் உருவாக்கவேண்டும் என்று செயல்பட்டு வந்தார். அவர் மகன் 26 வயதில் காலம் ஆனார்.

இந்த நிலைக்கு வர காரணம் :

இவர் இந்த நிலைக்கு வர காரணம் படிப்பு மற்றும் இவர் சிந்தனை இந்த நிலையிலும் கூட அவர் ஆன்லைனில் ஏதாவது கோர்ஸ் இருக்கிறதா என்று பார்ப்பது வழக்கம். படிப்பதற்கு என்ன தகுதி வேண்டும்.ஆர்வம் மட்டுமே போதுமானது என்று கூறுவார்.

தற்போது நியூரோ சயின்ஸ் படிக்க முயற்சித்து வருகிறார். இவர் பணியாளர்களுக்கு சொல்லும் அறிவுரை எப்போதுமே ஒரு குடும்பம் போல குழுவினர் இணைந்து செயல் பட வேண்டும்.

அறிவு வேட்கை இருக்க வேண்டும். ஆர்வம் இருக்க வேண்டும். அது எல்லாமே என்னிடம் உள்ளது சொல்லுவார். எந்த செயலையும் ஒரே மாதிரியாக, எல்லோரும் செய்வது போல செய்யவும் பிடிக்காது.

வித்தியாசமாக செய்யப் பிடிக்கும். அப்படித்தான் செய்யவும் முயற்சிப்பேன் என்று சொல்லியுள்ளார். இவருக்கு கற்க ஆர்வம் அதிகம். கற்றுக் கொண்டே இருக்கப் பிடிக்கும். அதுவே அவரை உற்சாகப்படுத்தும்.

ஏதாவது ஒன்றைப் புதிதாக கற்றுக் கொண்டே இருப்பேன். அது சின்னதோ,
பெரியதோ.. கவலைப்பட மாட்டேன். சும்மா இருக்க எனக்குப் பிடிக்காது.

கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும் :

இவருக்கு கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். இளம் வயதில் நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ஒரு குழுவாக எப்படி மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது, வெற்றிகளைப்
பெறுவது என்பதை அதுதான் இவருக்கு கற்றுக் கொடுத்தது. அப்போது கற்றது இன்னும் அவருக்குள்ளேயே இருக்கிறது.

சொத்தின் நிகர மதிப்பு :

இவர் உடைய மாத வருமானம் 30 கோடி. இவர் உடைய மொத்த சொத்து மதிப்பு 5000 கோடிகளுக்கு மேல்.

விருது :

2022 ஆம் ஆண்டு பத்மபூசண் விருது வழங்கப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.