15 வயதில் 33 லட்சம் சம்பளத்தில் வேலை – Success Story of Vedanta Deogade

மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவன் வேதாந்த் தியோகேட், இணையதள வடிவமைப்பு தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட ‘இன்ஸ்டாகிராம்’ இணையதள வடிவமைப்புக்கான போட்டி குறித்த விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.

இரண்டு நாட்களுக்குள் 2,000க்கும் மேற்பட்ட ‘கம்ப்யூட்டர்’ கோடுகளை எழுதி போட்டியில் பங்கேற்ற வேதாந்த், அதில் வென்றார்.

இளம் தலைமுறையின் இன்று இணையதளம், சமுகவலைத்தளம், டெக்னாலஜி பயன்படுத்துவதால் அதிகம் சீரழிகின்றனர் என குறைக்கூறுவது உண்டு.

உண்மையில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் லாபம் நஷ்டம் இருப்பது போல இணையதளம், சமுகவலைத்தளத்தை சரியான முறையில் பயன்படுத்தி 15
வயதான வேதாந்த் டியோகேட் என்ற சிறுவன் பல கோடி இளைஞர்களை வியக்கவைத்துள்ளார்.

வேதாந்த் தியோகேட் :

15 வயது சிறுவன் வேதாந்த் தியோகேட் நாக்பூரைச் சேர்ந்தவர். தந்தை ராஜேஷ் மற்றும் தாய் அஷ்வினி, நாக்பூரில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணிபுரிகிறார்கள்.

இவர் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக அஸ்வினியின் லேப்டாப்பை லாக்கரில் வைத்திருப்பார்களாம்.

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெற்றி பயணம்

திறமையை பார்த்து மிரண்டு போன அமெரிக்கா :

வேதாந்த் டியோகேட் வழக்கம் போல் தனது தாயின் பழைய லேப்டாப்பில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை ஸ்க்ரோலிங் செய்து கொண்டிருந்தபோது வெப்சைட் டெவலப்மென்ட் போட்டிக்கான இணைப்பையும் விளம்பரத்தையும் பாத்துள்ளார்.

அது தான் அவருடைய வாழ்க்கையின் திருப்பு முனையாக இருக்கும் என்ற அவர் நினைத்திருக்க மாட்டார் . இந்த போட்டியில் கலந்து கொள்வது என முடிவு செய்தார். வேதாந்த், animeeditor.com என்ற இணையதளத்தை உருவாக்கினார்.

இது வலைப்பதிவுகள், சாட்பாக்ஸ் மற்றும் வீடியோ பார்க்கும் தளத்தின் கூடுதல் அம்சங்களுடன் YouTube இலிருந்து வீடியோக்களை பதிவேற்றவும் பயனர்களை அனுமதிக்கும் வகையில் டிசைன் செய்தார்.


வெறும் இரண்டே நாட்களில் இதற்காக 2000க்கும் மேற்பட்ட கோடிங்குகளை வேதாந்த் எழுதி, கோடிங் போட்டியில் வெற்றி கண்டார்.இதில் முக்கியமான விஷயம் போட்டியில் வெற்றி பெற்று அவரது கனவு பணியை அவருக்கு கிடைத்தது தான்.

மிரண்டு போன அமெரிக்கா :

வேதாந்தின் திறமையை பார்த்து மிரண்டு போன, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ஒரு விளம்பர நிறுவனம் அவருக்கு ஆண்டுக்கு ரூ.33 லட்சம் சம்பளத்துடன் பணி வழங்க முன்வந்தது.

வேதாந்த் மனிதவள மேம்பாட்டுக் குழுவில் சேரவும், பணியை ஒதுக்கவும், குறியீட்டாளர்களை நிர்வகிக்கவும் நிறுவனம் விரும்பியது.

துரதிர்ஷ்டவசமாக 15 வயது :

துரதிர்ஷ்டவசமாக, வேதாந்திற்கு வெறும் 15 வயது தான் என்று நிறுவனம் கண்டறிந்த பிறகு, அந்தச் வேலையை திரும்பப் பெறப்பட்டது.


நியூ ஜெர்சி நிறுவனம் இருப்பினும், இந்த நியூ ஜெர்சி நிறுவனம் வேதாந்திடம் ஏமாற்றமடைய வேண்டாம் என்றும், அவர் தனது பள்ளி கல்வியை முடித்த பிறகு நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

வேதாந்த் பெற்றோர்கள் :

வேதாந்த் எப்போதும் லேப்டாப்பில் எதையாவது செய்து கொண்டிருப்பது எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் கவனமாக இருந்தோம்.

அவர் போட்டிக்குத் தயாராகி வந்தது எங்களுக்கு தெரியாது. இதுவரை லேப்டாப் வாங்கிக் கொடுக்காத வேதாந்த் பெற்றோர்கள் வேலை வாய்ப்பைப் பற்றி தெரிய வந்ததை அடுத்து, அவருக்கு ஒரு புதிய லேப்டாப்பை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

Leave a Comment