Subhas Chandra Bose History in Tamil – நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு

இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி என்று அழைக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திர போராட்டத்தில் மாபெரும் புரட்சியை செய்தார்.

இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய ஒரே வழி போரினால் தான் முடியும் என்று கர்ஜனையுடன் சொல்லி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர் தான் நம் நேதாஜி. ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒரிசா மாநிலத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக ஜனவரி மாதம் 23 ஆம் நாள் 1897 பிறந்தார். இவர் தந்தை வக்கீலாக இருந்தார். இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர்.

திப்பு சுல்தான் வாழ்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆரம்பக் கல்வியை கட்டாக்கில் தொடங்கினார். பின்னர், 1913 ஆம் ஆண்டு கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் உயர்நிலை கல்வியை முடித்தார். சிறுவயதிலிருந்தே சுவாமி விவேகானந்தர் கொள்கைகளை படித்தும் வந்தார்.

1915 ஆம் ஆண்டு கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில் ஆசிரியர் ஒருவர் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொல்லியுள்ளார், இதனால் நேதாஜி அவரை கண்டித்து உள்ளார். பின் என்ன கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். வேறு கல்லுரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர். அவர் பெற்றோர்களுக்கு ஐ.சி.எஸ் தேர்வு லண்டனில் படிக்க வைக்க ஆசை ஆகையால் லண்டன் சென்றார்.

படிப்பில் வல்லமை கொண்ட இவர் சிறப்பாக படித்து தேர்ச்சிப்பெற்றார். பின் அங்கேயே வேலை செய்யவும் ஆரம்பித்தார். ஆனால் 1919 ஆம் ஆண்டு இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் ஆங்கில அரசு கொன்று குவித்தது.

இந்த அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தான் சுபாஷ் சந்திர போஸிற்கு அவர்கள் மீது கோவத்தை உண்டாக்கியது. அதனால் 1921 ஆம் ஆண்டு லண்டனில் அவருடைய பணியை ராஜினாமா செய்து இந்தியா திரும்பி வரவும் செய்தது.

இல்லற வாழ்க்கை :

நேதாஜி ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரை காதலித்து டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார்.

சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கு :

லண்டனில் நேதாஜி அவரின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்தார் . வந்தவுடன் தேசிய காங்கிரஸ் கட்சியில்சேர்ந்தார். பின் பல போரட்டத்தில் ஈடுபடவும் செய்தார். பின் 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரை பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவிற்கு அழைத்தது. இதனால் காங்கிரஸ் கட்சி நேதாஜி தலைமையில் தொண்டர்களை திரட்டி போராட்டங்கள் நடத்தினார்கள்.

இதனால் ஆங்கிளையர்களிடம் சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்டால் சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ், நேருவும் கூறினார்கள். இதை நேதாஜி ஆதரித்தார். இதை காந்தி எதிர்த்தார். இதனால் காந்திக்கும் நேருவும் பிரச்சனை ஆகி. கட்சி பிளவு பெற்றது.

பின் 1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநாடு நடத்தியது அதில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை தவறு என நேதாஜி எதிர்த்தார். இதனால் காந்திக்கும், நேதாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த வேறுபாடுதான் இன்றும் அவர்களை பற்றி நாம் பேசும் போது நாம் நேதாஜியை ஆதரிக்கிறோம்.

இந்தியாவில் காந்தி இருக்கும் வரை மக்களுக்கு விரைவில் விடுதலை கிடைக்காது என அறிந்த நேதாஜி. விடுதலைக்கு ஆதரவு தேடி பல நாடுகள் சென்றார்.

பின் சிறிது ஆண்டுக்கு பிறகு 1938 ஆம் ஆண்டு காங்கிரசின் தலைவராக நேதாஜி தேர்தெடுக்கப்பட்டார். நேதாஜியின் கொள்கை ஒன்று தான் நான் தீவிரவாதி தான்! எல்லாம் கிடைக்கவேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை. இதை கேட்ட மக்கள் பலரும் நேதாஜியை ஆதரித்தனர்.

பின் 1939 ஆம் ஆண்டு,காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அதை முறியடிக்க அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்.

ஆனால், இவர்கள் மறுத்தனர் காந்தியின் பொறாமையால் பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். ஆனால் பட்டாபி சீத்தாராமன் தேர்தலில் தோல்வி கண்டார். பின் தான் காந்தி உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால் தான் நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார். காந்தி என்றுமே நேதாஜியை நேசிக்கவில்லை.

ஆங்கில அரசை எதிர்த்து 2 ஆம் உலகப்போர் நடந்துகொண்டிருந்த காலம். அப்போது அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

அந்த தருணத்தை பயன்படுத்தி நேதாஜி சிறையில் மாறுவேடம் அணிந்து தப்பினார். அவர் தப்பி ரஷ்யாவை அடைந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வந்தது. பின் , அவர், இந்திய சுதந்திரத்தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடினார்.

நேதாஜி ராணுவம் :

1941 ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கியதோடு தொடங்கினார். பின் பிரபல நாளிதழில் இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் வெளியிட்டார். அப்போது பல நாடுகள் நமக்கு ஆதரவு அளித்தது ஆகையால் வெளிநாட்டு மக்களின் உதவியுடன் இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்தார்.

1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் மாநாட்டில் இந்தியாவை விடுதலை செய்ய கோரி மொழக்கம் இட்டார். பின் பல வெளிநாட்டு நண்பர்களின் ஆதரவுடன் இந்திய தேசிய ராணுவப்படையை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்த்தார் சண்டையிட்டார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது.

ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு அன்று நேதாஜி அலை ஒலிமூலம் வீரர்களுக்கு இது தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைய வேண்டாம் என்று நம்பிக்கை அளித்தார். பின் இரண்டு வருடம் கழித்து அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.நம்மக்கான சரித்தர நாள்.

சர்ச்சை மரணம் :

நேதாஜி ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு விமானத்தில் பயணம் செய்யும் போது. விமானம் வெடித்து இறந்ததாக ஜப்பானிய வானொலி அறிவித்தது. ஆனால் பலரும் இதை நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.

எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன். நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றளவும் நீங்க்கா இடம் பெற்றிருக்கிறார்.

Leave a Comment