Captain Vijayakanth History in Tamil – புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் தமிழ் திரைப்படத்துறையில் புகழ்ப்பெற்ற நடிகர், அரசியில் தலைவர் என பல திறமைகள் கொண்டவர். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியை தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இவர் நடித்த வைதேகி காத்திருந்தால், ஊமைவிழிகள், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், உளவுத்துறை, ரமணா போன்ற பல படங்கள் இன்றும் மக்கள் மனதில் உள்ளது. 2006 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று, தமிழக சட்டப் பேரவை உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

ஒரு கிராமத்தில் இருந்து நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பின் பல போராட்டத்தை தாண்டி தமிழ் நாட்டு அரசியலில் கட்சியை உருவாக்கி, பல அரசியல் தலைவர்களை எதிர்த்து குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றிக்கண்ட விஜயகாந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் நாள் துரை மாவட்டதில் கே.என். அழகர்சிவாமி நாயிடுக்கும் மற்றும் ஆண்டாள் என்பவருக்கும் மகனாக பிறந்தார் விஜயகாந்த் இயற்பெயர் விஜயராஜ்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

தன்னுடைய பள்ளிப்படிப்பை மதுரையில் உள்ள நாடார் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதில் இவருக்கு சினிமா பார்க்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது, இதனால் படிப்பில் ஆர்வம் ஏற்படவில்லை. ஆகையால் தன்னுடைய படிப்பை, பத்தாம் வகுப்போடு நிறுத்திக்கொண்டு அப்பா அரிசி ஆலையை கவனித்து கொண்டார்.

இல்லற வாழ்க்கை :

விஜயகாந்த்க பிரேமலதா என்பவரைத் 1990 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு விஜய் பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் என்ற இரு மகன்கள் பிறந்தனர்.

திரைப்படத்துறை மற்றும் கேப்டன் எனப் பெயர்வரக் காரணம் :

சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னைக்கு வந்த அவர். 1978 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். 1981 ஆம் ஆண்டு எஸ். ஏ. சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார்.பின்பு அவர் நடித்த அனைத்து படங்களுமே வெற்றி தான்.

குறுகிய காலத்துக்குள் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முடித்த அவர், 100வது படமாக 1991 ஆம் ஆண்டு கேப்டன் பிரபாகரன் என்ற திரைபடத்தில் நடித்தார்.

இத்திரைப்படம் அவருக்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியையும் பெற்றது. இந்த படம் அவரை மக்களாலும், திரையுலகத்தினராலும் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை :

தமிழ் சினிமாவில் 150-க்கும் மேல் திரைப்படங்களில் நடித்த இவரை கேப்டன் விஜயகாந்த் என்று அழைத்தனர். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்தார் பின் மக்களின் மீது உள்ள அன்பால் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மதுரையில் தேமுதிக கட்சியை தொடங்கி.

இவரை மக்கள் மிகவும் ஆதரித்தனர். 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இவரின் தே.மு.தி.க. கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டு நல்ல வாக்கு எண்ணிக்கைகளை பெற்று தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு அடுத்து கட்சியாக உருவாகியது.

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் தன்னை எதிர்த்து
போட்டியிட்ட நபரை விட 13,000 வாக்குகள் அதிகம் பெற்று. சட்டமன்ற உறுப்பினராக தேர்வு ஆகினார்.

பிறகு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விஜயகாந்த் அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்து. யாரும் எதிர் பாக்காத அளவுக்கு 41 இடங்களில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றிப்பெற்று எதிர்கட்சியாக உருவாகினார். தி.மு.க கட்சியை விட இவர்கள் பெற்ற வாக்குகள் மிகவும் அதிகம்.

சில பிரச்சனையால் அ.தி.மு.க-வுடன் கூட்டணியை முறித்துகொண்ட விஜயகாந்த் அவர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இந்த காலகட்டத்தில் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காட்சி பணிகளை அவர் குடும்பம் பார்த்து கொள்கிறது.

Leave a Comment