Sri Devi History in Tamil – ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு

ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்களுடன் ஸ்ரீதேவி நடித்து உள்ளார்.

1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின்
மூலம் பிரபலமான இவர், இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அனைவருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டதிலுள்ள சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டில் கடந்த 1963ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி பிறந்தார். இவரது தந்தை அய்யப்பன், வழக்கறிஞர் தாயார் ராஜேஸ்வரி.

மணிவண்ணன் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

ஸ்ரீதேவி தனது தந்தையும்,தாயையும் அவருடைய இளம் பருவத்திலேயே இழந்ததால், சமுதாயத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய தாயிற்று.1980களில் மிதுன் சக்ரவர்த்தியுடன் ஜாக் உதா இன்சான் படத்தில் ஸ்ரீதேவி நடித்தார்.

அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது. இதை மிதுன் சக்ரவர்த்தி
ஏற்றுக்கொண்டபோதும் ஸ்ரீதேவி ஏற்கவில்லை. இந்த சர்ச்சையடுத்து இருவரும் பிரிந்தனர். பின்னர், ஜூன் 2, 1996 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கும், திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது.

ஸ்ரீதேவிக்கு, ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவருடைய திருமணத்திற்கு பிறகு, அவர் கணவனுடன் பிறந்த அனில்
கபூருடன் நிறைய படங்கள் நடித்துள்ளார்.

திரைப்பட வாழ்க்கை :

தமிழ் நாட்டில் பிறந்து இந்தியா திரையுலகை ஆண்ட நடிகை ஸ்ரீதேவி. 1967-ல் கந்தன் கருணை என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் முதன் முதலில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976ல் வெளிவந்த ‘மூன்று முடிச்சு’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நடித்த இவர். பின்னர் தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

இந்தி திரை உலகில் ஸ்ரீதேவி:

ஸ்ரீதேவி அவர்கள் 1978 ஆம் ஆண்டு இந்தி திரைப்படங்களில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் இந்தி திரைப்படம் எதிர் பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. பின்னர், இவருடைய இரண்டாவது படமான “ஹிம்மத்வாலா” ஒரு பெரும் வெற்றியை தேடித்தந்ததோடு மட்டுமல்லாமல், இந்தி திரையுலகில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.

1980ஆம் ஆண்டு காலகட்டங்களில், இவர் ஒரு சிறந்த நடிகையென்று அனைவராலும் பாராட்டப்பெற்றார்.கோலிவுட்டில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் இவரும் ஒருவரென்ற அந்தஸ்தையும் தந்தது.


தமிழில் வெளியான மூன்றாம் பிறை இந்தியில் சத்மா பெயரில் ரீமேக் ஆனது. இது ஸ்ரீதேவியின் நடிப்பு பாலிவுட்டினரை மிகவும் கவர்ந்தது. அங்குள்ள பத்திரிகைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என பாராட்டியிருந்தது.

திருமண வாழ்க்கைக்குப் பிறகு:

போனி கபூரை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவைவிட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, ஆறு ஆண்டுகள் கழித்து ஒன்றிரண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். பின்னர் 14 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலீஷ் விங்கிலிஷ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைப்படத் துறையில் கால்பதித்தார்.

தமிழ் திரைப்பட வெற்றி :

ரஜினியுடன் நடித்த காயத்ரி, ரஜினி கமலுடன் இணைந்து நடித்த 16 வயதினிலே, கமலுடன் நடித்த மூன்றாம் பிறை, சிவகுமாருடன் நடித்த கவிக்குயில் போன்ற படங்கள் அவரை புகழின் முன்னணி இடத்துக்கு உயர்த்தியது.

1981ம் ஆண்டு கமலுடன் நடித்த மீண்டும் கோகிலா படம் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்று தந்தது. 1982ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் கமலுடன் இணைந்து மனநிலை பாதித்தவர்போல் நடித்த மூன்றாம் பிறை படத்துக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.

இறப்பு :

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியானது. பின்னர் வெளியான பிணக்கூற்று அறிக்கை, அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், அவரது குருதியில் மதுபானம் இருந்ததாகவும் கூறியது.

உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அவரது உடலானது பெப்ரவரி 27, 2018 அன்று தனி
விமானம் மூலம் துபாயிலிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு இவரது உடலை பெப்ரவரி 28, 2018 அன்று மும்பையில் உள்ள வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

விருதுகள் :

2013 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.

பிலிம்பேர் விருது ‘மீண்டும் கோகிலா’ என்ற தமிழ் படத்திற்காக வழங்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“சால்பாஸ்” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான ‘பிலிம்பேர் விருது’,“லம்ஹே” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

‘பிலிம்பேர் விருது’,“க்ஷன க்ஷனம்” என்ற தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது.

நந்தி விருது தெலுங்கு படத்திற்காக வழங்கப்பட்டது.

MAMI விருது இந்தி சினிமாவில் வழங்கப்பட்டது.

டொராண்டோ’ சிறந்த நடிகைக்கான விருதினை “தேவராகம்” படத்திற்காக வழங்கியது.

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

ஸ்ரீதேவியின் முக்கிய படைப்புகள் :

தமிழ் :

நம் நாடு, குமார சம்பவம், மூன்று முடிச்சு, காயத்ரி, கவிக்குயில், மனிதரில் நிறங்களா, முடிசூடா மன்னன், பைலட் பிரேம்நாத், மூன்றாம் பிறை.

மலையாளம் :

குமார சம்பவம், ஸ்வப்னங்கள், பூம்பட்டா, தீர்த யாத்ரா,ஆசீர்வாதம், அந்தர்தனம், வேளாம்பல், அவளுடே ராவுகள், அம்மே நாராயணா, தேவராகம்.

இந்தி (பாலிவுட்) :

கலாக்கார், சத்மா, இன்கிலாப், நயா, மக்சத், தோபா, பலிதான், மாஸ்டர்ஜி, சர்ஃபரோஷ், நகினா, ஜான்பாஸ், கர்ம, சுஹாகன், ஔலாத், மிஸ்டர், சால்பாஸ், சாந்தினி, பந்ஜாரன்.

Leave a Comment