Rani of Jhansi History in Tamil – ராணி லக்ஷ்மி பாய் வாழ்க்கை வரலாறு

ஜான்சி ராணி என்று பிரபலமாக அறியப்பட்ட ராணி லட்சுமிபாய், 1857 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரத்திற்காக நடந்த முதல் போரில் கலந்து கொண்ட முன்னணி வீரர்களில் ஒருவராவார்.

குறுகிய காலம் மட்டுமே உயிர் வாழ்ந்தாலும் அன்பு வீரம் ரௌத்திரம் என சிறப்புமிக்க குணங்களுடன் இந்தியா கண்ட வீர மங்கை ராணி லட்சுமிபாய் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

ராணி லக்ஷ்மி பாய் 1828 ஆம் ஆண்டு நவம்பர் 19 இல் வாரணாசியில் காசியில் மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதியினருக்குப் பிறந்தவர் சான்சி இராணி.

ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

இவருக்கு நான்கு வயதாகும் போது தாயார் எதிர்பாராமல் இறந்து விட்டார். அதன்பின் தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். படிப்பு⸴ குதிரையேற்றம்⸴ வாள்ப்பயிற்சி போன்ற பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார்.

இவர் ஆண்மகனுக்கு நிகராக வீரத்துடன் இருந்த பெண்ணாவார். வளரவளர மணிகர்ணிகாவின் எண்ணங்களும் செயல்களும் ஏனைய குழந்தைகளை விடப் பெரிதும் மாறுபட்டிருந்தது. இதனால் தன்னை மேலும் மெருகேற்றிக் கொள்ள தந்தையின் உறவினர் மகனான நானா சாஹிப்⸴ தாந்தியாதோப் போன்ற
இளைஞர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டார்.

அடிமையாவதை விட போரிட்டு பார்க்கலாம் என்ற இந்த மூவரின் கூட்டணி பிற்காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து களமாடிய வீரர்களாக அறியப்பட்டனர்.

இல்லற வாழ்க்கை :

இவரது தந்தை சான்சியை ஆண்ட ராஜா கங்காதர் ராவ் நெவல்கர் என்பவருக்கு 1842இல் மணிகர்ணிகாவைத் திருமணம் செய்து வைத்தார். பின் சான்சியின் ராணியாகவும் பதவியேற்றார்.

1851இல் அவர்களுக்குப் பிறந்த மகனான தாமோதர் ராவ் நான்கு மாதங்களில் இறந்து போனான். பின் ஆனந்த் ராவைத் தத்தெடுத்தனர்.

பின்னர், அக்குழந்தைக்கு தாமோதர் ராவ் எனப் பெயர் சூட்டப்பட்டது. ஆனாலும் தனது மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளாத ராஜா கங்காதரராவ் நவம்பர் 21, 1853இல் உடல்நலமிழந்து இறந்தார்.

ஆங்கிலேயர்கள் மறுப்பு :

தத்தெடுத்த குழந்தை மோதர் ராவ் அவர்களின் சட்ட வாரிசாக இருந்தது. அவரை ஆட்சியில் அமர்த்த எண்ணினார் சான்சி ராணி.ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த குழந்தையை சட்ட வாரிசாக ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், ஆங்கிலேயர்கள் சான்சி நாட்டைத் தமது ஆட்சிக்கு எடுத்து கொள்ள முடிவெடுத்தனர்.

ஆங்கிலேய அதிகாரிகள், லட்சுமிபாய் அவர்களின் அரசு நகைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும், ராணி லட்சுமிபாய் அவர்களை ஜான்சி கோட்டையை விட்டு செல்லுமாறு ஒரு ஆணை நிறைவேற்றப்பட்டதால்.


அந்நேரத்திலும், லட்சுமிபாய் அவர்கள், ஜான்சி அரசைப் பாதுகாப்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

போர் :

ஜான்சி ராணி அவர்கள் தனது நிலையை வலுப்படுத்த தொடங்கினார். அவர் ஒரு தன்னார்வ இராணுவத்தை கூட்டி, அதில் பெண்களுக்கும் இராணுவ பயிற்சி அளித்தார்.

அவரது படைகளில் குலாம் கவுஸ் கான், தோஸ்த் கான், குடா பக்ஷ், லாலா பாவ்பக்ஷி, மோதி பாய், சுந்தர்-முண்டர், காஷி பாய், திவான் ரகுநாத் சிங் மற்றும் திவான் ஜவஹர் சிங் போன்ற வீரர்களும் இணைந்தனர்.

அப்போது ஆங்கிலேயர் நடந்த கிளர்ச்சியில், ராணி லட்சுமிபாய், அவரது தளபதிகளுடன் இணைந்து போர் புரிந்தார்.

மே 10, 1857 அன்று மீரட்டில் ஏற்பட்ட சிப்பாய் போரில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல பிரிட்டிஷ் பொதுமக்கள் இந்திய வீரர்களால் கொல்லப்பட்டனர்.

இதனால், இந்த போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர பிரிட்டிஷ் அரசு தனது கவனத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், இரண்டே வாரங்களில் ஆங்கிலேய அரசு ஜான்சி நகரத்தைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடியது.

எனினும், அவர் ஒரு ஆண்மகன் வேடம் பூண்டிருந்ததால், அவரை யாரும் அடையாளம் காணவில்லை. தனது வளர்ப்பு மகனை மடியில் ஏந்தியபடியே
தப்பித்தார்.

மரணம் :

இராணி இலட்சுமிபாய், தாமோதர் ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று தாந்தியா தோபேயின் படையுடனும் ராவ் சாஹிப் பேஷ்வாவின் படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து கொண்டார்.

பின் வெள்ளையரின் படை அவர்களை கைப்பற்ற முகாமிட்டது. 1858 ஆம் ஆண்டு சூன் 18 ஆம் தேதி, கோட்டாகி சேராய் என்ற இடத்தில்
வெள்ளையரை எதிர்த்துச் சான்சி ராணி போரிட்டார்.இப்போரின்போது படுகாயமடைந்து சான்சி ராணி, அத்தினத்திலேயே வீரமரணம் அடைந்தார்.

காலவரிசை :

1828 ஆம் ஆண்டு ராணி லட்சுமிபாய் அவர்கள் பிறந்தார்.

1842 ஆம் ஆண்டு ஜான்சியின் மகாராஜாவை மணமுடித்தார்.

1851 ஆம் ஆண்டு அவரது மகன் பிறந்து, பின்பு நான்கு மாதங்களிலேயே காலமானான்.

1853 ஆம் ஆண்டு ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார்.

1853 ஆம் ஆண்டு கணவர் மரணமடைந்தார்.

1857 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள், அவரது அண்டை நாடுகளைப் படையெடுத்தார்.

18 ஜூன் 1858 ஆம் ஆண்டு ஜான்சி ராணி அவர்கள் போர்க்களத்திலேயே இறந்தார்.

Leave a Comment