Manivannan History in Tamil – மணிவண்ணன் வாழ்க்கை வரலாறு

இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்து பல வெற்றிப் படங்களை இயக்கி, ஒரு நடிகராகவும் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், மணிவண்ணன்.

இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன. இதில் சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.


இவர் எடுத்த அணைத்து திரைப்படங்களுமே வெற்றி படங்கள் தான். இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன்அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

மணிவண்ணன் , கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் என்ற கிராமத்தில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதி, ஆர். எஸ். மணியம் மற்றும் மரகதம் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் ‘மணிவண்ணன் ராஜகோபால்’. அவருக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர்.

சிவ் நாடார் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் :

சூலூர் பஞ்சாயத்துத் தலைவராக மணிவண்ணன் அவர்களது தாயார் இருந்தார் மற்றும் அவரது தந்தை ஒரு அரிசி வியாபாரியாகவும் மற்றும் அரசியல்வாதியாகவும் இருந்தனர். மணிவண்ணன் அவர்களுக்கு படிப்பில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. இருந்தாலுல் சூலூர் அரசு சிறுவர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார்.

பின்னர் அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்தார். பின் சத்யராஜ் நட்பு ஏற்ப்பட்டது. அவர்கள். கல்லூரியில் படிக்கும் போது, பல மேடை நாடகங்களில் நடித்து உள்ளனர்.

திரையுலகப் பிரவேசம் :

கிழக்கே போகும் ரயில் (1978) திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், திரைப்பட தயாரிப்பாளருக்கு ரசிகர் கடிதங்கள் எழுதினார். பாரதிராஜாவுக்கு கடிதமும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு ஓடியது. பின் பாரதிராஜா இவரை ஒரு உதவியாளராக ஏற்றுக் கொண்டார்.

1979 ஆம் ஆண்டு பி. எஸ். நிவாஸ் இயக்கத்தில் கல்லுக்குள் ஈரம்
திரைப்படத்தில் பாரதிராஜா நடித்து கொண்டிருக்கும் போது பாரதிராஜாவுடன் இணைந்தார்.

‘நிழல்கள்’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’,
‘ஆகாய கங்கை’, ‘லாட்டரி டிக்கெட்’, ‘நேசம்’ போன்ற படங்களுக்குக் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்திருக்கிறார். ‘புதிய வார்ப்புகள்’, ‘கொத்த ஜீவிதாலு’ (தெலுங்கு), ‘கிழக்கே போகும் ரயில்’ (தெலுங்கு), ‘ரெட் ரோஸ்’ (ஹிந்தி) மற்றும் ‘லவ்வர்ஸ்’ (இந்தி) போன்ற படங்களில் பாரதிராஜாவின் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர், பாரதிராஜாவின் ‘கொடிப் பறக்குது’ என்ற படத்தில் வில்லனாகத் திரையில் அறிமுகமானார்.

திரையுலக வாழ்க்கை :

1982ல் வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற படம், இயக்கி வசனம் எழுதி இயக்கியிருந்தார். அவருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்ததற்கு இளையராஜாதான் முக்கிய காரணம்.

அடுத்த ஆண்டில், 1983 ’ஜோதி’, ’வீட்ல ராமன் வெளியில கிருஷ்ணன்’, ’இளமைக் காலங்கள்’ என்னும் மூன்று படங்களை இயக்கினார்; 1984-ல் அவர் இயக்கிய ஆறு படங்களில் ’நூறாவது நாள்’, ’இங்கேயும் ஒரு கங்கை’ ஆகியவை முக்கியமானவை.

மணிவண்ணன் தமிழில் இயக்கிய 50 திரைப்படங்களில் 34 திரைப்படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், இவர் மக்களிடையே நடிப்புத் திறனுக்காக மிகவும் பிரபலமானவர்.

நடிகராக மணிவண்ணன் :

பாரதிராஜாவின் ‘கொடி பறக்குது’ என்ற படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். அக்கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால், தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்கிய ‘அமைதிப்படை’ படத்தில் நடித்த கதாபாத்திரம் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றதால், அவர் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம் போன்றோருடன் இணைந்து நடித்துள்ளார்.

இல்லற வாழ்க்கை :

மணிவண்ணன் செங்கமலம் என்பவரை திருமணம் செய்தார். அவர்கள் இருவருக்கும் ஜோதி என்ற மகளும், ரகுவண்ணன் என்ற மகனும் உள்ளனர்.

அரசியல் தாக்கம் :

சிறு அகவையிலிருந்தே அரசியல் பின்னணியில் வளர்ந்த மணிவண்ணன் நக்சலைட்டுகளின் தலைவராக இருந்த சாரு மஜும்தாரைச் சந்தித்தவர். நாத்திகம் மற்றும் திராவிடக் கொள்கையில் பிடிப்புள்ள மணிவண்ணன் தனியீழப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தவர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலும் நாம் தமிழர்
கட்சியிலும் பணியாற்றியவர்.

இறப்பு :

இயக்குனராகத் தனது 50 வது படத்தை இயக்கி, அப்படத்தை வெளியிட்ட மணிவண்ணன் அவர்கள், 15 ஜூன் 2013 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். மணிவண்ணன் ஏற்கனவே இதய அறுவைச் சிகிச்சையும், முதுகில் தண்டுவட அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டிருந்தார். அதனாலேயே சில ஆண்டுகள் படங்கள் இயக்காமல் இருந்தார்.

Leave a Comment