fbpx

சில ஆன்மீக பரிகார முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்…!!

அரச மரத்தை சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்குள் 108 தடவை சுற்றி வந்து பின்பு தூப, தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் கையில் பண புழக்கம் அதிகரிக்கும். இதனை ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.

உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகை பூ, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு அதிகமாகும்.

உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள். மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் அல்லது குழந்தை வாய் பேசாமல் போகவும் வாய்ப்புண்டு.

சிறிது கல் உப்பை ஒரு கின்னத்தில் போட்டு கழிவறையில் வைத்தால் கெட்ட சக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும்.

வீட்டு வாசற்படி அருகே அல்லது வீட்டின் முன் புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும். தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம். இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

கோவில் கொடி, கொடிமரம், கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது. தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள். இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *