fbpx

Mohanlal History in Tamil – மோகன்லால் வாழ்க்கை வரலாறு

மோகன்லால் ஒரு புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். நான்கு முறை தேசிய திரைப்பட விருது.


ஒன்பதுக்கும் மேல் “பிலிம்பேர்” விருதையும், பலமுறை “கேரள மாநில அரசு விருதையும்”, மற்றும் இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருதான “பத்ம ஸ்ரீ” விருதையும் பெற்றுள்ளார்.

ஒரு தனிப்பட்ட நடுவர் குழு விருதும் ஓர் சிறந்த படத் தயாரிப்பாளர் விருதையும் பெற்றவர். 2009 ஆம் ஆண்டில், இந்தியத் தரைப்படை இவரை கௌரவிக்கும் வகையில் லெப்டினன்ட் காலோனல் பதவியை வழங்கியது, இவ்விருதை பெரும் முதல் இந்திய நடிகர் இவரே.

நடிகர் மோகன்லாலின் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

மோகன்லால் அவர்கள், 1960 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் இந்தியாவின் கேரளத்திலுள்ள பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூர் என்ற இடத்தில், வழக்கறிஞரும் அரசு ஊழியருமான விஸ்வநாதன் நாயர் – சாந்தகுமாரி தம்பதியர்க்கு மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் மோகன்லால் விஸ்வநாதன் நாயர்.

ராணி லக்ஷ்மி பாய் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

பிறகு இவர்களுடைய குடும்பம் திருவனந்தபுரத்திலுள்ள முடவன்முகள் என்ற இடத்தில் அமைந்திருக்கும் அவருடைய தாயாரின் வீட்டிற்கு இடம் பெயர்ந்தது. முடவன்முகளில் ‘LP’ பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார், அதற்குப்பின் திருவனந்தபுரத்தில் உள்ள மாடல் பள்ளிக்கூடத்தில், தனது படிப்பைத் தொடர்ந்தார்.

பள்ளிக்கூட படிப்பில் சராசரி மாணவனாகத்தான் திகழ்ந்தார், அதே சமயம் கலை உலகம் அவர் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது, பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார்.

பொதுவாக பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களே சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் ஆறாவது வகுப்பு மாணவரான மோகன்லால் பள்ளிக்கூடத்தில் சிறந்த நடிகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பிறகு “மகாத்மா காந்தி கல்லூரியில்” தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.

திரைப்படத் துறை :

மோகன்லால் முதன் முதலில் “திறநோட்டம்” (1978) என்ற படத்தில் நடித்தார். தணிக்கைக் குழுவினருடன் (சென்சார் போர்ட்) ஏற்பட்ட தகராறுகள் காரணமாக இப்படம் ஓரிடத்தில் மட்டும் வெளியானது . 1980 ஆம் ஆண்டில் இவர் ”மஞ்சில் விரிஞ்ச பூக்கள்” என்ற மாபெரும் வெற்றிபடத்தின் மூலம் ஒரு முரண்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து சாதனைப் படைத்தார்.


தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இவர் படிப்படியாக தனக்கு முக்கியத்துவம் நிறைந்த பாத்திரங்களை ஏற்று நடித்தார். 1983 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 25 க்கும் மேலான திரைப்படங்களில் நடித்தார், 1986ல் வெளிவந்த “டி.பி பாலகோபாலன் எம். ஏ” என்ற திரைப்படம் இவருக்கு “கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை” பெற்றுத் தந்தது.


‘ராஜாவின்டே மகன்’, ‘சன்மனசுள்ளவர்களுக்கு சமாதானம்’, ‘காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட்’, ‘நாடோடிக்கட்டு’, ‘வரவேல்பு’, ‘சித்ரம்’, ‘தூவானத்தும்பிகள்’,
‘தாழ்வாரம்’ போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கி மலையாளத் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம்வந்தார் என கூறலாம்.

1986 ஆம் ஆண்டு முதல் 1995 வரையிலான கால கட்டம் பரவலாக மலையாளத் திரைப்பட உலகின் பொன்னான காலகட்டமாகக் கருதப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்கள் விரிவான திரைக்கதைகள், தெளிவான விவரணம் மற்றும் அருமையான நோக்கங்கள் நிறைந்த படங்களாக சிறப்பித்தன.

கலை ரீதியிலான படங்களுக்கும், வணிக ரீதியில் எடுத்த படங்களுக்கும் இடையிலேயான இடைவெளியை மிகவும் குறுக்கியது. 1999 ஆம் ஆண்டு, ஷஜ்ஜி என் கருன் இயக்கத்தில் வெளிவந்த “வானபிரஸ்தம்” திரைப்படம் சிறந்த
நடிகருக்கான மற்றுமொரு “தேசிய விருதை” இவருக்கு பெற்றுத்தந்தது.

பிறமொழி திரைப்படங்கள் :

மோகன்லால் அவர்கள், மலையாள மொழி திரைப்படங்களில் மட்டுமல்லாமல், தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “இருவர்” என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

பின்னர், தன்னுடைய முதல் பாலிவுட் படமான “கம்பெனியில்” நடித்து, இந்தி மொழியில் முத்திரைப் பதித்தார். பின் நிறைய மொழி படங்களில் நடிக்க தொடங்கினார்.

திருமண வாழ்க்கை :

மோகன்லால் அவர்கள் சுசித்ரா மோகன்லால் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு பிரணவ் மோகன்லால் என்ற மகனும் விஸ்மயா மோகன்லால் என்ற மகளும் பிறந்தனர்.

சர்ச்சை :

2007 ஆம் ஆண்டில் கேரளாவில் ஒரு குறிப்பிட்ட மது தயாரிப்பு நிறுவனத்திற்கான விளம்பரங்களில் அவர் நடித்ததற்காக விமரிசகர்களால் மிகவும் சர்ச்சைக்குள்ளானார். இந்தியாவில் மதுபானங்களிற்கான விளம்பரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் இந்த தடையையும் மீறி தங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்வதற்கு பல தரப்பட்ட உத்திகளைக் கையாண்டு வருகின்றன, அவற்றில் ஒரு முறையானது மது பானங்களைப் போலவேயுள்ள இதர மது சாரா பானங்களை அதே குறியீட்டுகளுடன் தயாரித்து விற்பனை செய்வதற்காக விளம்பரம் செய்வது.

உள்ளூர் தொலைகாட்சி மற்றும் திரை அரங்குகளில் மிகவும் பரவலாக விளம்பரமான இந்த குறிப்பிட்ட விளம்பரத்தில், ஒரு மதுபானம் சார்ந்த குறியீடு கொண்ட நேந்திரங்காய் வறுவலுக்காக மோகன்லால் நடித்தார்.

விருதுகள்:

1989 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஜூரி விருது (தேசிய விருது) “கிரீடம்” திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

1991 ஆம் ஆண்டு “தேசிய விருது” வழங்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது “வானபிரஸ்தம்” என்ற திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டு சிறந்த படம் மற்றும் இயக்குநருக்காக “தேசிய விருது” “வானபிரஸ்தம்” என்ற திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.

2001 ல் மத்திய அரசால் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.

“பிலிம்பேர் விருது” பத்து முறைக்கும் மேல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய திரைப்படத்துறை, இவரை கௌரவிக்கும் வகையில் “லெஃப்டினென்ட் காலோனஸ்” பதவியை வழங்கியது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.