khushwant singh History in Tamil – குஷ்வந்த சிங் வாழ்க்கை வரலாறு

குஷ்வந்த சிங், வயதில் முதுமையை கூட்டிக்கொண்டு எழுத்தில் இறுதிவரை இளமையை படரவிட்ட மாபெரும் எழுத்தாளர். இங்கு ஒரு எழுத்தாளனுக்கென்று ஒரு பிரத்யேக அடையாளம் இருக்கும் அல்லவா. அவர் நகைச்சுவையாக எழுதுவார், இவருக்கு அரசியல் கட்டுரைகள் எழுத நன்கு வரும்.

அதிதீவிர எழுத்துகளுக்கு அவர் சொந்தக்காரர் என இங்கு ஒவ்வொரு
எழுத்தாளனுக்கும் ஒரு எழுத்துநடையும் அது சார்ந்த அடையாளமும் இருக்கும். ஆனால், இவருக்கு அப்படிப்பட்ட எந்த அடையாளும் இருந்ததில்லை. ஒரு நாள் தீவிரமாக நெருக்கடி நிலையை ஆதரித்து எழுதுவார், மறுநாள் முத்தத்தை பற்றி எழுதுவார், மற்றொரு நாள் குளித்தல் ஆன்மாவை குளிர்விக்கிறது என்று அடர்த்தியாக ஒரு கட்டுரை எழுதுவார்.

இவர், முற்போக்கு சிந்தனையாளராகவும், மனித நேயமிக்கவராகவும் விளங்கியவர். குஷ்வந்த் சிங்கின் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

அவர், 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹதாலி என்ற இடத்தில் பிறந்தார்.

அடால்ப் இட்லர் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

இவரின் பள்ளிப்படிப்பை, தில்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் முடித்தார். பிறகு லண்டனிலுள்ள கிங் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை செய்தார்.

இலக்கியப் பணி :

பின் வழக்கறிஞராக வேலையை விட்டுவிட்டு எழுத்து மீது கொண்ட காதலால் இவர் பல பத்திரிக்கையில் சேர்ந்தார்.

இந்திய பிரிவனையை ரத்தமும் சதையுமாக எழுதி இருப்பார். நிறுவனமயப்பட்ட மதங்களை எதிர்த்தார். சொர்க்கம், நரகம் வெறும் புனைவு என்றார்.

மனிதர்களின் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கும் தட்டை பார்வை இவருடையதல்ல, மனிதர்களை அனைத்து பரிமாணங்களிலும் பார்த்து புரிந்து கொண்டு எழுதியவர். இவரது எழுதுக்களில், காந்தி, ஜின்னா, அத்வானி வேறு வடிவத்தில் நமக்கு தெரிவார்கள்.

பாரதநாடு, இந்தியா – பாகிஸ்தான் என பிரிக்கப்பட்ட பொழுது, எல்லையில். சாதி, மத அடிப்படை வாதங்களுக்கு இவர் வலுவாக எதிர்த்தார்.

அவரது படைப்புகள் :

தீவிர புத்தக வாசிப்பாளர், நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். இது குறித்து அவரே கூறியது, நான் வாசிக்க விரும்புகிறேன். என் விழிகள் என்னை கைவிடும் வரை, அனைத்து விதமான புத்தகங்களையும் வாசிக்க விரும்புகிறேன். என் பேனா என் கைகளிலிருந்து சரியும் வரை எழுத விரும்புகிறேன்.

நான் தொடர்ந்து எழுத விரும்புகிறேன். ஆம். அப்படி தான் எழுதவும் செய்தார். இவர் எழுதுவதற்கு எந்த பெரிய விஷயமும் தேவைப்படவில்லை. இவர் எழுதிய பின் தானாக அந்த விஷயம் பெரிய விஷயமானது. இவர் படைப்புகளை சில

தி மார்க் ஆஃப் விஷ்ணு அண்ட் அதர் ஸ்டோரிஸ், தி ஹிஸ்டரி ஆஃப் சீக்ஸ், தி வாய்ஸ் ஆஃப் காட் அண்ட் அதர் ஸ்டோரீஸ், ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல், தி பால் ஆஃப் பஞ்சாப், ட்ராஜெடி ஆஃப் பஞ்சாப், எண்டு ஆஃப் இந்தியா, தில்லி என மேலும் பல நாவல்களையும், சிறுகதைகளையும், ஜோக்ஸ் புத்தகங்களையும் படைத்துள்ளார்.

பணிகள் :

ஏழ்மையான மக்கள் முன்னேற இவர் எழுத்துகள் உதவியது

1979 ஆம் ஆண்டு தொடங்கி 1980 வரை இந்தியா இல்ல்லஸ்டிரேட்டட் வீக்லி என்ற பத்திரிக்கையில் ஆசிரியாராக வேலை செய்தார்.

1980 ஆம் ஆண்டு தொடங்கி 1983 வரை, இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியாராகப் வேலை செய்தார்.

1980 ஆம் ஆண்டு தொடங்கி 1986 வரை, இந்திய பாராளுமன்ற மேல்சபையில் மாநிலங்களவை உறுப்பினராகவும் வேலை செய்தார்.

விருதுகள் :

1974 லில் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

2006 லில் பஞ்சாப் அரசால் அவருக்கு பஞ்சாப் ரத்தன் விருது வழங்கப்பட்டது.

2007 லில் இந்திய அரசால் அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

2010 லில் அவருக்கு இந்திய சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.

மறைவு :

2014ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 20 அன்று தனது 99ஆவது வயதில் காலமானார்.

Leave a Comment