நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு – Netaji Subhas Chandra Bose History in Tamil

சூழ்ச்சியாலும் வஞ்சத்தாலும் இந்தியாவை அடிமையாக்கி பெரும் ஆயுத பலத்துடன் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போது காந்தி, வ.உ.சி போன்றவர்கள் அகிம்சை வழியில் சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருந்தனர். Netaji Subhas Chandra Bose Valkai Varalaru Tamil.

இந்தியர்கள் அகிம்சைவாதிகள், ஆயுதம் ஏந்த துணிவில்லாதவர்கள் என்று ஆங்கிலேயர்கள் நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு இளைஞன் சுதந்திரம் ஒன்றும் பிச்சை அல்ல கேட்டு பெறுவதற்கு அது என் பிறப்புரிமை ரத்தத்திற்கு ரத்தம் தான் பதில் என பொங்கி எழுந்து இந்திய இளைஞர்களை ஆயுத போராட்டத்திற்கு திரட்டி “இந்திய ராணுவத்தை உருவாக்கிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்” பற்றி இந்த பதிப்பில் விரிவாக பார்க்கலாம்.

Netaji Subhas Chandra Bose

பிறப்பு :

நேதாஜி அவர்கள் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாள், இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில், ஜானகிநாத் போதிக்கும் பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் எட்டு சகோதரர்கள், ஆறு சகோதரிகள். இவருடைய தந்தை ஒரு புகழ்பெற்ற வக்கீல். தாய் தெய்வ பக்தி மிகுந்தவர். நேதாஜி ஒரு வங்காள இந்து குடும்பத்தை சேர்ந்தவர்.

கல்வி :

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் தன்னுடைய ஆரம்பக் கல்வியை கட்டாக்கில் உள்ள “பாப்டிஸ்ட் மிஷின் ஆரம்பப் பள்ளியிலும்” , உயர்கல்வியை “கொல்கத்தா  ரேவன் ஷா கல்லூரியிலும்” முடித்தார். அவர் படிப்பில் முதல் மாணவராக விளங்கினார்.

பின் இளங்கலை பட்ட படிப்பிற்காக 1915-ஆம் ஆண்டு “கொல்கத்தா ப்ரெசிடென்சி கல்லூரியில்” சேர்ந்தார். அங்கு இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களைச் சொன்ன ஆசிரியர் “சீ. எஃப் ஒட்டன்” உடன் ஏற்பட்ட தகராறில் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின்னர் “ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்” சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

1919-ஆம் ஆண்டு தன் பெற்றோர் விருப்பத்தின் பேரில் ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க லண்டன் சென்றார். அவர் ஐ.சி.எஸ் தேர்வெழுதி நான்காவது மாணவராக தேர்ச்சி பெற்றார்.

நான் விரும்பும் தலைவர் ஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு – Jawaharlal Nehru History in Tamil

குடும்ப வாழ்க்கை:

நேதாஜி அவர்கள் ஆஸ்திரியாவை சேர்ந்த, எமிலி என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா, போலந்து, ஹங்கேரி, இங்கிலாந்து ,ஜெர்மனி, ஐரோப்பா, ஆஸ்திரியாவை போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.

அப்பொழுது அவருக்கு ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அதன் பின் அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் 27 டிசம்பர், 1937 ஆம் ஆண்டு நடைபெற்றது. 1942 ஆம் ஆண்டு இவர்களுக்கு அனிதா போஸ் என்னும் மகள் பிறந்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட காரணம் :

1919-ல் நடந்த “ஜாலியன் வாலாபாக்” படுகொலை சம்பவம் சுபாஷ் சந்திரபோஸை பெரிதும் பாதித்தது. அதுவே அவர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட காரணமாகவும் அமைந்தது.

இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் அனைத்து மக்களையும் ஜெனரல் “டையர்” என்னும் ராணுவ அதிகாரியின் தலைமையிலான ஆங்கிலேய படை கொன்று குவித்தது.

இந்த தாக்குதல் வெள்ளையர்கள் ஆட்சி மீதான வெறுப்புணர்வை அதிகப்படுத்தியது. இதனை தொடர்ந்து தன்னுடைய பணியைத் துறந்து 1921-ஆம் ஆண்டு லண்டனிலிருந்து இந்தியா திரும்பினார்.

சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கு :

லண்டனிலிருந்து திரும்பிய நேதாஜி இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து, சி.ஆர்.தாசை அரசியல் குருவாக கொண்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.

1922-ஆம் ஆண்டு வேல்ஸ் எனும் இளவரசனை பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானித்தது பிரிட்டன் அரசு. ஆனால் இவரின் வருகையை எதிர்த்து போராட்டம் செய்ய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது.கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக பொறுப்பேற்று தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கிலேய அரசு கைது செய்தது.

சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்டு, சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம், இந்திய சுதந்திரத்தை விரைவில் பெற முடியும் என நேருவும், சி.ஆர் தாஸும் கருதினர்.

ஆனால் இதனை காந்தி ஆதரவாளர்கள் எதிர்த்தனர். இதனால் காந்திக்கும், தாசுக்கும் பலமுறை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. எனவே கட்சியில் இருந்து பிரிந்த சி.ஆர் தாஸ், அவர்கள் ” சுயாட்சி கட்சியை” தொடங்கினார். இதுமட்டுமல்லாமல் “சுயராஜ்ஜியா” என்ற பத்திரிகையையும் தொடங்கினார்.

 இப்பத்திரிகை நேதாஜியின் தலைமையின் கீழ் இயங்குமாறு பொறுப்பை நேதாஜியிடம் ஒப்படைத்தார். 1928-ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த காந்தியின் முடிவை, தவறு என நேதாஜி கூறினார்.

இதனால் காந்திக்கும் நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. பிறகு இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார்.

தேச தந்தை மகாத்மா காந்திஜியின் வாழ்க்கை வரலாறு – Mahatma Gandhi History in Tamil

இந்திய தேசிய காங்கிரஸ் :

நேதாஜி 1938-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேதாஜி அவர்கள் நான் “தீவிரவாதி தான் ” எல்லாம் கிடைக்க வேண்டும் இல்லையெனில் ஒன்றுமே தேவையில்லை என்பது தான் எனது கொள்கை என கூறினார்.

நேதாஜி தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அவரை அழைத்து அவருக்கு பாராட்டு விழா நடத்தினார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு “நேதாஜி” எனும் பட்டத்தை வழங்கினார். நேதாஜி என்பதற்குப் பொருள் மரியாதைக்குரிய தலைவர் என்பதாகும்.

1939-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இதன் மூலம் அவரின் செல்வாக்கு உயர்ந்து வந்தது.

இதனை கண்ட காந்தி அவரை எதிர்த்து போட்டியிடுமாறு நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் வலியுறுத்தினார்.ஆனால் அவர்கள் இருவரும் போட்டியிட மறுத்து விட்டனர்.

எனவே பட்டாபி சீதாராமையாவை தேர்தலில் நிறுத்தினார் காந்தி. ஆனால் பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்று விட்டார். இதனால் காந்தி பெரிய இழப்பை சந்தித்ததாக கருதி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார். எனவே நேதாஜி அவர்கள் காங்கிரஸிலிருந்து தானாகவே வெளியேறி விட்டார்.

1940-ஆம் ஆண்டு பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டினார் எனக்கூறி ஆங்கிலேய அரசு நேதாஜி-யை கைது செய்து சிறையில் அடைத்தது.

அது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த மும்முரமான காலகட்டம். பாரத தேசத்தை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேய அரசை எதிர்த்து செயல்பட இதுவே சரியான தருணம் என கருதிய நேதாஜி 1941 ஜனவரி 17 ஆம் நாள் மாறுவேடம் அணிந்து சிறையில் இருந்து தப்பித்தார்.

பெஷாவர் வழியாக காபூல் அடைந்த அவர் பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தானை அடைந்தார். ரஷ்யா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என நினைத்த நேதாஜி இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை சென்றடைந்தார்.

எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழைப்பு வரவே அவரின் அழைப்பை ஏற்று ஜெர்மனியிலுள்ள மாஸ்கோவை அடைந்தார். இந்திய சுதந்திரத்தைப் பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை கேட்டார்.

இந்திய ராணுவம்:

1941-ம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கினார்.சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல் இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி உலகப் போர் பற்றிய செய்திகளை இதில் ஒளிபரப்பினார்.

பிறகு ஜெர்மன் அயலுறவுத் துறை அமைச்சர் “வான் ரிப்பன் டிராபின்” உதவியுடன் சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவிர பயிற்சி அளித்து அதனை தலைமை பொறுப்பேற்று நடத்தினார்.

1943-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளிப்படுத்தினார். ஜப்பான்,ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன் பர்மாவில் இருந்தபடி இந்திய தேசிய ராணுவப் படையை கொண்டு 1944-இல் ஆங்கிலேயரை எதிர்த்தார்.

ஆனால் பல காரணங்களால் இந்திய தேசிய படை தோல்வியடைந்து பின்வாங்கியது. அப்போது ஆகஸ்ட் 15 1945-ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு இது தற்காலிகமான தோல்வி மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள் என நம்பிக்கையூட்டினார் .

இந்தியாவை நிரந்தரமாக அடிமைப்படுத்தி கட்டிவைக்கும் ஆற்றல், இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை “ஜெய்ஹிந்த்” என உரையாடினார். அவர் அன்று குறிப்பிட்டபடியே சரியாக இரண்டு ஆண்டுகளில் இந்தியா விடுதலை பெற்றது.

மரணம்:

ஆகஸ்ட் 18, 1945-ஆம் ஆண்டு நேதாஜி அவர்கள் பயணம் செய்த விமானம், பர்மோசா தீவு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்தச்செய்தி இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே இருந்தது.

இந்த கட்டுரையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு, சுபாஷ் சந்திர போஸ், Nethaji life history in Tamil, Subhash Chandra bose history in tamil, netaji subhas chandra bose valkai varalaru tamil, netaji subhas chandra bose history, netaji subhas chandra bose varalaru tamil, nethaji history in tamil, nethaji quotes in tamil

Leave a Comment