
1889-ஆம் ஆண்டிலேயே மாளிகையில் பிறந்து, செல்வ செழிப்போடு வளர்த்து, பிறகு மக்களுக்காக போராடி 9 ஆண்டுகள் சிறையில் தன் வாழ்நாளை கழித்தார் என்றால் பலருக்கும் வியப்பாக தான் இருக்கும். அவர் வேறு யாரும் இல்லை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு.
பிறப்பு :
1889-ஆம் ஆண்டு உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் மோதிலால் நேரு, சுவரூப ராணி தம்பதிக்கு மகனாய் பிறந்தவர் தான் ஜவகர்லால் நேரு.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நேருவின் தந்தை ஒரு வழக்கறிஞர் அப்போது இருந்த ராஜாக்கள், ஜமீன்தார்கள், பெரும் பணக்காரர்களின் வழக்குகளுக்கு இவர் வாதாடியதால் பின்னாளில் பெரும் செல்வந்தராக வளர்ந்து நின்றார்.
ஜவகர்லால் நேரு பிறக்கும் போது மாளிகை போன்ற வீட்டில் செல்வ செழிப்புகளுடன் சமுதாயத்தில் பெரிய அந்தஸ்துடன் இருந்துள்ளது அவரது குடும்பம். ஜவகர்லால் நேருவுக்கு இரண்டு சகோதரிகள், விஜயலக்ஷ்மி பண்டிட் மற்றும் கிருஷ்ணாவு ஆனந்தபவன். இந்த மூன்று பெரும் சிறுவயதிலிருந்தே ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டவர்கள்.
கல்வி :
மகனை அரசாங்க வேலையில் அமர்த்த நினைத்த நேருவின் தந்தை நேருவை இங்கிலாந்திற்கு அனுப்பி பள்ளி படிக்க வைத்தார். 1900 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்திற்கு சென்று பள்ளியில் படிப்பது என்பது சாதாரண காரியம் இல்லை.
இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் நேருவின் குடும்பம் எவ்வளவு செல்வாக்கான, செல்வ செழிப்பான குடும்பம் என்பதை. பள்ளி படிப்பை 1907-ஆம் ஆண்டு முடித்த நேரு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நுழைவு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று இயற்கை அறிவியலில் 1910-ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.
பிறகு 1910-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் இன்னர் டெம்பிள்-இல் சட்டம் படிக்க பதிவு செய்தார்.பிறகு 1912-ஆம் ஆண்டு சட்ட படிப்பை முடித்து பணி செய்ய இந்தியாவிற்கு திரும்பினார்.
தேச தந்தை மகாத்மா காந்திஜியின் வாழ்க்கை வரலாறு – Mahatma Gandhi in Tamil
திருமணம் :
1916-ஆம் ஆண்டு கமலா கவுல் என்ற 16-வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட நேருவிற்கு இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தார். இவர் தான் நேருவிற்கு பிறகு, இந்தியாவின் பிரதமராக வந்த இந்திரா காந்தி. 1936-ஆம் ஆண்டு மனைவி இறந்த பிறகு, வேறு திருமணம் செய்து கொள்ளாமல் மகளுடன் வாழ்ந்து வந்தார்.
சுதந்திர போராட்டத்தின் மீது ஈர்ப்பு :
1919-ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் என்னும் இடத்தில் நடந்த பொது கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, எந்த முன் அறிவிப்பும் இல்லாமல், ஆங்கிலேய அரசு துப்பாக்கி சூடு நடத்தி, கூட்டத்தில் கலந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் என பலரை கொன்ற சம்பவம் தான் நேருவை பாதித்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட செய்தது. இந்த சம்பவம் வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் படுகொலையாகவும் பதிவும் செய்யப்பட்டது.
அதன் பிறகு காந்தியின் வழியில் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட நேரு குறுகிய காலத்தில் காந்தியின் நம்பிக்கைக்குரியவர் ஆனார். 1920-ஆம் ஆண்டு காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்தது கொண்டதால் முதல் முறையாக சிறைக்கு சென்றார். பிறகு 1922-ஆம் ஆண்டு அந்த போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டதால் நேரு விடுதலை செய்யப்பட்டார்.
இந்திய தேசிய காங்கிரஸ் :
1926-ஆம் ஆண்டு காந்தியின் வழிகாட்டுதலால் “இந்திய காங்கிரஸ்” என்ற இயக்கத்தை தொடக்கி தலைமை பொறுப்பேற்று வழிநடத்தினார். அந்த இயக்கத்தின் கொள்கை ஆங்கிலேய அரசின் பிடியில் இருந்து முழுமையான சுதந்திரத்தை பெறுவது.
அதன் பலனாய் சுதந்திரத்திற்கு பிறகு ஆகஸ்ட் 15-ஆம் நாள் புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் முதல் தேசிய கோடியை ஏற்றும் தனி சிறப்பு அவருக்கு வழங்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் :
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரு அதன் பிறகு அவர் உயிரோடு இருக்கும் வரை 16-ஆண்டுகள் தொடர்ந்து பிரதம மாதிரியாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நேரு அதன் பிறகு அவர் உயிரோடு இருக்கும் வரை 16-ஆண்டுகள் தொடர்ந்து பிரதம மாதிரியாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்தவர் நேரு.
உலகின் பலநாடுகள் கிடைத்த சுதந்திரத்தை பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தி தோல்வி அடைந்திருக்கின்றன. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தால், அப்படி ஒரு நிலை தான் ஏற்படும் என்ற எண்ணம் உலகில் பல நாடுகளுக்கும் இருந்தது.
சுதந்திரம் கிடைத்தாலும் இந்தியாவை ஆளும் திறமை இந்தியர்களுக்கு இல்லை என்று ஹிட்லர் ஒரு முறை விமர்சனம் செய்திருந்தார்.
உலக நாடுகளில் எதிர்பார்ப்பை சாத்தியப்படுத்த தேவையான அத்தனை காரணங்களையும் இந்தியா அப்போது கொண்டிருந்தது. இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்தனர்.
ஏறத்தாழ 80% மக்கள் படிப்பறிவற்றவர்கள், அதனால் இந்தியா பல துண்டுகளாக சிதறும் என்ற உலகநாடுகளின் எண்ணங்களை நேரு பொய்யாக்கினார்.
மக்கள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு – Abdul Kalam History Tamil
இந்தியாவின் முதல் தேர்தல் :
இந்தியாவில் தேர்தல் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவது என்ற நேருவின் முடிவு மிக மிக தைரியமானது. அதுமட்டுமில்லாமல் “வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிப்பது” என்று நேரு முடிவு செய்தார்.
ஒரு அரசியல் தலைவரின் முடிவு விமர்சனத்திற்கு உள்ளாகலாம். ஆனால் நேருவின் “வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும்” என்ற முடிவு கேளிக்கைக்கு உண்டானது.
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்கள் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது இந்தியாவிற்கு பொருந்தாது என்று சொன்னார்கள். இந்தியர்களுக்கு நாட்டை ஆளத் தெரியாது என்று பிரிட்டிஷ்காரர்கள் நினைத்தனர்.
அவர்கள் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் நேருவின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு உண்டானது. அதனை எதிர்த்த குரல்களில் மிக முக்கியமானது ஆர்.எஸ்.எஸ்-ன் குரல்.
வாக்குரிமை :
அந்தக் காலகட்டத்தில் வாக்குரிமை மற்றும் ஓட்டு போடுவது என்றால் இந்திய மக்களில் பலருக்கு என்ன என்றே தெரியாது.
இந்தியாவின் 17 கோடியே 60 லட்சம் வாக்காளர்களில் 8 கோடி பேர் பெண்கள். அதில் தங்கள் பெயரை சொல்லவே தயங்கியதால் 18 லட்சம் பெண்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவே இல்லை.
1951-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் நாள் வானொலியில் பேசிய பிரதமர் நேரு தேர்தலின் முக்கியத்துவத்தை மக்களுக்கு சொன்னார்.
இந்திய துணைக் கண்டத்தை ஜனநாயக வடிவம் ஆக்கும் பொறுப்பை நேரு சுகுமார் சிங்கிடம் ஒப்படைத்தார். நேருவின் நம்பிக்கையை சுகுமார் சிங்கும் இந்திய மக்களும் அதை காப்பாற்றினார்கள்.
தேர்தல் :
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் வெற்றிகரமாக நடந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக வாக்குச்சாவடிகளில் காத்திருந்து வாக்களித்தார்கள்.
குறிப்பாக பெண்கள் ஆர்வமாக வாக்களித்தார்கள். நேருவின் நம்பிக்கையை இந்திய மக்கள் காப்பாற்றியதை போல நேருவும் இந்திய மக்களின் நம்பிக்கையை காப்பாற்றினார்.
நேருவின் இந்திய தேசிய காங்கிரசுக்கு மக்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தார்கள். நேரு தேர்தல் ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தியவர் என்று குறிப்பிடுவதற்கு காரணம் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலிலே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்திய சமூகம் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மட்டும் இல்லாமல் பெண் அடிமைத்தனத்தில் ஊறிப்போயிருந்தது.
அதையெல்லாம் கடந்து கோடிக்கணக்கான இந்தியர்களுடன் சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நேரு உருவாக்கினார்.
ஜனநாயகவாதி நேரு :
நேரு நினைத்திருந்தால், இந்தியாவின் சர்வாதிகாரியாக தன்னை மாற்றியிருக்க முடியும். சுதந்திரத்தை பயன்படுத்த முடியாமல் பல நாடுகள் சிதைந்து போனதற்கு காரணம் சர்வாதிகாரம் தான். நேரு என்ற ஜனநாயகவாதியின் தேவையை இந்தியா அப்போதுதான் உணர்ந்தது.
அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவருக்கு நேரு அளித்த பேட்டியில் இந்தியாவிற்கு தான் ஜனநாயகத்தை விட்டுச் செல்வதாகவும், 40 கோடி மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளும் விதத்தில் இந்தியாவை வடிவமைத்தது தான் தன்னுடைய சாதனை என்றும் சொல்லியிருந்தார். அதுதான் உண்மையும் கூட……..
நேருவை கிரிமினல் என்று விமர்சிப்பவர்கள் கூட அவர் வடிவமைத்த ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான்.
தேர்தல் நடைமுறையை உருவாக்க, சுகுமார் சிங்குடன் இணைந்ததை போல மற்ற துறைகளிலும் இந்தியாவை மேம்படுத்த தன்னுடன் மாற்றுக்கருத்து கொண்டவர்களுடனும் இணைந்து செயல்பட்டார்.
காங்கிரசின் கொள்கைகளுடன் அதிகம் முரண்பட்ட அண்ணல் அம்பேத்கரும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.
இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர் அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதும் அப்படித்தான்.
மக்களோடு உரையாடும் பண்பு :
சுதந்திரத்திற்கு முன் சிறையில் இருக்கும்போது மகளுக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்த நேரு சுதந்திரத்திற்குப் பின்னும் 15 நாட்களுக்கு ஒரு முறை மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதுவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்தியாவின் முதல் அமைச்சரவையில் நேரு தன்னிடம் வைத்திருந்த துறைகள் அவரது என்னத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. வெளியுறவுத்துறை, அறிவியல் மற்றும் வளர்ச்சி துறை, காமன்வெல்த் துறை போன்றவற்றை தன்னிடத்தில் வைத்திருந்தார்.
அவரது ஆட்சிக்காலத்தில் அறிவியல் மற்றும் விண்வெளித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
உன் பக்கத்தில் இருப்பது யார்? அதுவே உன் வெற்றியை தீர்மானிக்கும்..! – தன்னம்பிக்கை பற்றிய சிறுகதை
ஐந்தாண்டு திட்டங்கள் :
இந்தியாவை வறுமையிலிருந்து மீட்க சோவியத் யூனியன் ஸ்டாலினின் ஐந்தாண்டு திட்டத்தை கையில் எடுத்தார் நேரு.தொழில்துறையில் நேருவின் ஐந்தாண்டு திட்டங்கள் நல்ல பலன்களை தந்தது.
1947-ஆம் ஆண்டு 0.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி ஐந்தாண்டு திட்டங்களினால் ஆண்டுக்கு 4% அளவுக்கு உயர்ந்தது.
குழந்தைகள் தினம் :
குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற காதலாலும், அவர் காட்டிய பாசத்தாலும் அவரின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதியை இந்தியா முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இறுதி காலம் :
1964-ஆம் ஆண்டு வாக்கில் நேருவின் உடல் நிலை மோசமாகியிருந்தது. அதனால் காஷ்மீரில் தங்கி கட்டாய ஓய்வு எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
கடைசி கால கட்டங்களில் உதவிக்காக மகள் இந்திரா மற்றும் சகோதரி விஜயலட்சுமி ஆகியோரை உடன் வைத்திருந்தார்.
1964-ஆம் ஆண்டு காஷ்மீரிலிருந்து திரும்பிய நேரு பக்கவாதம், மாரடைப்பு நோய்களால் பாதிக்கப்பட்டு மே மாதம் 27-ஆம் தேதி அதிகாலை மரணமடைந்தார்.
அவரது உடல் யமுனை நதிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் தெருக்களில் இறங்கி மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்த கட்டுரையை இணையத்தில் கீழ்கண்டவாறு தேடலாம் :
நேருவும் குழந்தைகளும் கட்டுரை, நேரு குடும்ப வரலாறு, ஜவஹர்லால் நேரு வரலாறு தமிழ், நான் விரும்பும் தேசத் தலைவர் கட்டுரை, நான் விரும்பும் தலைவர் பேச்சு போட்டி, எனக்கு பிடித்த தலைவர் கட்டுரை, jawaharlal nehru history in tamil, jawaharlal nehru short history in tamil, jawaharlal nehru patri tamil, jawaharlal nehru valkai varalaru.