Narendra Modi History in Tamil – பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் 14வது பிரதமராக பதவிவகிக்கும் நரேந்திர தாமோதரதாஸ் மோடி, 2014 தேர்தலில் பாஜகவை ஆச்சர்யமளிக்கும் வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றவர். தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநிலத் முதல்வராக இருந்தார்.

நரேந்திர மோடி அவர்கள் மிகப்பெரிய கனவு தொழில் வளர்ச்சி. ஆகையால் மின்சாரம், தண்ணீர், சாலை வசதிகள் என மக்களுகாக அனைத்துத துறைகளிலும் சிறந்து பணிசெய்து வருகிறார் . இவருடைய சாதனையைப் பாராட்டி ஒரு முறை இந்தியா டுடே நாளிதழ் இவர்க்கு சிறந்த முதல்வர் என்று குஜராத்தில் இருக்கும் போது இவருக்கு விருது வழங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் குஜராத்தில் தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி என்பவருக்கும், ஹூராபேன்னுக்கும் மூன்றாவது குழந்தையாகப் நரேந்திர மோடி பிறந்தார்.

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

தன்னுடைய ஆரம்பக் கல்வியை வட்நகரில் தொடங்கிய நரேந்திர மோடி, பள்ளி படிக்கும் போது காலை மாலை என இருவேலையும் ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி குடும்பத்திற்கு உதவினார்.

எட்டு வயதில் ஆர்.எஸ்.எஸ் அணியில் தொண்டராக மோடி இணைந்தார். சிறு வயதில் இருந்தே அரசியலில் ஆர்வம் கொண்டவராக இருந்தார் மோடி. பின் குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை :

சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பான பாரதிய வித்யார்தி பரிஷத் என்ற அமைப்பில் மாணவர் குழுவின் தலைவராக மோடி இருந்தார். அப்போதே மோடி பல போராட்டங்கள் நடத்தினார். இதனால்பல அரசியல் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது.

மோடியின் உழைப்பை கண்ட பிற கட்சி தலைவர்கள் கூட அவரை பாராட்டினர். பிறகு தான் மோடி பாரதிய ஜனதாக் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து. யாரும் எதிர் பாக்காத அளவுக்கு ஒரே ஆண்டில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக ஆனார்.

குறிகிய காலகட்டத்தில் 1998 ஆம் ஆண்டு 2 மாநிலத்தின் அதாவது குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக உருவானார். மிக விரைவில் குஜராத்,பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற ஐந்து மாநிலங்களுக்கு பொதுச்செயலாளராக உருவானார். பலரும் இவரை ஆதரித்தனர்.

குஜராத் முதல்வராக மோடி மற்றும் பிரதமர் மோடி :

அவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து பொறுப்புகளிலும் சிறப்பாக செயல்பட்ட மோடி. 2001 ஆம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் குஜராத் மாநிலத்தில் ராஜினாமா செய்ததால். பலரின் ஆதரவுடன் அக்டோபர் குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார்.

பிப்ரவரி 27, 2002 ஆம் ஆண்டு பின்னர் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற அவர். பின்னர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மூன்றாவது முறையாக வெற்றிபெற்று. இதனால், குஜராத் அரசியல் வரலாற்றில், மோடி நீண்டகால முதல்வர் என்ற சாதனையைப் பெற்றார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநிலத் தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்றார். இந்திய அரசியலில் மாபெரும் சாதனைப்
படைத்த பின்னர் 2014 ஆம் ஆண்டு 16 ஆவது மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.

அந்த தேர்தலில் மிக பெரிய வெற்றி அடைந்த மோடி. அடுத்து பிரதமர் வேட்பாளராக 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று சாதனை புரிந்தார்.பல எதிர்ப்புகள் இருந்தாலும் குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார் மோடி இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க குட்கா என்னும்
போதைப்பொருளை தடை செய்தார்.

தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். பிரதமர் ஆனதற்கு பிறகு 2014 ஆம் ஆண்டு தூய்மை இந்தியா இயக்கம் நாடு முழுவதும் துவக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ரூபாய் 500 மற்றும் 1000 பணத்தாட்களின் மதிப்பு நீக்கப்பட்டது. நாடு முழுவதும் 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுக படுத்தப்பட்டது. 2019 முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் என பல சாதனைகளை பிரதமர் மோடி செய்து உள்ளார்.

விருதுகள் :

2006 ஆம் ஆண்டு இந்தியா டுடே நாளிதழ் இந்தியாவின் சிறந்த முதல்வர் என்ற விருதை வழங்கி கௌரவித்தது.

2009 ஆம் ஆண்டு ஆசியாவின் சிறந்த எப்.டி.ஐ பெர்சனாலிட்டி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2012 ஆம் ஆண்டு டைம் பத்திரிகையின் முதல் அட்டையில் சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவராக சித்தரிக்கப்பட்டார்.

2016 ஆம் ஆண்டு சௌதி அரேபியாவின் மிக உயரிய சிவில் விருது – மன்னர் அப்துல்லாசிஸ் சாஷ் வழங்கினார்.

2018 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு சென்ற போது தி கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் விருது வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரிய சிவில் ஆர்டர் ஆஃப் சையது விருது வழங்கப்பட்டது.

Leave a Comment