fbpx

Sonia Gandhi History in Tamil – சோனியா காந்தி வாழ்க்கை வரலாறு

இந்திராகாந்தியின் மருமகள் மற்றும் ராஜீவ் காந்தியின் மனைவி. பெரிய பலத்துடன் இந்திய மண்ணில் வந்தார் சோனியா காந்தி. தனது கணவரான ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின், அரசியலில் ஆர்வம் இல்லாத சோனியா காந்தி.

பலரின் வற்புறுத்தலின் பெயரில் 1997 ஆம் ஆண்டு அரசியலில் நுழைத்தார். பின் இவரை அனைவரும் இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்தனர். வெளிநாட்டவராக இருந்து இந்தியா மண்ணில் நீண்ட கால ஆட்சியில் இருந்து வரலாறு படைத்தார் இவர் . பின் சில ஆண்டுகளில் சிறந்த பெண் தலைவராக எல்லோராலும் போற்றப்பட்டார் சோனியா காந்தி.


நேரு குடும்பத்தின் ஒரு முக்கிய தலைவராக இருந்த சோனியா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

சோனியா காந்தி 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி இத்தாலியில் உள்ள லூசியானா என்றொரு சிறிய கிராமத்தில், ஸ்டெஃபனோ மற்றும் பாவ்லோ மையினோ இருவருக்கும் மகளாக பிறந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் :

சோனியா காந்தி அவர்களின் குழந்தைப் பருவம் இத்தாலியில் உள்ள ஆர்பாஸனோ என்ற இடத்தில் தொடங்கியது . அவர் அங்கு பள்ளிப்படிப்பை கத்தோலிக்கப் பள்ளியில் பயின்றார்.

இவர் ஆங்கிலம் கற்க விரும்பியதால், 1964 ஆம் ஆண்டு அவரின் தந்தை முலம் கேம்பிரிட்ஜ் அருகில் உள்ள ஒரு பள்ளியில் ஆங்கிலம் கற்க சேர்ந்தார். அங்கு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கிரேக்க உணவகத்தில் பணியாளராகவும் பணிபுரிந்தார்.

இல்லற வாழ்க்கை :

இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ராஜிவ் காந்தியை சந்தித்தார். முதல் சந்திப்பிலேயே இவர்களுக்கு காதல் மலர்ந்ததால், 3ஆண்டுகளாகக் காதலித்து 1968 ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்தார்கள்.

பின் தான் இந்தியாவுக்கு ராஜிவ் காந்தி அவரை அழைத்து வந்தார். அவர்கள் இருவருக்கும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி என்று இரு குழந்தைகள் பிறந்தனர்.

அரசியல் வாழ்க்கை :

1991 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி பல சூழ்ச்சி காரணமாக படுகொலை செய்யப்பட்டார்.

காங்கிரஸ் கட்சி அந்த நேரம் சோர்வாகஇருந்தது . காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரின் ஆசைக்காக 1997 ஆம் ஆண்டு காங்கிரஸின் அடிப்படை உறுப்பினாராக மட்டும் சோனியா அவர்கள் இருந்தார். அடுத்த ஆண்டிலேயே அதாவது 1998 ஆம் ஆண்டிலே தலைவர் பொறுப்பேற்றார்.அடுத்தது 1999 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அவரது கணவர் போட்டியிட்ட இடமான உத்திரப் பிரதேசத்தில் உள்ள அமேதி இடத்தில் போட்டியிட்டார்.

சுஸ்மா சுவராஜ் என்பவரைத் தோற்கடித்து, 13 வது லோக்சபாவின் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பை ஏற்றார் சோனியா. பிஜேபி கட்சிக்கு எதிராக பல தீர்மானங்களை போட்டார் இவர். காங்கிரஸ் தலைவராக பத்து வருடங்களுக்குத் தொடர்ந்து பதவியில் இருந்தார்.

2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பல கட்சிகள் தோல்வி அடைந்தது. இதனால் சோனியா காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று பலரும் நினைத்தார்கள்.

ஆனால் சோனியா வெளிநாட்டு பெண் என்றும் இந்திய குடி உரிமைச் சட்டம் பற்றியும் பல காரணங்கள் சொல்லி மக்கள் இடையே மதிப்பை எதிர் கட்சிகள் குறைத்தது.

பின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராகப் பொறுப்பேற்ற அவர். திறமை வாய்ந்த பொருளாதார நிபுணர் யார் என்று அறிந்து டாக்டர். மன்மோகன் சிங்கை பிரதம மந்திரி பதவிக்காகப் பரிந்துரைத்தார். சில நாட்களிலே அனைத்து பதவிப்பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்தார் சோனியா காந்தி அவர் பதவிக்கு என்றும் ஆசைப்படவில்லை.

இருப்பினும் 2006 ஆம் ஆண்டு மே நிகழ்ந்த ராய்பரேலி பாராளுமன்றத் தொகுதித் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற அவர் மீண்டும் அப்பதவிப் பொறுப்பேற்றார். தேசிய ஆலோசனைக் குழுவின் கூட்டத்தலைவராகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராகவும் இருந்து வந்தார்.

2009 பொதுத்தேர்தல்களில் அவரது தலைமையில் நடத்த தேர்தலில் வெற்றிப் பெற்றது. காங்கிரஸ் கட்சி வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை செய்து உள்ளார். அந்த அளவுக்கு அது பெரிய வெற்றி.

விருதுகள் :

2006 ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸ் பல்கலைக்கழகம் மூலமாகவும், 2008 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் மூலமாகவும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்கள்.

2004 மற்றும் 2007 ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ் சோனியா காந்தி அவர்களை, உலகின் மிக சக்திவாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் சேர்த்தது. மேலும் அவர் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த செல்வாக்கு பெற்ற நபர் என்று அவரைப் பல பத்திரிக்கைகளும் கணித்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.