fbpx

Shiv Nadar History in Tamil – சிவ் நாடார் வாழ்க்கை வரலாறு

ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் உலக பணக்காரர்கள் வரிசையில் தவறாமல் இடம்பெறும் ஒரு தமிழ் பெயர் சிவ் நாடார். இப்போது நீங்கள் பட்டியலை கூகுள் செய்தாலும் உலகின் முதல் நூறு பில்லினியர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கிறது. இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில், மாபெரும் சாதனைப் படைத்துவரும் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர்
ஆவார்.

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான இந்துஸ்தான் பொறியியல் லிமிடெட் (HCL)-இன் தலைமை செயல் அதிகாரி மற்றும் ஷிவ் நாடார் அறக்கட்டளையின்
தலைவரும் ஆவார். ஷிவ் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் மிகவும் பிரசித்தி பெற்ற ஊர். அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூலைப்பொழி என்ற சிறிய கிராமத்தில் சிவசுப்ரமணிய நாடார், வாமசுந்தரி தேவி தம்பதியினருக்கு 1945 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் நாள் ஷிவ் நாடார் மகனாகப் பிறந்தவர். இவரது தாயார் வாமசுந்தரி தேவி தினத்தந்தி பத்திரிக்கையின் நிறுவனர் எஸ்.பி.ஆதித்தனாரின் தங்கையாவார்.

ஜே. பி.சந்திரபாபு வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

ஷிவ் நாடார் தனது பள்ளிப் படிப்பை கும்பகோணம் டவுன் மேல்நிலைப் பள்ளியிலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பேச்சுலர் டிகிரியும், கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் எலக்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டமும் பெற்றார்.

எச்.சி.எல் நிறுவனத்தை உருவாக்குதல் :

இதன் பின்பு 1967ஆம் ஆண்டுப் புனே-வில் இருக்கும் வால்சந்த் குரூப்-ன் காப்பர் இண்ஜினியரிங் நிறுவனத்தில் தனது முதல் வேலையைத் துவங்கினார். வேலையில் இருக்கும்போதே வியாபாரம் செய்யத் திட்டமிட்ட ஷிவ் நாடார், டிஜிட்டல் கால்குலேட்டர் விற்பனை செய்யத் திட்டமிட்டு மைக்ரோகார்ப் என்ற நிறுவனத்தைத் தன்னுடன் பணிபுரியும் ஆறு சகப் பணியாளர்களுடன் சேர்ந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.

இந்தியாவில் அமல் செய்யப்பட்ட புதிய தொழிற்கொள்கைகள் எதிரொலியாக மைக்ரோ கம்பியூட்டர் பிரிவில் இருந்த ஐபிஎம் இந்தியாவை விட்டு வெளியேறியது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தத் திட்டமிட்ட ஷிவ் நாடார் தனது நண்பர்கள் உடன் இணைந்து எச்.சி.எல் நிறுவனத்தை வெற்றிகரமாகத்
தொடங்கினார். 1982 ஆம் ஆண்டு, எச்.சி.எல் நிறுவனத்தின் முதல் கணினி வெளியிடப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில், எச்.சி.எல் கணினிகள் மற்றும் அலுவலக உபகரணங்களின் வருவாய் 80% பெறுகியுள்ளது. எச்.சி.எல் நிறுவனத்தின் படைப்புகள், இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என கூறலாம். 1980 ஆம் ஆண்டில், எச்.சி.எல்,
ஐ.டி மென்பொருள் விற்க சிங்கப்பூர் தூரக் கிழக்குக் கணினி நிறுவனத்தை’ திறக்க சர்வதேச சந்தையில் முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்தினார்.

சொந்த வாழ்க்கை :

சிவ் நாடார் அவர்கள் கிரண் நாடார் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ரோஷினி நாடார் என்ற ஒரு மகள் இருக்கிறார்.

ஷிவ் நாடார் அறக்கட்டளை :

தொழில்துறையில் மட்டும் தன்னை ஈடுபடுத்தி கொள்ளாமல், பொது பணியிலும் தன்னால் முடிந்த பணிகளை செய்துவருகிறார். இப்படி, ஹெச்.சி.எல் நிறுவனம் லாபம் தரும் ஒரு பெரும் நிறுவனமாக உயர்ந்து வந்த நிலையில் தன் அம்மாவிடம் ”அம்மா இந்த பணத்தையெல்லாம் வைத்து என்ன செய்யட்டும்” என்று கேட்ட அவரிடம் ”இல்லாதவர்க்கு நல்லது செய்”
என்ற கூறிய தனது அம்மாவிடம் இருந்துதான் தன் ஈகைப் பண்பை வளர்த்துக்கொண்டேன் என்று மெய்சிலிர்க்கிறார் சிவ் நாடார் கூறினார்.

2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷிவ் நாடார் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கற்க உதவிகள் செய்து வருகிறார்.2016க்குப் பின் மட்டுமே 650 கோடிக்கும் மேலாக ஏழை மாணவர்களின் கல்விக்காக செல்வழித்துள்ளார் என்றால் யோசித்துக்கொள்ளுங்கள்.

சென்னையில் SSN பொறியியல் கல்லூரியை தொடங்கினார். காலம் சென்ற தனது தந்தை சிவசுப்பிரமணிய நாடார் நினைவாக இது தொடங்கப்பட்டது. அன்று முதலே ஷிவ் நாடார் சிறந்த நன்கொடையாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

வெளிநாட்டுத் திட்டம் :

இந்தக் காலகட்டத்திலேயே ஷிவ் நாடாருக்கு அமெரிக்காவின் கலிப்போர்னியாவில் கம்பியூட்டர் தயாரித்து அதை அமெரிக்கா முழுவதும் வர்த்தகம் செய்ய வேண்டும் எனத் திட்டமும் ஆசையும் இருந்தது.

அது நடந்திருந்தால் இன்று ஷிவ் அவர்களின் கனவு திட்டம் மகிப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து நிறுவனத்தின் மதிப்பு 500 பில்லியன் டாலர் வரையில் வளர்ச்சி அடைந்திருக்கும் என்று ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் வினித் நாயர் தெரிவித்துள்ளார்.

விருதுகளும் பிற பணிகளும் :

1996 ஆம் ஆண்டு தனது தந்தையின் பெயரில் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியை சென்னையில் நிறுவினார்.

2007 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம், மென்பொருள் தொழில்நுட்பத்தில் இவரின் வளர்ச்சிக்காக இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவித்தது.

2008 ஆம் ஆண்டு இந்திய அரசு, தகவல் தொழில்நுட்பத் துறையில், இவரின் மகத்தான பங்களிப்பிற்காக இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருதை அளித்து
கெளரவித்தது.

2011 ஆம் ஆண்டு கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

20 பில்லியன் டாலர் :

வெறும் 1.87 லட்சம் ரூபாயில் துவங்கப்பட்ட ஹெச்சிஎல் நிறுவனம் இன்று 20 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடன் நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இதுமட்டும் அல்லாமல் ஷிவ் நாடார் கனவுகளைப் பார்க்கும் போது அவர் தவறான நாட்டில் பிறந்துவிட்டார் எனத் தான் அடிக்கடி நிறுவன தலைவர்களிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.