இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களில் ஜைன மதமும் பிரபலமானது. ஜைன மதத்துறவியாக வாழ்ந்தவர் தான் மகாவீரர். பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்பதே இவர்களின் லட்சியம். மகாவீரரைப் பின்பற்றி அவரது வழியில் நடப்போர் ஜைனர்கள் அல்லது சமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இவர் மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் என்ற போதனையை போதித்தவர். சிறுவயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபாடுகொண்டு இல்லறவாழ்வினைத் துறந்து, துறவறம் மேற்கொண்ட மகாவீரரின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு :
வைசாலிக்கு அருகிலுள்ள குண்ட கிராமம் எனுமிடத்தில் கி.மு. 599-ல் ஒரு க்ஷத்திரிய குடும்பத்தில் பிறந்தார் மகாவீரர். பெற்றோர் அவருக்கு வர்த்தமானர் என்று பெயரிட்டு சீரும் சிறப்புடனும் வளர்த்து வந்தனர்.
ராஜா ராம் மோகன் ராய் வாழ்க்கை வரலாறு
ஆரம்ப வாழ்க்கை :
அரசக் குடும்பத்தில் பிறந்ததால், மிகவும் செல்வாக்காக வளர்க்கப்பட்டார். . மகாவீரருக்கு எல்லா கலைகளிலும் சிறுவதிலேயே பயிற்சி அளிக்கப்பட்டது.
இவருக்கு சிறுவயதிலேயே ஆன்மிக நாட்டம் இருந்தது. பின் இவர் யசோதரை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை தொடங்கினார். இவர்களுக்கு பிரியதர்ஷனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தனது 36-வது வயதில் மகாவீரர் உலக வாழ்வைத் துறந்து துறவறம் செய்தார்.
மகாவீரரின் ஆன்மீகப் பயணம் :
மனித வாழ்க்கையின் அர்த்தம் தேடி, 12 ஆண்டுகள் தியானம் செய்தார். பின் கோசலா என்ற துறவியுடன் 6 ஆண்டுகள் சில கலைகளை கற்றார்.
இவருக்கு சாலா என்னும் மரத்தடியில் ஞானம் கிடைத்தது . அதிலிருந்து அவர் “மகாவீரர்” என அழைக்கப்பட்டார்.மகாவீரர் என்றால், பெரும்வீரர் என்று பொருள் ஆகும்.
இவர் இந்தியா முழுவதும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு, பல உண்மைகளை மக்களுக்கு போதித்தார்.
வெறும் கால்களில், துணிகள் ஏதும் இன்றி, அவர் போதித்த போதனைகளைக் கேட்க அனைத்துத்தரப்பு மக்களும் திரண்டது இவரே சமண சமயத்தில் தோன்றிய கடைசி தீர்த்தங்கரும் ஆவார்.
மகாவீரரின் போதனைகள் :
நம்பிக்கை, நல்லுறவு, நன்னடத்தை ஆகிய முப்பெருவழிகளை கடைபிடிப்பது. எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும், உண்மையை மட்டும் பேச வேண்டும் , திருடாமை, பாலுணர்வு இன்பம் துய்காதிருத்தல், பணம் பொருள் சொத்துகள் மீது ஆசை கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று பல போதனைகளை சொல்லியுள்ளார்.
உண்மையை சொல்லப்போனால் மகாவீரர் அகிம்சையை தன்னுடைய கொள்கையாக போதித்த மாபெரும் சீர்த்திருத்தவாதியாக போற்றப்படுகிறார். இவரின் ரத்தினங்கள் நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் ஆகியவைவே அவை.
உயர்ந்த குணங்களே கடவுள் :
கடவுள் உலகை படைத்தார் என்ற கருத்தில் அவருக்கு நம்பிக்கையில்லை. உலகம் இயற்கையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
மனிதனிடத்தில மறைந்து கிடக்கும் உயர்ந்த குணங்களும் நற்பண்புகளே கடவுள் என்ற தன்மைகளாகும்.
இறப்பு :
சமண சமயத்தின் திருவுருவமாகவே வாழ்ந்த மகாவீரர் கி. மு. 527ல் பீகாரிலுள்ள “பாவா” என்னும் இடத்தில் தன்னுடைய 72வது வயதில் காலமானார்.