பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஷேர் சேட் மூலம் சம்பாதிக்க முடியும் என அனைவரும் தெரியும். ஆனால் Linkedin முலம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை தூத்துக்குடி இளைஞர் சுதர்சனம் கணபதி செய்து உள்ளார் .
இவர் தனி நபர் Linkedin கணக்குகளை கையாள ‘தி சோசியல் கம்பெனி’ என்ற நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்.
தொடக்கம் :
தூத்துக்குடி பிறந்த கணபதி படித்து வளர்ந்தது அனைத்துமே சென்னையில் தான். இவரின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சென்னைக்கு வரும் போது எதிர்பாராத விதமாக இறந்து விட்டார்.
பின் குடும்ப பொறுப்புகள் அனைத்தும் கணபதியின் தாயார் தலையில் விழுந்தது. பின் இவரின் அம்மா வேலை செய்து கணபதியையும் அவரது சகோதரரையும் இன்ஜினியரிங் படிக்க வைத்தார். பின் இவருக்கு பேராசிரியர் சங்கர் கணேஷ் கொடுத்த ஊக்கம் இவரை சொந்த தொழில் செய்ய ஊக்கவைத்தது.
டிசிஎஸ் உள்பட பல நிறுவனங்களில் வேலை கிடைத்தாலும் இவருக்கு சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் அவரது அம்மாவுக்கு இவருக்கு அடிக்கடி சண்டை நடக்கும்.
முருங்கையில் கோடிகளை அள்ளும் கரூர் பெண்
ஆரம்ப காலம் :
கொரோனா பாதிப்பு காலத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஷேர் சேட் போன்ற தலத்தில் இவர் மற்றவர்களின் கணக்கை கவனிக்கும் பணியை தொடங்கினார். பின் 2020ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த பாதிப்பு காரணமாக பல வாடிக்கையாளர்கள் தங்கள் சேவையை இவரிடம் இருந்து நிறுத்திக் கொண்டார்கள்.
இருப்பினும் மனம் தளராத கணபதி ஒரு Linkedin ப்ரொஃபைல் தொடங்கி முயற்ச்சி செய்தார். பிறகு 25,000 பாலோயர்கள் கிடைத்தனர்.
Linkedin பக்கத்தில் என்ன செய்யவேண்டும் என்பது மிக எளிதில் தெரியவந்தது. Linkedin பக்கத்தை எப்படி கையாள்வது என்பதையே ஒரு தொழிலாக மாற்றும் ஐடியா கிடைத்தது. இந்த ஐடியாவுக்கு வாடிக்கையாளர்களும் கிடைத்தனர்.
தொழில் பயணம் :
இதனை அடுத்து கணபதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக தொழில்துறையில் உள்ள பிரபலங்கள் வாடிக்கையாளர்களாக வர தொடங்கினர். பின் இவருக்கு பல நம்பிகையான வாடிக்கையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்பது மட்டுமே இவரது இலக்காக இருந்தது.
மற்ற சமூக வலைதளங்களை விட Linkedin சமூக வலைத்தளத்தில்
வாடிக்கையாளர்கள் குறைவு என்பதால் பணியும் மிக சவாலாக இவர்களுக்கு இருந்தது. பின் இவர்களுக்கு இந்த தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது.
வளர்ச்சி :
பின் இவர் ஒரு Linkedin பக்கத்தை பராமரிப்பதற்கு 3 மாதங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் என கட்டணம் வாங்கினார்.
பின் பல நிறுவன தலைவர்கள் இவரிடம் Linkedin பக்கத்தை புரமோஷன் செய்வதற்காக வருகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தற்போது கணபதி திருப்தியான சேவையை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.