விநாயகர் சதுர்த்தி வரலாறு

விநாயகர் சதுர்த்தி என்றால் நம்மில் பலருக்கு நியாபகம் வருவது, வீதியெங்கிலும் தற்காலிக குடில் அமைத்து, அதில் மண்ணால் செய்யப்பட்ட விநாயர் உருவச்சிலையை வைத்து வழிபட்டு 3 அல்லது 5 நாட்கள் கழித்து அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு எடுத்து சென்று  கரைப்பது.

ஆனால் அந்த வழிபாட்டிற்கு பின்னால் இருக்கும் புராண மற்றும் அறிவியல் காரணங்களை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம்.

விநாயகர் சதுர்த்தி கதை :

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தை விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடி வருகிறோம். அந்தநாளில் தான் விநாயகர் பிறந்ததாக புராணங்கள் சொல்கிறது. விநாயகர் எப்படி பிறந்தார் என்பதற்கு பல கதைகள் இருந்தாலும் பரவலாக ஒரு கதையை தான் பலரும் நம்புகின்றனர்.

புராணத்தில் சொல்லப்பட்டுள்ள காரணம் :

முன்காலத்தில் கஜகாசுரன் என்ற மன்னன் சிவபெருமானை வேண்டி கடுமையான தவமிருந்து வந்துள்ளான். அவனின் தவவலிமை கண்டு வியந்த சிவபெருமான், அவனுக்கு நேரில் காட்சியளிக்க விரும்பினார். அதன்படி கஜகாசுரன் முன்தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.

அதற்க்கு கஜகாசுரன், நீங்கள் லிங்க வடிவில் மாறி எனது வயிற்றிள் குடியேற வேண்டும் என்றான். வேறுவழில்லாமல் சிவபெருமானும் லிங்க வடிவில் கஜகாசுரன் வயிற்றில் குடியேறினார்.

இந்த செய்தியை தெரிந்துகொண்ட பார்வதி தேவி அதிர்ச்சி அடைந்து எப்படியாவது சிவபெருமானை மீட்கவேண்டும் என தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவிக்கு சென்றார்.

விஷ்ணு பகவான் நந்தியை அழைத்துக்கொண்டு, தெருக்கூத்து ஆடுபவர்கள் போல் வேடமிட்டு கஜகாசூரன் அரண்மனைக்கு சென்று நடனம் ஆடினார். நந்தியின் ஆட்டத்தில் மயங்கிய கஜகாசூரன் உனக்கு என்ன வேண்டும் கேள் என்றான்.

அதற்க்கு நந்தி கஜகாசுரனை பார்த்து பிடியில் இருக்கும் சிவபெருமானை விடுவிக்கவேண்டும் என்று கேட்டது. கொடுத்த வாக்கிற்காக சிவபெருமானை விடுவித்த கஜகாசூரன், சிவபெருமானிடம் தான் நிரந்தரமாக கைலாயத்தில் இருக்க வேண்டும் என்று கேட்டான்.

அதனை ஏற்றுக்கொண்ட சிவபெருமான்,கஜகாசுரனின் தலையை வெட்டி, அவனுக்கு பிறப்பும் இல்லாமல், இறப்பும் இல்லாமல் செய்தார்.

அதன்பிறகு தனது வாகனமான நந்தியில் ஏறி கைலாயம் புறப்பட்டார். இந்த தகவலை தெரிந்து கொண்ட பார்வதி தேவி சிவபெருமான் வருவதற்குள் தயாராக வேண்டும் என்று குளிப்பதற்கு குளம் நோக்கி சென்றார்.

அப்போது குளத்திற்கு பாதுகாப்பு யாரும் இல்லாததால் மஞ்சளை எடுத்து ஒரு மனித உருவம் செய்து அதற்க்கு உயிர் கொடுத்து தான் குளித்து முடித்து வரும் வரை யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று கட்டளையிட்டார்.

அதன் படி காவலில் இருந்த நேரத்தில் சிவபெருமான் வந்துவிட்டார். அவர் உள்ளே செல்லவேண்டும் என்று சொன்ன போது அவரை உள்ளே விடமறுத்து சண்டையிட்டுள்ளது மஞ்சள்.

அதனால் கோபமான சிவபெருமான் தனது சூலாயுதத்தை எடுத்து மஞ்சளின் தலையை கொய்துவிட்டார். அதற்குள் அங்கு வந்த பார்வதி தேவி நடந்ததை கேட்டு கடும்கோபத்திற்கு ஆளாகி இந்த உலகத்தையே அழிக்க முடிவு செய்துவிட்டார்.

அதிர்ச்சி அடைந்த  பிரம்ம தேவர் அப்படி எதுவும் செய்துவிடாதீர்கள் என்று பார்வதி தேவியிடம் கெஞ்சினார். உடனே பார்வதி தேவி அப்படியென்றால் விநாயகருக்கு மீண்டும் உயிர் கொடுத்து அவரை இன்று முதல் முழுமுதற் கடவுளாக ஏற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட சிவன். வடக்கில் தலைசாய்த்து முதலில் இறந்துகிடக்கும் ஒரு உயிரினத்தின்  தலையை கொண்டு வரச்சொன்னார்.

அதன் படி தேடிப்பார்த்தபோது ஒரு யானையின் தலை கிடைத்தது. அதனை அந்த சிறுவனின் தலையில் வைத்து அவனுக்கு சிவபெருமான் மீண்டும் உயிர் கொடுத்து விக்ரகங்களை தீர்க்க உருவாக்கப்பட்டதால் விநாயகர் என்று பெயரும் வைத்தார்கள்.

இப்படித்தான் விநாயகர் உருவானதாக சிவபுராணத்தில் சொல்லப்படுகிறது. அதனால் தான் காவலுக்காக குளக்கரை, ஆலமரத்தடி, தெருமுனைகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவதாகவும் சொல்லப்படுகிறது.

அறிவியல் காரணம் :

ஆடி ஆவணி மாதங்களில் அதிக அளவில் மழை பொழிந்து ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். வெள்ள நீர் வீணாய் ஓடி கடலில் கலக்கும். இப்படி கடலில் கலந்து வீணாகும் நீரை தேக்கி வைக்க அந்த காலத்தில் தொழில்நுட்பங்கள் இருந்திருக்கவில்லை.

அதனால் ஆவணி மாதம் சதுர்த்தி தினத்தன்று களிமண்ணால் விநாயகர் உருவம் செய்து வீட்டில் வைத்து வழிபட வேண்டும் என்றும், மூன்று நாட்கள் கழித்து அந்த களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் உருவத்தை ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் போட வேண்டும்.

களிமண் அதிகளவு நீரை உறிஞ்சி தன்னுள் வைத்துக்கொள்ளும் பண்புடையது. நீர் நிலைகளில் வீசப்படும் களிமண்-ஆனது நீரை உறிஞ்சி வைத்துக்கொள்வதால், அதிலிருந்து வெளியேறும் நீரின் அளவு குறைந்து அதிகளவு நீர் சேமிக்கப்படும்.

வீணாக கடலில் கலக்கும் நீரை தேக்கி பயன்படுத்த, விநாயகர் சதுர்த்தி என்று ஒரு பழக்கம் கடவுள் நம்பிக்கையாக உருவாக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த கட்டுரையை கீழ்கண்டவாறு இணையத்தில் தேடலாம் :

why is ganesh chaturthi celebrated, ganesh chaturthi essay, விநாயகர் சதுர்த்தி கதை, விநாயகர் சதுர்த்தி எதற்காக கொண்டாடப்படுகிறது, விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன, விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை, விநாயகர் சதுர்த்தி வரலாறு, விநாயகர் சதுர்த்தி புராணம்.

Leave a Comment