Infosys N.r. Narayana Murthy History in Tamil – இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்கை வரலாறு

கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் என். ஆர். நாராயண மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தை 1981 ஆம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இன்ஃபோசிஸ் என்ற பெயரில் பல அறக்கட்டளையை தொடங்கி, கல்வி,மருத்துவம் என பல சமூகப் சேவையும் செய்து வருகிறார்.

அவருக்கு இந்திய அரசு அவருடைய சேவையை பாராட்டி, பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதை வழங்கி உள்ளது. எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தன்னுடைய தொழிலை தொடங்கி,உலகமே திரும்பி பார்க்கும் வகையில் அந்த துறையில் வளர்ந்து நிற்கும் ஆர். நாராயண மூர்த்தியின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

20 ஆம் தேதி 1946 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரில் என். ஆர். நாராயண மூர்த்தி என். ராமராவ் மற்றும் படவதம்மா மூர்த்திக்கு மகனாக பிறந்தார்.

திருபாய் அம்பானி வாழ்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு 1967 ஆம் ஆண்டு நாராயண மூர்த்தியின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங் மின் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார். அதற்க்கு பிறகு கான்பூரில் உள்ள ஐஐடி-யில் 1969 ஆம் ஆண்டு மின்னணு பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். .

அவருடைய கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு , அகமதாபாத்திலுள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சிறிது காலம் தன்னுடைய பணியைத் தொடர்ந்த அவர், 1972 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்க்கு சென்று எஸ்.இ.எஸ்.ஏ என்ற நிறுவனத்தில் சிறுது காலம் பணியாற்றி பின்பு இந்தியா திரும்பினார்.

தனிப்பட்ட வாழ்க்கை :

என். ஆர். நாராயண மூர்த்தி சுதா மூர்த்தி என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அக்ஷதா மூர்த்தி என்ற மகளும் மற்றும் ரோஹன் மூர்த்தி என்ற மகனும் பிறந்தார்கள்.

இன்ஃபோசிஸ் நிறுவனம் :

கையில் ரூ. 10,000 பணத்துடன் ஜூலை 2 ஆம் தேதி 1981 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை புனேவில் தொடங்கிய நாராயண மூர்த்தியின். அடுத்த ஆண்டே பெங்களூரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். விரைவில் அதுவே அவர் தலைமை அலுவலகமாகவும் மாறியது.

குறுகிய காலத்தில் தன் முயற்சியால் அந்த நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ந்தது. பலரும் இந்த நிறுவனத்தை பாராட்டி பத்திரிக்கையில் எழுதினார்கள்.

இந்தியா மட்டுமல்லாமல், உலகம்முழுவதும் சுமார் 22 நாடுகளில் செயல்படும் இந்த நிறுவனம் 2003, 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கான குளோபல் விருதையும் பெற்றது. இவ்விருதினை பெற்ற ஒரே இந்திய நிறுவனம் இன்ஃபோசிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக அக்கறை :

என். ஆர். நாராயண மூர்த்தி தொழில் மட்டும் இல்லாமல் அவரது நேரத்தை சமூக சேவையிலும் ஈடுபடுத்தி கொண்டார். 1996 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் என்ற பெயரில் அறக்கட்டளையை கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, ஒரிசா, பஞ்சாப் என பல இடத்தில் தொடங்கி அனைத்து மக்களுக்கும் கல்வி,சமூக சீரமைப்பு,கிராமப்புற மேம்பாடு, உடல்நலம் பேணுதல் என பல உதவியை செய்து உள்ளார்.

சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் புதிய கனவுகள், புதிய இந்தியா என புத்தகம் எழுதி 2010 ஆம் ஆண்டு வெளியிட்டார். நமது நாட்டிலேயே மிகச் சிறந்த தொழில் அறிஞர்களை உருவாக்கக்கூடிய தரமான பள்ளிகளையும், கல்லூரிகளையும் உருவாக்க நினைத்த அவர், இந்தியாவின் தொழில்துறை, கல்வித்துறை, அரசுத்துறை அனைத்தும் சரியான முறையில் செயல் பட்டாள் உலகப் பொருளாதாரம் இந்தியாவையும் சார்ந்திருக்கும் எனவும் அரசாங்கத்து இடம் வலியுறுத்தினார்.

இதனால் தான் இவர் சேவையை பாராட்டி பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவருக்கு பிடித்த தொழிலதிபர் ரத்தன் டாடா ஆகையால் அவரை போல இவரும் இருக்கஆசை படுகிறார்.

விருதுகள் :

2000 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது மற்றும் கவர்மென்ட் ஆஃப் யுனைடெட் கிங்டம் மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய ஒழுங்கின் தளபதி விருது அளிக்கப்பட்டது .

2008 ஆம் ஆண்டு பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து ஆபீசர்ஸ் ஆஃப் தி லெஜன்ட் ஆஃப் ஆனர் மற்றும் மத்திய அரசிடம் இருந்து பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டது .

2010 ஆம் ஆண்டு இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் மூலம் ஐ.இ.இ.இ கௌரவ உறுப்பினர் பதவி.

2011 ஆம் ஆண்டு என்டிடிவி மூலம் என்டிடிவி இந்தியன் ஆப் தி யியர்ஸ் ஐகான் ஆஃப் இந்தியா.

2012 ஆம் ஆண்டுஅமெரிக்க அரசிடம் இருந்து ஹூவர் பதக்கம்.

2013 ஆம் ஆண்டுஆசிய கொடையாளர் விருது மற்றும் பரோடா மேலாண்மை கழகத்திடம் இருந்து சாயாஜி ரத்னா விருது.

Leave a Comment