Actor Ajith Kumar History in Tamil – நடிகர் அஜித் குமார் வாழ்க்கை வரலாறு

அஜித் குமார் தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள முன்னணி நடிகர் ஆவார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் சொந்த முயற்ச்சியால் தமிழ் சினிமாவில் நுழைந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து நல்ல நடிகர் என்று போற்றப்பட்டார். அவரை ரசிகர்கள் அனைவரும் அல்டிமேட் ஸ்டார் என்று அழைக்கிறார்கள்.

இவரது திரைப்படங்களுக்கு தமிழ் மற்றும் பல மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்பும் மிக பெரிய வரவேற்பும் உள்ளது. இவருக்கு கார், பைக் பிடிக்கும். இவர் உலகளவில் பல போட்டிகளில் பங்குபெற்ற எஃப் 1 ரேஸர் வீரர் மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கு பெற்று புகழ் பெற்றுள்ளார். பல திறமைகள் கொண்ட அஜித் குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

அஜீத் குமார் ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில் மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டு சுப்ரமணியம் மற்றும் மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார்.

அஜீத் குமார் அண்ணனான அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.

ஷாருக்கான் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் :

அஜீத் குமார் ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும் அவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் தான் வளர்ந்தார். சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், படிப்பின் மீது ஆர்வம் இல்லாததால்.பெற்றோர்களின் விருப்பத்தையும் எதிர்த்துத் தனது பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார்.

ஆரம்பகாலப் பணிகள் :

பள்ளிக்கு போக மறுத்த பிறகு.இரு சக்கர பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார். இவருக்கு சிறு வயதில் இருந்தே பைக், கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.இதனால் பைக் பந்தய தொழிலை தேர்ந்தெடுத்த அவர்.

அதில் கலந்து கொள்ளப் பணம் தேவைப்பட்டதால் சில பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார்.

அந்த நேரம் அவருக்குப் பல திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. அவர் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால், சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

திரையுலக வாழ்க்கை :

அஜித் குமார், 1992 ஆம் ஆண்டு பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் தான் அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து பாசமலர்கள், பவித்ரா என பல படங்கள் நடித்தார்.

ஆனால் அவருக்கு முதல் வெற்றித் திரைப்படம் ஆசை திரைப்படமாகும். அதன் பிறகு தனது இயல்பான மற்றும் இயற்கையான நடிப்பில் ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற அஜீத் குமார் அவர்கள், தொடர்ந்து வான்மதி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, காதல் கோட்டை, காதல் மன்னன் என பல
படங்கள் நடித்து வெற்றிப்பெற்றார்.

இவர் நடித்த மங்காத்தா,பில்லா போன்ற படங்களால் மாபெரும் இடத்தை பிடித்தார். இன்று திரையுலகில் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவருக்கும் தான் போட்டி நிலவி வருகிறது.

இல்லற வாழ்க்கை :

1999 ஆம் ஆண்டு ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார்.

ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால் 2000 ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் தனது திரையுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றார் ஷாலினி. இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற
மகனும் பிறந்தார்கள்.

பந்தய வாழ்க்கை :

தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட அவர். ஆந்திரா, கேரளா, மும்பை, சென்னை, தில்லி போன்ற இடங்களில் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்றுள்ளார். ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையை அஜித்குமாரை சேரும்.

ஜெர்மனி, மலேஷியா என பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட இவர், ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார்.

2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில்
கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுகள் :

2001 ஆம் ஆண்டு பூவெல்லாம் உன் வாசம் என்ற படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை வென்றார்.

2006 ஆம் ஆண்டு வரலாறு படத்திற்காக தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை வென்றார்.

சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதை வாலி மற்றும் சிட்டிசன் படத்திற்காகவும் வென்றார்.

சிறந்த தமிழ் நடிகருக்கான சென்னை டைம்ஸ் விருதை மங்காத்தா படத்திற்காக பெற்றார்.

ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாலி, வில்லன், வரலாறு, பில்லா படத்திற்காகவும் அவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Comment