Saroja Devi History in Tamil – சரோஜாதேவி வாழ்க்கை வரலாறு

தன்னுடைய முதல் படத்திலேயே கதாநாயகியாகத் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, தென்னிந்திய ரசிகர்களால் ‘கன்னடத்து பைங்கிளி’ மற்றும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் போற்றப்பட்ட சரோஜாதேவி. சுமார் 200–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசால் இவருக்கு ‘பத்ம ஸ்ரீ’, மற்றும் ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். சரோஜாதேவி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

சரோஜாதேவி அவர்கள், ஜனவரி 07 ஆம் நாள் 1938 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் பைரப்பா என்பவருக்கும், ருத்ரம்மாவிற்கும் நான்காவது மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

சரோஜாதேவி பெங்களூரில் உள்ள புனித தெரசா பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். அப்பொழுது ஒரு இசைப்போட்டியில் இந்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு ஹன்னப்ப பாகவதர் வந்திருந்தார். சரோஜாதேவியின் பாடலைக் கேட்ட அவர் சினிமாவில் பாட வைக்கலாம் என நினைத்து ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றார்.

பிறகு சரோஜாதேவியை ஹன்னப்ப பாகவதர் தான் தயாரித்த மகாகவி காளிதாஸ் என்ற கன்னடப் படத்தில், கதாநாயகியாக சரோஜாதேவியை சினிமாத் துறையில் முதன் முதலாக அறிமும் செய்தார். 1955 ஆம் ஆண்டு ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம் .

இதனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. குறுகிய
காலத்திற்குள் தமிழ்,தெலுங்கு என பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை :

1967 ஆம் ஆண்டு ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவரின் கணவர் ஸ்ரீஹர்ஷா பி.ஈ பட்டம் பெற்ற ஒரு என்ஜினியர் ஆவார்.

சரோஜாதேவியின் தமிழ் திரைப்படத்துறை :

கன்னடத்தில் அவர் நடித்த முதல் படத்திலேயே கதாநாயகியாகப் புகழ்பெற்ற அவர், 1958 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் எம்.ஜி.ஆர் உடன் 28 படங்களிலும் சிவாஜி கணேசன் உடன் 27 படங்களிலும் நடித்துள்ளாா் பின்பு ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரவிசந்திரன், ஆகிய பிரபல நடிகர்கள் உடன் நடித்துள்ளாா்.

தமிழ் சினிமாவில் சரோஜாதேவிக்கு ஒரு அங்கீகாரத்தைப் தேடித்தந்த படம், எம்.ஜி.ஆர் தயாரிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் திரைப்படமாகும். இவர் தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வெற்றிக் கொடி நாட்டினார்.

விருதுகள் :

1969 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது.

1980 ஆம் ஆண்டு கர்நாடக அரசால் அபினண்டன் காஞ்சனா மாலா விருது.

1989 ஆம் ஆண்டுகர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது.

1992 ஆம் ஆண்டுமத்திய அரசால் பத்ம பூஷன் விருது.

1997 ஆம் ஆண்டு தமிழக அரசால் எம்.ஜி.ஆர் விருது.

2001 ஆம் ஆண்டு ஆந்திர அரசால் என்.டி.ஆர் தேசிய விருது.

2008 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான இந்திய அரசின் தேசிய விருது.

2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது.

Leave a Comment