K. J. Yesudas History in Tamil – கே.ஜே. யேசுதாஸ் வாழ்க்கை வரலாறு

மலையாள மண்ணில் பிறந்து , இசை தாய்க்கு பிள்ளையான யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் தனது கந்தர்வக் குரலால் நிரந்தர இடம் பிடித்த அவர்.

சுமார் 50 ஆண்டுக்காலம் இசைப் பணியாற்றி வரும் இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, மலையாளம், இந்தி, பஞ்சாபி, வங்காளம், அரேபிய மொழி,லத்தீன், ஆங்கிலம் என உலகில் உள்ள பல மொழிகளில் பாடியுள்ளார்.

இவர் 35,000க்கும் மேல் பாடல்களைப் பாடியுள்ளார். இவருக்கு இந்தியா அரசின் மிக உயரிய விருதான பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஏழு தேசிய விருதுகளையும் பெற்றார். இவ்வாறு புகழ்பெற்று விளங்கும் கே.ஜே. யேசுதாஸின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

கே. ஜே. யேசுதாஸ் ஆகஸ்டைன் யோசப்புக்கும், அலைசுகுட்டிக்கும் 1940 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி கேரளா மாநிலத்திலுள்ள கொச்சி என்ற இடத்தில் மகனாக பிறந்தார். கே. ஜே. யேசுதாஸ் இயற்பெயர் கட்டசேரி யோசப் யேசுதாஸ். இவர் தந்தை மலையாள சினிமா துறையில் செவ்விசைக் கலைஞர் மற்றும் நடிகரும் ஆவார்.

நடிகர் அஜித் குமார் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

ஐந்து வயதில் இருந்தே யேசுதாஸ்க்கு இசையின் ஆரம்பப் பாடல்களை அவருடைய தந்தை கற்றுக் கொடுத்தார். அவர் தந்தை பல ஆண்டுகள் இவருக்கு பயிற்ச்சி அளித்தார்.

பிறகு ஆர்.எல்.வி. மியூசிக் அகாடமியில் அவர் தந்தை இவரை சேர்த்துவிட்டார். பின் உயர் கல்விக்காக திருவனந்தபுரத்திலுள்ள இசைக்கல்லூரியில் சேர்ந்த யேசுதாஸ் பணம் இல்லாததால் பாதியிலேயே வெளியேறினார்.

திரைப்படத்துறையில் யேசுதாஸின் பயணம் :

1960 ஆம் ஆண்டு திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய யேசுதாஸ் மலையாளத் திரைப்படத்தில் முதல் பாடலைப் பாடினார்.தமிழ்த் திரைப்படங்களில் எஸ். பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக “நீயும் பொம்மை, நானும் பொம்மை” என்ற பாடல் மூலம் அறிமுகமானார்.

பிறகு 1970ல் இந்தித் திரைப்படத்துறையில் “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். ஆனால் அவர் பாடி வெளிவந்த முதல் படம் இந்திப் படமான சோட்டி சி பாத் என்பதாகும்.

அதற்க்கு பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம்,ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி சாதனைப் படைத்தார்.

2006ஆம் ஆண்டு சென்னை ஏவிஎம் அரங்கில் ஒரேநாளில் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் 16 திரைப்படப் பாடல்களை பாடி சாதனை நிகழ்த்தினார்.

தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் :

இவர் ஏழு முறை தேசிய விருது வாங்கியுள்ளார். தொடக்கத்தில் ஒரு சில பாடல்களைத் தமிழ் திரைப்படங்களில் பாடியிருந்தாலும் திரைப்படத்தில் ‘விழியே கதையெழுது’, ‘தண்ணித் தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்’,‘ராஜ ராஜ சோழன் நான்’, ‘பூவே செம்பூவே’ பாடல் யேசுதாஸை தமிழில் மிகவும் பிரபலமாக்கியது.

இல்லற வாழ்க்கை :

யேசுதாஸ் அவர்கள், பிரபா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு வினோத், விஜய் மற்றும் விஷால் என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.

விருதுகள் :

1975 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது.
கௌரவ டாக்டர் பட்டம் – அண்ணாமலை பல்கலைக்கழகம், கேரளா பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்.

1992 ஆம் ஆண்டு இசைப்பேரரிஞர் விருது.

1992 ஆம் ஆண்டு சங்கீத் நாடக அகாடமி விருது.

2002 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது.

2003 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது.

ஏழு முறை தேசிய விருதினை வென்றார்.


Leave a Comment