Tamil Quotes

A.R. Rahman History in Tamil – ஏ.ஆர். ரகுமான் வாழ்க்கை வரலாறு

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் என்று அழைக்கப்படும் ஆஸ்கார் நாயகன் நமது தமிழ் நாட்டில் பிறந்து இன்று தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு, ஸ்லம் டாக் மில்லியனர் என்ற இந்தி திரைப்படத்திற்காக, 2ஆஸ்கார் விருதுகளை வென்றார்.

தமிழ்நாட்டு இசை பாணி என்று பல பாணிகளை ஒன்று கலந்த ஒரு வித்தியாசமான இசை மக்களை ஈர்த்தது. தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்திய மக்களையும் தன் இசை திறமையால் கவர்ந்த இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

இசைக்கென்றே தன்னை அர்ப்பணித்த இசை வேந்தன் ஏ.ஆர்.ரஹ்மான் 1966 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி ஆர்.கே.சேகர் – கஸ்தூரி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தை மலையாள இசைத் துறையில் பணியாற்றி வந்தார்.

இளையராஜா வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

ஏ.ஆர். ரகுமான் தந்தை இவரின் சிறு வயதிலேயே காலமானார். இதனால் குடும்ப சூழ்நிலைக் காரணமாக தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதில் வரும் வருமானத்தை வைத்து இசை கற்க தொடங்கினார்.

இவருடைய சகோதரி நோயால் இருக்கும் போது, ஒரு முஸ்லீம் நண்பனின் ஆலோசனையின் படி மசூதி சென்று பிரார்த்தனை செய்தார். பின் இவருடைய சகோதரி நோயிலிருந்து குணமாகினார்.

இதனால் இவருடைய குடும்பம் முழுமையாக இஸ்லாமிய மதத்திற்கு மாறியது. அப்பொழுது தான் இவருடைய திலீப்குமார் என்ற பெயரை ஏ.ஆர். ரகுமான் என்று மாற்றிக் கொண்டார்.

இசை பயணம் :

தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டு 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார்.

பின் இரவு பகலாக உழைத்து 1992 ஆம் ஆண்டு அவரின் முதல் படமான ‘ரோஜா’ வில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு பெரும் பெயரை தந்தது.

பின் 25 வருட திரைப்பட வாழ்வில் தமிழ், இந்தி, தெலுங்கு, சீனா, ஆங்கில என பல படங்களின் மூலம் புதிய இசையை உலக மக்களுக்கு வழங்கி இசையை ரசிக்க வைத்தார். பல மொழித்திரைபடங்களுக்கும் இசையமைத்த இவர் “இசைப்புயல்” எனவும் அழைக்கப்பட்டார்.

இல்லற வாழ்க்கை :

ஏ. ஆர். ரகுமான் 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏ.ஆர். அமீன் என்ற மகனும். கதீஜா ரஹ்மான், ரஹிமா ரஹ்மான் என்ற இரு மகளும் பிறந்தனர்.

சாதனைகள் :

1997 ஆம் ஆண்டு, ‘மின்சாரக் கண்ணா’ என்ற தமிழ் திரைப்படத்திற்கு தேசியவிருது.


2002 ஆம் ஆண்டு ‘லகான்’ என்ற தமிழ் திரைப்படத்திற்கு தேசியவிருது.


2003 ஆம் ஆண்டு ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ தமிழ் திரைப்படத்திற்கும் தேசியவிருது.


ரோஜா திரைப்படத்திற்கு இசையமைத்தற்காக “தேசியவிருது” மற்றும் “பிலிம்பேர்” விருது.


ஜென்டில்மேன் படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருது.


காதலன் படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருது.


மின்சார கனவு படத்திற்காக “தமிழ்நாடு மாநில விருது” மற்றும் “பிலிம்பேர்” விருது.

ஆஸ்கார் விருதுபெற்ற ஸ்லம் டாக் மில்லியனியர் :

‘ஆஸ்கர்’ என்பது ஆங்கில படங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பரிசு. அதை உலக நாடுகளுக்கும் வழங்க ஆஸ்கர் கமிட்டி கொடுக்க முன் வந்த போது இந்தியா சினிமாக்காரர்களும் அதை பெறுவதை. தங்கள் வாழ்நாள் கனவாக நினைத்தனர்.

ஆனால் 2008 ஆம் ஆண்டு, A.R.ரஹ்மான் இசையமைத்து வெளிவந்த “ஸ்லம் டாக் மில்லியனர்” என்ற திரைப்படம் இவருக்கு திரைப்படத்துறையில் மிகப்பெரிய விருதான “ஆஸ்கார் விருதை” 2009 ஆம் ஆண்டு பெற்றுத் தந்தது.

“எல்லாப் புகழும் இறைவனுக்கே” என தமிழில் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, தமிழ் மக்கள் அவரை வாழ்த்தினர். இரண்டு ஆஸ்கார் விருதை பெற்று, இந்தியாவின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றார். பல விருதுகள் பெற்றுள்ளார்.

ரஹ்மானின் குணங்கள் :

எளிமையானவர், நேர்மையானவர், அமைதியானவர், இறைப்பற்று மிக்கவர், தாய் பற்று உள்ளவர், ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை இன்றும் செய்து வருகிறார்.


தான் துவக்கிய இசைக்கல்லூரியில் இசை ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாய் கற்றுத் தருகிறார். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் தன் இயல்பான குணம் மாறாதவர், பண்புள்ளவர்.

ஆல்பம் :

1989 ஆம் ஆண்டு தீன் இசை மாலை என்ற இவரின் முதல் ஆல்பத்தை வெளியிட்டார்.

பின் ஆண்டுகள் கழித்து 1997 ஆம் ஆண்டு வெளிவந்த வந்தே மாதரம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

பின்னர், இந்தியா, ஹாங்காங், அமெரிக்கா, ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட “இன்ஃபினிட் லவ்” என்ற ஆல்பம் உலகின் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

ரஹ்மானின் விருதுகள் :

தேசிய விருதுகள் மொத்தம் 4 (ரோஜா, மின்சாரகனவு, லாகன், கன்னத்தில் முத்தமிட்டால்).

1997 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ.

பிலிம்பேர் விருதுகள் 13 .

பிலிம்பேர் (சவுத்) விருதுகள் 12.

தமிழக திரைப்பட விருது 6.


20 ஆண்டு கால உழைப்பை பாராட்டி பெர்கலின் இசை பல்கலைக் கழகம் வழங்கிய ‘டாக்டர்’ பட்டம்.

ஆஸ்கர் விருதுகள் (2)

கோல்டன் குளோப் விருது. உத்திப் பிரதேசம் அலிகர் பல்கலைக் கழகம் வழங்கிய ‘டாக்டர்’ பட்டம்.

2010 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது.

2013 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது.

Exit mobile version