Viswanathan Anand History in Tamil – விசுவநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு

விசுவநாதன் ஆனந்த் ஓர் இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மற்றும் முன்னாள் உலக சதுரங்க வாகையாளர் ஆவார். இவர் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை ஐந்து முறை வென்றுள்ளார்.

உலக சதுரங்க வரலாற்றில் 2800 ஈலோ புள்ளிகளைத் எட்டிய முதல் இந்தியர் ஆனந்த்.


இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சதுரங்கத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளார்.

இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், ராஜீவ்காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது எனப், பல்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

18 வயதில் உலக சதுரங்க ஜூனியர் சாம்பியன் பட்டம், 5 முறை உலக சாம்பியன் பட்டம் என வென்று சதுரங்க விளையாட்டின் வரலாற்றில், இந்தியாவின் பெருமையை இமயம் தொடச் செய்தார்.

உலகளவில் சதுரங்கப் விளையாட்டில் இன்று வரை முடிசூடா மன்னனாக திகழ்ந்துவரும் விசுவநாதன் ஆனந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1969 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மயிலாடுதுறையில் தந்தை விஸ்வநாதன் அய்யர், தாயார் சுசீலாவிற்கும் மகனாகப் பிறந்தார் விசுவநாதன் ஆனந்த்.

ராகுல்காந்தி வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

இவரது தாயார் சுசீலா ஒரு இல்லத்தரசி ஆவார்.அவர் ஒரு சதுரங்க ஆர்வலராகவும், செல்வாக்கு மிக்க சமூக ஆர்வலராகவும் இருந்தார்.

இவர் பள்ளிப்படிப்பை எழும்பூரிலுள்ள டான் போஸ்கோ பள்ளியில் முடித்தார். பின், உயர்க்கல்வி பி.காம் பயில லயோலா கல்லூரியில் சேர்ந்தார்.

ஆனந்தின் முதல் பயணம் :

சிறுவயதில் இருந்தே அவருக்கு சதுரங்கம் விளையாடுவதில் ஆர்வம் இருந்ததால் தனது 14 வயதிலேயே தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துக்கொண்டு சாம்பியன் பட்டம் வென்றார்.

வெற்றிப் பயணம் :

1987 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் சதுரங்கப் போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.1988 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் முதல் ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆனார்.

பின் பல போராட்டம் வெற்றிகளை தாண்டி 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சதுரங்க இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் ‘அலெக்ஸீ ஷீரோவை’ வீழ்த்தி ‘உலக சாம்பியன் பட்டம்’ வென்று சாதனைப்படைத்தார்.

உலக அதிவேக சதுரங்க வெற்றிவீரர் பட்டத்தை வென்று. 2005 ஆம் ஆண்டு உலக சதுரங்கப் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்தார்.

பின்னர், 2007 ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற உலக சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்..

2010 –ல் பல்கேரியாவின் தலைநகர் சோபியாவில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

2012 ஆம் ஆண்டு உருசியத் தலைநகர் மாஸ்கோவில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

2013,2014,2017 மீண்டும் சாம்பியன் பட்டத்தினை வென்று உலக சாதனைப் படைத்தார்.

இல்லற வாழ்க்கை :

விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள், 1996 ஆம் ஆண்டு அருணா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, இவர்களுக்கு அகில் என்ற ஆண்குழந்தை பிறந்தார்.

விருதுகள் :

1985 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது.

1987 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது.

1987 ஆம் ஆண்டிற்கான, தேசிய குடிமகன் மற்றும் சோவியத் லேண்ட் நேரு விருது.

1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுக்கான, ராஜீவ்காந்தி கோல் ரத்னா விருது.

1998 ஆம் ஆண்டு பிரித்தானிய சதுரங்கக் கூட்டமைப்பின், புக் ஆஃப் தி இயர் விருது.

2000 ஆம் ஆண்டு மத்திய அரசால் பத்ம பூஷன் விருது.

1997, 1998, 2003, 2004, 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான, சதுரங்க ஆஸ்கார் விருது.

2007 ஆம் ஆண்டு இந்திய அரசால் பத்ம விபூஷன் விருது.

Leave a Comment