விரேந்தர் சேவாக் பெயரை கேட்டதும் மிரளாத பௌலர்களே இருக்க முடியாது. மெக்ராத்,சோயப் அக்தர் போன்ற உலகின் மிக துல்லியமான பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, மிக வேகமான பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி சேவாக் பேட்டிங் கிரீசில் இருந்தால் நிச்சயம் முதல் பந்து பவுண்டரியை தொடும்.
![](https://thumbnailsave.in/wp-content/uploads/2023/06/Virender-Sehwag.jpg)
படிப்பைவிட கிரிக்கெட்டில்தான் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.1998-ல் ஒருநாள் போட்டிகளிலும், 2001-ல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் முதன்முதலாக விளையாடினார்.விரேந்தர் சேவாக் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு :
தில்லியில், நஜஃப்கட் என்ற இடத்தில் 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 20 தேதி பிறந்தவர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :
தில்லியில், நஜஃப்கட் என்ற இடத்தில் பிறந்த சேவாக். ஆரம்பக் கல்வி முடித்து, விகாஸ்பூர் மேல் நிலைப்பள்ளியிலும் பின்னர் ஜாமிய மில்லியா இஸ்லாமிய ஆண்கள் பல்கலைக்கழகத்திலும் பயின்றார்.
படிப்பைவிட கிரிக்கெட்டில்தான் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் பல முறை பள்ளிக்கு செல்லாமல் மைதானத்திற்க்கு சென்று இருக்கிறார். சிறு வயதில் இருந்தே பயம் அறியாத பிள்ளையாக வளர்ந்த சேவாக் சச்சின் டெண்டுல்கராக வேண்டும் என்ற லட்சியம் கொண் டிருந்தார்.
கிரிக்கெட் பயணம் :
1999 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2001 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் முதன்முதலாக விளையாடினார். அதிரடி மன்னனாக இருந்த சேவாக் ஆட்டத்தில் பதற்றமான சூழலாக இருந்தாலும் சரி, வலிமைமிக்க எதிரணியோடு விளையாடும்போது சரி, பதற்றிமின்றி விளையாடுவார்.
சாதனை புரிய வேண்டும் என்பதற்காகத் தன் அதிரடி ஆட்டத்தை விட்டுக் கொடுத்ததே இல்லை. ஒருமுறை 195 ரன்கள் இருக்கும்போது நிதானமாக ஆடி, இரட்டை சதம் அடிக்கலாம் என்று நினைக்காமல் அடுத்த பந்தில் சிக்சருக்கு முயல, அவுட் ஆனார்.
ஆனால் அதை பற்றி சிறு துளி கூட கவலை படமாட்டார்.இந்தியா அணியில் முச்சதம் அடித்த முதல் வீரர் சேவாக்.2004-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 309 ரன்களையும், 2008-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 319 ரன்களையும் எடுத்தார்.
ஒருநாள் போட்டியிலும் இரட்டை சதம் அடித்துள்ளார்.2011 உலக கோப்பை தொடரில், இந்திய அணி விளையாடிய முதல் ஐந்து போட்டிகளிலும், முதலாவது பந்தில் நான்கு ஓட்டங்கள் எடுத்து ரசிகர்களை உற்சாகமடைய வைத்தார். சேவாக் ஆடுவதை சச்சின் டெண்டுல்கர் ரசித்து எப்பொழுதும் பார்ப்பார்.
சர்வதேச சாதனைகள் :
குறைவான பந்துகளில் 250 ஓட்டங்களை 207 பந்துகள் கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம்.
குறைவான பந்துகளில் 300 ஓட்டங்களை 278 பந்துகள் கடந்தவர்கள் பட்டியலில் முதலிடம்.
சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவர் மட்டுமே தேர்வு போட்டிகளில் ஆறு முறை இருநூறு ஓட்டங்களை கடந்துள்ள இந்தியர்களாவர்.
சர்வதேச தேர்வு போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் இருநூறு ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைப் பெற்ற முதல் வீரர் ஆவார்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் :
டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக இருந்த சேவாக், பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவதற்காக மூன்றாவது பருவத்தில் அணித்தலைவர் பதவியை கவுதம் கம்பீரிடம் விட்டுக் கொடுத்தார்.
ஆனால் நான்காவது பருவத்தில் கவுதம் கம்பீர் வேறு அணிக்கு சென்று விட்டதால் இவர் மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐந்தாவது பருவத்தில் பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஐந்துமுறை அரைசதம் அடித்து அசத்தினார். இவர் 104 போட்டிகள் விளையாடி 2728 ரன்கள் அடித்து உள்ளார்.
கடைசி போட்டிகள் :
கடைசி டெஸ்ட் போட்டி 2013 ஆம் ஆண்டு மார்ச் 02.
கடைசி ஒரு நாள் போட்டி 2013 ஆம் ஆண்டு ஜனவரி 03.
கடைசி ஐபில் போட்டி 2015 ஆம் ஆண்டு மே 03.
விருதுகள் :
2002 ஆம் ஆண்டு அருச்சுனா விருது.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு உலகின் விஸ்டன் முன்னணி வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
2010 ஆம் ஆண்டு ஐசிசி யின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
2010 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது