P.T.USHA History in Tamil – பி. டி. உஷா வாழ்க்கை வரலாறு

ஒலிம்பிக்கில் நுழைந்த முதல் இந்தியப் பெண்மணி, பதக்கத்தைத் தவறவிட்ட போதிலும் கோடிக்கணக்கான இந்திய இதயங்களை வென்றவர். விளையாட்டுலகில் ஒரு தனியிடத்தைப் பிடித்தவர்.

1985 மற்றும் 1986 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டளர்களில் ஒருவராக இருந்தார் இவர். சர்வதேச அரங்கில் தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த இவரை இந்தியாவின் தங்க மங்கை எனவும், பய்யொலி எக்ஸ்பிரஸ் எனவும் சொல்வார்கள்.

இந்தியத் தடகள விளையாட்டுகளில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராக கருதப்படும் பி. டி. உஷா அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி கேரளா மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் பைத்தல் என்பவருக்கும், இலட்சுக்கும் மகளாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டதால் தன்னுடைய பள்ளியில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் இவர் கலந்து கொள்வார். 1976ல் கேரள அரசால் துவங்கப்பட்ட பெண் களுக்கான விளையாட்டுப் பள்ளியில் தனது மாநிலத்தின் சார்பாய் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப் பட்டார்.

1977-ஆம் ஆண்டு தனது 13 வயதில் முதல் தேசிய சாதனையை மேற்கொண்டார். 1979-ல் தேசியப் பள்ளி களுக்கிடையே நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதன் மூலம் ஓ.எம். நம்பியார் அவர் களின் அறிமுகம் கிடைத்தது. அவரே உஷாவின் நீண்ட காலப் பயிற்சியாளராய் திகழ்ந்தார்.

விரேந்தர் சேவாக் வாழ்க்கை வரலாறு

சர்வதேச அளவில் அவரின் சாதனைகள் :

உஷா ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்ட காலம் ஆண்கள் பெண்களை ஓடிக்கிய காலம். ஆனால் இவர் தேசிய அளவில் பல தடகளப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்றார்.

1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தோற்றாலும் மீண்டும் குவைத்தில் நடந்த சாம்பியன் தடகளப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று புதிய சாதனைப் படைத்தார்.

1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 23வது ஒலிம்பிக் இறுதி போட்டியில் தோற்றாலும் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் இறுதிபோட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய விராங்கனை என்ற சிறப்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டப்பந்தயத்தில் அவரே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார்.

ஆனால் இவரோட அயராது முயற்சியில். 1986ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டம் என அனைத்திலும் முழு ஆதிக்கம் செலுத்தி, தங்கம் வென்றதோடு மட்டுமல்லாமல், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று வெற்றிவாகை சூட்டினார்.


அதற்க்கு பிறகு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கொடிகட்டிப் பறந்தார். 1983 முதல் 1989 வரையிலான ஆண்டுகளில் பல்வேறு தடகளப் போட்டிகளில் பங்கேற்ற அவர், சுமார் 13 தங்கப்பதக்கங்களை வென்றார்.

இல்லற வாழ்க்கை :

1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் நாள் சீனிவாசன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சீனிவாசன் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக விளங்கினார்.

திருமணத்திற்குப் பிறகு, கணவர் அளித்த ஊக்கத்தின் காரணமாக மீண்டும் 3 ஆண்டுகள் பிறகு தடகள போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார். பின் மிண்டும் 1998 ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த தடகளப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசியப் போட்டிகளில் மட்டும் 30 பதக்கங்களை வென்ற பி. டி. உஷா அவர்கள், இதுவரை 100க்கும் அதிகமான பதக்கங்களை வென்று சாதனைப் படைத்தார்.

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு :

36வது வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சுமார் 20 ஆண்டுகளாகத் தடகளப் போட்டிகளில் பங்கேற்று,பல சாதனைகளைப் படைத்து, இந்திய விளையாட்டுத் துறைக்கு அறிய பங்காற்றிய அவரை கௌரவிக்கும் வகையில் இந்திய ரயில்வே துறையில் அதிகாரி அளவிலான பணியையும் வழங்கி கௌரவித்தது.

விருதுகள் :

1984 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் இருந்து அர்ஜுனா விருது.

1984 ஆம் ஆண்டு இந்திய அரசிடம் இருந்து பத்மஸ்ரீ விருது.

1985 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளுக்கான ‘சிறந்த தடகள விளையாட்டு வீராங்கனைக்கான உலகக்கோப்பை’ வழங்கப்பட்டது.

1986 ஆம் ஆண்டு சியோல் ஆசிய விளையாட்டு கழகத்தின் மூலம் ‘சிறந்த தடகள விளையாட்டு விராங்கனைக்கான அடிடாஸ் கோல்டன் ஷூ விருது’.

1999 ஆம் ஆண்டு ‘கேரள விளையாட்டு பத்திரிக்கையாளர் விருது’.

Leave a Comment