Vairamuthu History in Tamil – வைரமுத்து வாழ்க்கை வரலாறு

காதல் பாடல், கவிதை, ஹைக்கூ கவிதை போன்ற அனைத்திற்கும் சொந்தக்காரர் கவிப்பேரரசு வைரமுத்து. தமிழ் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும் அவர், இந்திய தேசிய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.

கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருதும், கவிப்பேரரசு என்றும் காப்பியப்பேரறிஞர் பட்டங்கள் பெற்ற வைரமுத்து அவர்கள் 6000 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

கவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் ஜூலை 13 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் தந்தை இராமசாமி தேவர், தாயார் அங்கம்மாளுக்கும் மகனாக பிறந்தார். ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரது முதற்கவிதை பிறந்தது பத்தாவது வயதில்.

கே. எஸ். சித்ரா வாழ்க்கை வரலாறு

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும் :

இவர் சிறுவயதில் அண்ணாவின், பெரியாரின், கருணாநிதியின் எழுத்தாலும், தமிழாலும் கவரப்பட்டார். பின் இவர் சிறுவயதில் கவிதையை பாரதியார், பாரதிதாசன் புத்தகங்களில் கற்றுக்கொண்டர். இவரது முதற்கவிதை பிறந்தது பத்தாவது வயதில்.

இவரின் 14_வது வயதிலேயே இலக்கண, இலக்கியத்தை கற்றுக்கொண்டு வெண்பா எழுதும் புலமை பெற்றார். பள்ளிகளுக்கான பேச்சுப் போட்டியில் பல பரிசுகளை வென்றார். தனது உயர்கல்விப் படிப்பில் மதுரை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று, அதற்காக வெள்ளிப்பதக்கமும் வென்றார்.

இவர்,பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், தமிழில் இளங்கலைப் பட்டம் (பி.ஏ) பெறுவதற்காக, 1970 ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டியில் கலந்து 100 க்கும் அதிகமான பதக்கங்களை வென்றார்.

அவருக்கு 19 வயதிருக்கும் போது, ‘வைகறை மேகங்கள்’ பாடலை வெளியிட்டார். அவரது இந்தப் படைப்பு , சென்னையிலுள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியின் பாடமாக இருக்கிறது .1979ல், அவரது 2-வது படைப்பான ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ என்ற படைப்பை வெளியிட்டார்.

இல்லற வாழ்க்கை :

வைரமுத்து அவர்கள் பொன்மணி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு கபிலன் மற்றும் மதன் கார்க்கி என்ற மகனும் பிறந்தனர்.

திரையுலக வாழ்க்கை :

1980 ல் பாரதிராஜாவின் ” நிழல்கள் ” படத்தின் மூலமாகத் திரை உலகில் நுழைந்தார். ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ என்ற பாடலே அவர் திரையுலகில் இயற்றிய முதல் பாடலாகும். பின்னர், அவர் பல பாடல்கள் எழுதி. 1982 ஆம் ஆண்டு சிறந்த பாடல் ஆசிரியருக்கான தமிழக அரசின் விருதை அன்றைய முதல்வர் எம். ஜி. ஆரிடம் பெற்றார்.

1986 ல் முதல் மரியாதை படப் பாடல்களுக்கு இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை இந்தியக் குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றார்.

தொடர்ந்து 1992 ல் ரோஜா படப்பாடல்களுக்காக இரண்டாம் முறையும் 1994 ல் கருத்தம்மா படப் பாடல்களுக்காக மூன்றாம் முறையும் இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளை குடியரசு தலைவரிடமிருந்து பெற்றார். அவர் எழுதிய பல பாடல்கள் அவருக்குப் புகழ் பெற்றுத்தந்தாலும் பல பாடல்கள் இவருக்கு நிறைய விருதுகளை பெற்றுத்தந்தது.

வைரமுத்துவின் படைப்புகள் :

அவரது படைப்புகளில் சில :

நாவல்கள் :

வில்லோடு வா நிலவே, தண்ணீர் தேசம், வானம் தொட்டுவிடும், தூரம்தான், கருவாச்சி காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், மற்றும் மூன்றாம் உலகப் போர்

கவிதைத் தொகுப்புகள் :

நேற்று போட்ட கோலம், ஒரு போர்களமும் இரண்டு பூக்களும், வைகறை மேகங்கள், திருத்தி எழுதிய தீர்ப்புகள், தமிழுக்கு நிறமுண்டு, இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன், இதனால் சகலமானவர்களுக்கும், இதுவரை நான், கொஞ்சம் தேனீர் நிறைய வானம்.

நூல்கள் :

கள்ளிகாட்டு இதிகாசம், பெய்யென பெய்யும் மழை, இதுவரை நான், ஒரு கிராமத்து பறவையும் சில கடல்களும், இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல, இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள், ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும், காவி நிறத்தில் ஒரு காதல்.

கவியரசு பட்டம் :

1986 ல் கவியரசு என்னும் பட்டம் இவருக்குத் தமிழ் வளர்ச்சி மன்றத்தாரால் வழங்கப் பட்டது. கவியரசு பட்டத்தை 1998 ல் தாமே துறந்தார். இவரது பெய்யெனப் பெய்யும் மழை நூலை வெளியிட்ட அந்நாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி கவிப்பேரரசு என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கினார்.

கடல் காவியம் :

இவரது தண்ணீர் தேசம் ஆறு மாத ஆராய்ச்சிக்குப் பிறகு பிறந்த விஞ்ஞானக் காவியமாகும். கடல் பற்றிய ஆய்வு நூல்கள் படித்து கடலுக்குள் இருந்து ஒரு காதல் காவியத்தை விஞ்ஞானக் காவியமாகப் படைத்திருக்கிறார்.கவிதைக்கும் உரைநடைக்கும் இடைப்பட்ட ஒரு நடையை கவிஞர் வைரமுத்து இதில் கையாண்டிருக்கிறார்.

இவரது படைப்புகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மற்றும் சில தென்னிந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. நவீன தமிழ் உரைநடையின் மீதும் கவிதையின் மீதும் இவரது படைப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

சமூகப்பணி :

சமூக இலக்கியப் பேரவை என்ற அமைப்பை நிறுவி தமிழ்க் கவிஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஊக்கம் கொடுத்து வருகிறார். உலகமெங்கும் தமிழ்ப் பரப்பும் பணியிலும் பயணத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். சில வெளிநாடுகள் இவரை அழைத்துப் பாராட்டியதும் உண்டு.

விருதுகள் :

ஆறு முறை தேசிய விருதுகளை வென்றார்.

ஆறு தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றார்.

பாடலாசிரியருக்கான குடியரசுத் தலைவர் விருதை 7 முறை வென்று உள்ளார்.

1986 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

2003 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

கள்ளிக் காட்டு இதிகாசம் நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது கிடைத்தது.

Leave a Comment