fbpx

Sathyaraj History in Tamil – சத்யராஜ் வாழ்க்கை வரலாறு

சத்யராஜ் கோவை மாவட்டத்தில் பிறந்த ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் ரெங்கராஜ் சுப்பையா. இவர் வில்லன் நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையைத் துவங்கி, பின் கதாநாயகன் நடிகராக மாறி நடித்து வருகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் ஆவார்.

பின் லீ என்ற திரைப்படம் மூலமாகத் தயாரிப்பாளராக உருவெடுத்தார். இவர் பேசிய பல வசனங்கள் தமிழ் ரசிகர்கள் மனத்தில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார். இவர் நடித்த பெரியார் திரைப்படமும் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படமும் வரலாற்று சாதனைப் படைத்தப் படங்களாக மாறி, அவருக்கு விருதுகளையும் பெற்றுத்தந்தது.

இவர் பல தமிழ் திரைப்பட நடிகர்கள் இடம் ஜோடி சேர்ந்து நடித்து உள்ளார். இவர்
பெரியார் விருது,ஃபிலிம்ஃபேர் விருது,விஜய் விருது என பல விருதுகளை பெற்று உள்ளார். இன்று அனைவராலும் கட்டப்பா என்று அழைக்கப்படும் சத்யராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1954 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி கோயம்பத்தூரில் சுப்பையா மற்றும் நாதாம்பாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் சத்யராஜ்.இவரது இயற்பெயர் ரெங்கராஜ் ஆகும். மேலும், அவருக்கு இரண்டு இளைய சகோதரிகள் உள்ளனர்.

பால கங்காதர திலகர் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் :

கோயம்புத்தூரில் உள்ள செயின்ட் மேரிஸ் கான்வெண்ட்டில் தனது ஆரம்பகாலப் பள்ளிப்படிப்பை தொடங்கிய இவர். பின் பத்தாம் வகுப்பு கோவையில் உள்ள ராம்நகர் உயர்நிலைப்பள்ளியில் படித்தார்.

இவர் தனது பத்தாம் வகுப்பில் வரலாறு மற்றும் பூகோளப் பாடங்களில் முதல் மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிப் பெற்றார். பின் இளநிலைக் கல்விப் படிப்பை கோயம்புத்தூர் அரசு கலை கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கினார். அந்த கல்லூரியில் தாவரவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

இவரும் நடிகர் மணிவண்ணன் அவர்களும் சக மாணவனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகப் பிரவேசம் :

தனது இளம் பருவத்திலிருந்தே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்து வந்த அவர், ‘அன்னக்கிளி’ படப்பிடிப்பை நேரில் கண்டார். அப்போது, அதன் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் திருப்பூர் மணியன் அவர்களை நேரில் கண்ட அவர், திரையுலகில் நுழைய வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார்.

அதன் வெளிப்பாடாக, கோமல் சத்தியநாதன் அவர்களின் நாடகக்
குழுவில் சேர்ந்த அவர், ‘கோடுகள் இல்லாத கோலங்கள்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். 1987இல் சத்யராஜின் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரைப் பத்திரிகை வைத்து அழைத்தனர்.

அதன்படி எம்.ஜி.ஆரும் தன் துணைவியாருடனும், அமைச்சர் முத்துசாமியுடனும் சென்றார். அதன்பின் திருமணத்திற்கு வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தனது ஞாபகமாக தான் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையைப் பரிசாகக் கேட்டு வாங்கிக் கொண்டார் சத்யராஜ்.

திரையுலக வாழ்க்கை :

பின் சிறு வேடங்களில் நடித்து வந்த சத்யராஜ் அவர்களுக்கு, பிரபல இயக்குனரான டி. என். பாலு அவர்கள், அவரது அடுத்த படமான ‘சட்டம் என் கையில்’ என்ற படத்தில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். அந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் அவர் தொடர்ந்து பல படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க
தொடங்கினார்.

வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த சத்யராஜை, பாரதிராஜா அவர்கள், அவரது அடுத்தப் படமான 1986ல் ‘கடலோரக் கவிதைகள்’ என்ற படத்தில்
கதாநாயகனாக வடிவமைத்தார். அதை தொடர்ந்து கதநாயகனாக மாறிவிட்ட. ஒரே ஆண்டில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகராக வளம் வர தொடங்கினார்.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ‘வில்லாதி வில்லன்’ என்ற திரைப்படம் மூலமாக ஒரு இயக்குனராகவும் உருவெடுத்தார். தனது மகனான சிபிராஜ் அவர்களுடன் இணைந்து, பல படங்களில் நடித்து வந்த அவர், அவரது மகனைக் கதாநாயகனாகக் கொண்டு ‘லீ’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தார்.

இப்படம் மூலமாக, அவர் ஒரு தயாரிப்பாளர் என்பதையும் தமிழ்த் திரையுலக
வரலாற்றில் பதிவு செய்தார். பின் தமிழ் சினிமா துறை மட்டும் இல்லாமல் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த ‘பெரியார்’ திரைப்படமும், ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ திரைப்படமும் வரலாற்று சாதனைப் படைத்தப் படங்களாக மாறி, அவருக்கு விருதுகளையும் பெற்றுத்தந்தது.

இவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் இன்று வரை உலகம் முழுவதும்
பிரபலமாக உள்ளது. இன்று பல படங்களில் பல கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இல்லற வாழ்க்கை :

சத்யராஜ் அவர்கள், மகேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் பிறந்தனர்.

பெரியார் திரைப்படம் :

சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காக பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

விருதுகள் :

தமிழக அரசின் உயரிய விருதான ‘கலைமாமணி விருதை’ வென்றார்.

1987 ஆம் ஆண்டு ‘வேதம் புதிது’ திரைப்படத்தின் ‘சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது’ பெற்றார்.

1991 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அவருக்கு ‘எம்.ஜி. ஆர் விருது’ வழங்கி கௌரவித்தது.

2007 ஆம் ஆண்டு ‘பெரியார் விருது’ அவரது ‘பெரியார்’ படத்திற்காக வழங்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு சத்தியபாமா பல்கலைக்கழகம் அவருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது.
மற்றும் ‘ஒன்பது ருபாய் நோட்டு’ திரைப்படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதினைப்’ பெற்றுத்தந்தது.

2012 ஆம் ஆண்டு ‘நண்பன்’ படத்தின் சிறந்த துணைக் கதாபாத்திரத்திற்கான ‘விஜய் விருதை’ வென்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published.