இன்று வேகமாக வளர்ந்துவரும் கணினி துறையில். ரோபோட்டிக்ஸ் துறை மிகவும் பயன்படும் வகையில் எதிர்கால உலகை தீர்மானிக்க போகிறது. இந்த துறையில் தமிழ் ரோபோட்டிக்ஸ் கிளப் என்ற நிறுவனத்தை தொடங்கி 10,000 மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளித்து வரும் ரோபோ பாலாஜி பல சாதனை செய்து தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இவை தவிர்த்து 4 வாட்சப் குரூப்களின் வழியே 130 ஆசிரியர்களுடன் இணைந்து தாய்மொழியில் ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளித்து வருகிறார் ரோபோ பாலாஜி.

ஆரம்பகால வாழ்க்கை :
விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம் கிராமத்தில் பிறந்தவர் தான் ரோபோ பாலாஜி. தந்தை திருநாவுக்கரசு, அம்மா முருகவேணி. பாலாஜி அப்பாவிற்கு அறிவியல் ஈடுபாடு அதிகம்.
இவர் தந்தை கிராமத்தில் உள்ளவர்களுக்கு, விவசாயத்திற்கு தேவையான ஏர்,களப்பு போன்றவற்றை மரத்தில் இலவசமாக செய்து தருவது வழக்கம். அவரைப் பார்த்து வளர்ந்த பாலாஜிக்கும் அறிவியலில் ஈடுபாடு அதிகம் வந்துவிட்டது.
சிறு வயதிலிருந்தே எந்த பொருளை பார்த்தாலும் அதை உடனே செய்ய தொடங்கிவிடுவார். இதனால் இவர் பள்ளியில் படிக்கும் போதே, மாவட்ட அளவில் அறிவியலில் பல பரிசு பெற்றார்.
பள்ளி முடித்தபின் குடும்பத்தின் நிதி நிலைமை மோசமாக இருந்ததால், அவரால் மேல் படிப்பு சேர முடியவில்லை. ஒரு ஆண்டுக்குபிறகு பலருடைய உதவிகளை பெற்று 2007 ஆம் ஆண்டு மயிலம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிறிவில் இவர் சேர்ந்தார்.
பின் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் 2012 முதல் 2014 ஆம் அண்டு வரை ரோபோடிக்ஸ் பிரிவில், எம்.டெக் படித்தார்.
ராஜீவ் தாய்லாந்து கொய்யா வெற்றி கதை
ரோபோ பாலாஜி முதல் ப்ராஜெக்ட் :
பாலாஜி கல்லூரியில் மூன்றாம் வருடத்தில் படிக்கும் போது ஆள்லில்லா பறக்கும் விமானம் வடிவமைக்க தொடங்கினார். ஆனால், பல முறை விமானத்தை பறக்க வைக்க முயற்ச்சி செய்தும் இவரால் விமானத்தை பறக்க வைக்க முடியவில்லை.
பல முறை முயற்ச்சி செய்து அவர் தோல்வியை கண்டார். ஆனால் இவரின் விடாமுயற்சி 2011 ஆம் ஆண்டு இவர் நான்காம் வருடம் படிக்கும் போது , ஆள்லில்லா விமானத்தை சூரிய கதிரின் சக்தியில் பறக்க செய்து, அரசு விருதும் பெற்றார். இந்த முயற்ச்சி தான் இவரின் வாழ்க்கை தொடக்கம் என்றே சொல்லலாம்.
விவசாயத்திற்கு ரோபோ :
மனித உழைப்பை அதிகம் நம்பியிருக்கும் விவசாயத்திற்காக ரோபோ தயாரிக்கவேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் கனவு. அதை எண்ணத்தில் கொண்டு விதை விதைப்பது, களையெடுப்பது, நாற்றுநடுவது என ஒரு விவசாயின் வேலையினை செய்யக்கூடிய ரோபோவினை 2013ம் ஆண்டு
வடிவமைத்தார்.
இவர் செய்துள்ள இந்த ரோபோ இந்தியாவில் அங்கீகரிக்கவில்லை. ஜப்பான் நாட்டில் கூட விவசாயத்திற்கு ரோபோக்களை 2015 ஆம் ஆண்டு தான் அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால், இவர் அதற்குள் தமிழ்நாட்டில் இதை தொடங்கினார். ஆனால் யாரும் இவரை மதிக்கவில்லை
பாலாஜியின் ரோபோ அங்கீகாரம் :
விதை விதைக்கும் ரோபோ இவரின் அற்புத கண்டுபிடிப்பாக இருந்தது. மனிதனின் கன்ட்ரோல் இல்லமால் தானாகவே இதை இயக்கலாம். இந்த ரோபோ வேர்க்கடலை, கம்பு, விதைக்க மட்டுமல்லாமல், மண்ணின் ஈரப்பதத்தை உணர்ந்து நீர் இறைக்கவும் பயன்படுதலாமாம்.
இந்த ரோபோவிற்காக பல இடத்தில் இவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஜப்பான் டோக்கியோ பல்கலைகழகத்தின் ARTIFICIAL LIFE & ROBOTICS இல் இருந்து இவருக்கு பாராட்டு வந்ததும் மட்டும் இல்லாமல்.
ஜப்பானிற்கு வந்து அதை காட்ட சொல்லியுள்ளனர். இது அவருக்கு அங்கீகாரம் மிகுந்த ஊக்கமளித்தது. பிறகு அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் சிறந்த ஆராய்ச்சி அறிக்கை என்ற விருதை வாங்கினார்.
லட்சியம் மற்றும் வேதனை :
இவரின் திறமையை கண்டு பல வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்புகள் இவருக்கு வந்தது. ஆனால், இந்தியாவில் தான் வேலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இவர் அதை மறுத்துவிட்டார்.
மற்ற நாடுகளை விட இந்தியா விவசாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதே இவர் லட்சியம் கனவு ஆசை. ரோபோடிக்ஸை விவசாயத்தில் முடிந்தளவிற்கு கொடுப்பதை நோக்கமாக செய்யவேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்.
இவர் சொல்லும் போது IIT போன்ற பெரிய கல்லூரிகளில் இருந்து சிறந்த தேர்ச்சி பெறும் பல மாணவர்கள் வெளிநாடு சென்று விடுகின்றனர்.
வெளிநாடுகளில் பணம் அதிகம் கிடைக்கும் என்று சென்றுவிடுகின்றனர். பணம் தான் பெரியது என்று சில இளைஞர்கள் நினைக்கிறார்கள். பணம் சிறிது குறைவாக கிடைத்தாலும் பரவாயில்லை, என் அறிவு என் நாட்டிற்கு பயன்படவேண்டும் என்று இவர் கூறியுள்ளார்.
இன்று வேகமாக வளர்ந்துவரும் ரோபோட்டிக்ஸ் துறையில் எதிர்கால சந்ததியினர் வலம்வருவதற்காக அவர் தொடங்கிய ‘தமிழ் ரோபோட்டிக்ஸ் கிளப்’ 10,000 மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளித்துள்ளது.
அவருடைய ரோபோ கண்டுபிடிப்புகளின் ஆய்வறிக்கைகளுக்காக 4 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார் ‘வில்லேஜ் விஞ்ஞானி’ பாலாஜி.