மகேந்திர சிங் தோனி வெற்றி பயணம் – Mahendra Singh Dhoni Success Story in Tamil

இந்த சகாப்தத்தின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் தோனி. சாதாரண குடும்பத்தை சேர்ந்த தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக உருவாகி சாதித்து உள்ளார்.

ஆரம்பத்தில் டிக்கெட் கலெக்டராக இருந்தார் பின் கிரிக்கெட் வீரராக எம்.எஸ் தோனி மாறினார். கேப்டன் கூல் எம்.எஸ். தோனியின் உற்சாகமூட்டும் வெற்றிக் கதையைப் பார்ப்போம்.

ஆரம்ப வாழ்க்கை :

மகேந்திர சிங் தோனி 7 ஜூலை 1981 ஆம் ஆண்டு ராஞ்சியில் பிறந்தார். இவர் சாதாரண குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை பான் சிங் தோனி. MECON ஜூனியர் மேனேஜ்மென்ட் பதவியில் பணியாற்றினார்.

அவர் தாயின் பெயர் தேவகி. தோனிக்கு ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார்கள். தோனிக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரை இளம் வயதில் பிடிக்கும்.

அவர் தனது பள்ளிப்படிப்பை ராஞ்சியில் உள்ள டிஏவி ஜவஹர் வித்யா மந்திர், ஷியாமலி என்ற பள்ளியில் படித்து முடித்தார்.

கிஷோர் பியானி வெற்றி பயணம்

எம்.எஸ். தோனியின் கிரிக்கெட் ஆர்வம் :

ஆரம்ப காலத்தில் எம்.எஸ். தோனி கால்பந்து போட்டியில் ஆர்வமாக விளையாடுவார். அவர் பள்ளியின் அணியில் கோல்கீப்பராக கால்பந்து இருந்தார். அவர் கால்பந்து விளையாட்டில் கிளப் மற்றும் மாவட்ட அளவில் விளையாடினார்.

ஒருமுறை, அவரது கால்பந்து பயிற்சியாளர் அவரை கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக சேர்த்தார். அந்த நேரம் அவரது விக்கெட் கீப்பிங் திறமை வெளியானது . அப்போது தான் எம்.எஸ். தோனியின் கிரிக்கெட் பயணம் தொடங்கியது.

அவர் 1995 முதல் 1998 வரை கமாண்டோ கிரிக்கெட் கிளப்பில் விக்கெட் கீப்பராக இருந்தார். பின் வினு மங்கட் டிராபி 16 வயதுக்குட்பட்ட சாம்பியன் ஷிப்பிற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பீகார் கிரிக்கெட் அணிக்கான தேர்வு :

1998 ஆம் ஆண்டு , எம்.எஸ் தோனி மத்திய நிலக்கரி ஃபீல்ட்ஸ் லிமிடெட் (சி.சி.எல்) அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த போட்டிகளில் அவர் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 50₹ பரிசுகளை வழங்கினார்கள்.

பின் சிலர் அவர் திறமையை கண்டு பீகார் கிரிக்கெட் அணியில் சேர உதவினார். ஒரு வருடத்தில் சிசிஎல்லில் இருந்து பீகார் ரஞ்சி அணிக்கு மாறினார் தோனி . அவர் 1998-99 சீசனில் பீகார் U-19 அணியில் சேர்க்கப்பட்டார்.


பீகார் U-19 அணி 1999-2000 கூச் பெஹார் டிராபியின் இறுதிப் போட்டியை எட்டியது, அங்கு அவர் 84 ரன்கள் எடுத்தார், ஆனால் அது வீணாகிப் போனது, காரணம் பஞ்சாப் U-19 அணி 839 ரன்கள் எடுத்தது, இதில் யுவராஜ் சிங் 358 ரன்கள் குவித்து அதிக ஸ்கோர் செய்தார்.

தோனி 2001-2003 காலகட்டத்தில் காரக்பூர் ரயில் நிலையத்தில் பயண டிக்கெட் பரிசோதகராக (TTE) பணிபுரிந்து கூடவே தனது கிரிக்கெட் கனவையும் தொடர்ந்தார். அவர் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து விளையாடினார்.

2002-2003 சீசனில், தோனி ரஞ்சி டிராபியில் 3 அரை சதங்களையும், தியோதர் டிராபியில் 2 அரை சதங்களையும் அடித்தார்.

இந்தியா ஏ அணிக்கு தேர்வு :

இறுதியாக, தோனியின் முயற்சி அங்கீகரிக்கப்பட்டு, ஜிம்பாப்வே மற்றும் கென்யாவுக்கான ODI சுற்றுப்பயணத்தில் இந்தியா A அணியில் அவர் தேர்வு ஆகினார்.

இரண்டு தொடர்களிலும் அவரது செயல்திறன் குறிப்பிடத்தக்கதாக இருந்தது, மேலும் அவர் தொடர்ந்து சதம் அடித்தார்.

அப்போது தான் சவுரவ் கங்குலியின் கவனத்தை தோனி ஈர்த்தார். அவரது அற்புதமான திறமையால் அவர் அறியப்பட்டார்.

எம்.எஸ் தோனியின் சர்வதேச வாழ்க்கையின் ஆரம்பம் :

இந்தியா ஏ அணிக்காக சிறப்பாக செயல்பட்ட எம்.எஸ். 2004-05ல் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.

அறிமுகப் போட்டியில் தோனி வெறும் 0 அதாவது கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார். பின் எதிர் பாக்காத வகையில் அதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான் தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

இறுதியாக அவர் 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து அசத்தலான சதம் அடித்தார். பின்னர், சில போட்டிகளுக்குப் பிறகு, அவர் 183* ரன்கள் எடுத்தார்.

அதன்பிறகு அவர் தொடர்ந்து ICC ODI தரவரிசையில் நம்பர் 1 ODI பேட்ஸ்மேன் ஆனார்,

2007ல் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை பயங்கரம் :

இது தோனிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் மிகவும் பயங்கரமான மற்றும் கடினமான கட்டமாக இருந்தது.

2007 50 ஓவர்கள் உலகக் கோப்பையில், இந்தியா குழு முதலிலேயே
வெளியேறியது.

இந்திய ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். அப்போது, ​​கேப்டன் ஆக இருந்த தோனிக்கு சொந்தமான, அவரது சொந்த ஊரில் கட்டப்பட்டு வீடு அடித்து நொறுக்கப்பட்டது. அது அவருக்கு மிகவும் கடினமான கட்டமாக இருந்தது.

டி20 இந்திய அணியின் கேப்டன் :

முதல் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய கேப்டனாக எம்.எஸ் தோனி நியமிக்கப்பட்டார்.

சில அனுபவமிக்க வீரர்களை மட்டுமே கொண்ட இளம் அணி அவருக்கு வழங்கப்பட்டது. 24 செப்டம்பர் 2007 அன்று, இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பையை வென்றது.

கபில்தேவுக்குப் பிறகு உலகக் கோப்பையையும் வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.

டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 :

2009 இல், இந்தியா இலங்கைக்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா. அப்போது டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 ஆனது. டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1 ஆனது இதுவே முதல் முறையாகும்.

50 ஓவர் உலகக் கோப்பை 2011 :

ஐசிசி 2011 இந்த உலகக் கோப்பையில், இந்தியா அணியில் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தார்கள்.

வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு
எதிரான ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்துடன் ஒரு டிராவும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு தோல்வியும் ஏற்பட்டது.

இந்தியா காலிறுதிக்கு எளிதாக தகுதி பெற்றது பின் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அரையிறுதியில் பாகிஸ்தானை விழுத்தியது.

அந்த அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது மற்றும் தோனி சிறப்பாக 91* ரன்கள் எடுத்தார்.

இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அன்று 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற 2வது இந்திய கேப்டன் ஆனார்.

2013 சாம்பியன்ஸ் டிராபி :

தோனியின் தலைமையில் 2013 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபியை இந்தியா வென்றது, இதனால் அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற முதல் மற்றும் ஒரே கேப்டனாக அவர் போற்றப்பட்டார்.

கேப்டன் பதவியில் இருந்து விலகுதல் :

2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். ஜனவரி 2017 இல் இங்கிலாந்துக்கு எதிரான ODI போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து விலகி விராட் கோலியிடம் ஒப்படைத்தார்.

ஐபிஎல் வாழ்க்கை :

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான
கேப்டனாக கருதப்படுகிறார்.

சிஎஸ்கே தடை காலத்தில், ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ் அணிக்காக 2 ஆண்டுகள் விளையாடினார்.

சர்வதேச கிரிக்கெட் ஓய்வு :

15 ஆகஸ்ட் 2020 அன்று, எம்.எஸ். தோனி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார், அவர் “மெயின் பால் தோ பால் கா சாயர் ஹு” என்ற பின்னணி பாடலுடன் ஓய்வு பெற்றதாகக் கூறினார்.

தனிப்பட்ட வாழ்க்கை :

தோனி 4 ஜூலை 2010 அன்று சாக்ஷி சிங் ராவத்தை மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டார். தோனி மற்றும் சாக்ஷிக்கு 6 பிப்ரவரி 2015 அன்று ஷிவா என்ற குழந்தை பிறந்தது.

விருதுகள் :

அவர் 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னாவைப் பெற்றார்.
அவருக்கு 2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு, அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

நிகர மதிப்பு :

ஜனவரி 2022 நிலவரப்படி, அவரது நிகர மதிப்பு சுமார் 1000 கோடி ஆகு

Leave a Comment