Jayakanthan History in Tamil – ஜெயகாந்தன் வாழ்க்கை வரலாறு

எனக்கு நானே கடவுள் எனக்கு நானே பக்தன் என் வாழ்நாள் எல்லாம் திருநாள் மரணம் எனக்கு கரிநாள்!” என்று புரட்சிகரமாக எழுத கூடிய ஜெயகாந்தன் அவர்கள் ஆற்றலும், ஆளுமையும் கொண்ட மிக சிறந்த எழுத்தாளர்களுள் இவரும் ஒருவராவார்.

ஜெயகாந்தன் படைப்புகள் சமூகத்தில் இருக்கும் பலரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் பள்ளிக்கு போகவில்லை என்றாலும் தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து அவரின் எழுத்தில் எழுதி காட்டுவார்.

இவர் எழுத்தாளராக மட்டுமல்லாமல், கட்டுரையாளர், பத்திரிகையாளர்,
விமர்சகர், திரைக்கதை எழுத வல்லமை கொண்டவர். என பல்வேறு முகங்கள் கொண்டு இருந்தார்.

‘சாஹித்ய அகாடமி விருது’, ‘ரஷ்ய விருது’ என பல விருதை பெற்ற இவரின் வாழ்க்கை வரலாறை தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

தமிழ் இலக்கிய உலகில் புரட்சிகர சிந்தனைகளுக்கு வித்திட்ட ஜெயகாந்தன் தமிழ்நாட்டில் இருக்கும் கடலூரில் 1934-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி பிறந்தார்.

ஏ.ஆர். ரகுமான் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் :

ஜெயகாந்தனுக்கு, சிறு வயதில் பள்ளிக்கு போக பிடிக்கவில்லை. எனவே, அவர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளார். இதன் காரணமாக அவரும் இவரின் தந்தையும் பேசிக்கொள்ள மாட்டார்கள். அவர் தனது தாயார் மற்றும் தாத்தாவிடம் வளர்ந்தார்.

பின் இவருக்கும் இவரின் தந்தைக்கும் ஏற்ப்பட்டபிரச்சனையால் 12 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி,அவரின் மாமா வீட்டுக்குச் சென்றுவிட்டார். இவரின் மாமா கம்யூனிஸ கொள்கைகளையும், சுப்பிரமணிய பாரதி படைப்புகளையும் இவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இலக்கியம் மீது ஆர்வம் :

ஜெயகாந்தனை அவருடைய தாய் சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அந்த உறவினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தனது இளமைக்காலத்தை கழித்த அவர், தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு பரிச்சயமானார்.

அந்தக் கட்சி உறுப்பினர்களின் பேச்சை கேட்க கேட்க, இலக்கியத்தின் மீது இவருக்கு ஆர்வம் வந்தது. இதனால், கட்சியின் அப்போதைய உறுப்பினர் ஜீவானந்தம் இவருக்கு இலக்கியம் கற்று கொடுக்க உதவினார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்த அவர், பல இடங்களில் முழுநேரம் மற்றும் பகுதிநேர வேலைகளில் வேலைப் பார்த்தார்.


1949ல், இவர்களில் கட்சிக்கு , தடை உத்தரவு விதிக்கப்பட்டது பின் தற்காலிகமாகப் வேறு பணியில் சேர்ந்தார். அவருக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில், எழுதும் பழக்கத்தையும், புதியதை கற்றுகொள்ளும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.

பின் இவருக்கு காமராஜரின் கொள்கைகள் மீது ஆர்வம் ஏற்பட்டதால், அவரது தொண்டனாக மாறி, தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

எழுத்துலக வாழ்க்கை :

ஜெயகாந்தன் தனது இலக்கிய வாழ்க்கையை 1950-களில் தொடங்கினார். “சரஸ்வதி’, “தாமரை’, “கிராம ஊழியன்’, என பல படைப்புக்களை உருவாக்கினார்.

அவரது படைப்புகள் அனைத்தும் வாசகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவரின் புகழும் வளர்ந்தது.

அவரின் வெற்றிப்பெற்ற படைப்புகளான “உன்னைப் போல்
ஒருவன்” மற்றும் “சில நேரங்களில் சில மனிதர்கள்” போன்ற பின் நாட்களில் படமாக்கப்பட்டன.

அவரது படைப்புகள் :

ஜெயகாந்தன், 40 நாவல்கள், 200 சிறுகதைகள் பல்வேறு வாழ்க்கை வரலாறு, குறுநாவல்கள், கட்டுரைகள், போன்றவற்றைப் படைத்துள்ளார்.

“உன்னைப் போல் ஒருவன்’ படத்துக்கு, சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

விருதுகள் :

1972 ஆம் ஆண்டு சாஹித்ய அகாடமி விருது.

கடந்த 2002-ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக மத்திய அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்ற பெருமைக்குரியவர்.

2009-ஆம் ஆண்டு மத்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருதை தமிழ் இலக்கியத்திற்காக முதல்முறையாகப் பெற்றார்.

2011 – ரஷ்ய விருத

இறப்பு :

ஜெயகாந்தன் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி காலமானார்.

Leave a Comment