ஹிந்தி நடிகை ரேகா வாழ்க்கை வரலாறு – Hindi Actress Rekha History in Tamil

ரேகா திரைப்படத் துறையில் 40 வருட காலம் வரை சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் தனது தொழில் வாழ்க்கையில் பல முறை மறுபிறப்பெடுத்துள்ளார்.


மேலும் தனது நிலையை தக்கவைத்துக்கொண்டதற்காக அதிகமாக அறியப்பட்டவராவார். ரேகா அவர்கள், ஹிந்தித் திரையுலகில் வெற்றிபெற்ற நடிகைகளுள் ஒருவராகப் போற்றப்படுபவர்.


தமிழ் திரையுலகில் ‘காதல் மன்னன்’ என்று எல்லோராலும் போற்றப்பட்ட ‘ஜெமினி கணேசன்’ அவர்களின் மகளான பானுரேகா கணேசன் அவர்கள், திரையுலகில் ‘ரேகா’ என்று அனைவராலும்
அழைக்கப்பட்டார்.

40 ஆண்டுகளில், 180 படங்களில் நடித்து, நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், ஒரு தேசிய விருதினையும் வென்று, இன்றளவும் ஹிந்தித் திரையுலகில் நடித்து வரும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டு ஜெமினி கணேசனுக்கும், தெலுங்கு நடிகையான புஷ்பவள்ளிக்கும் சென்னையில் பிறந்தார்.

இவருடைய தந்தை ஒரு நடிகராக மிகப் பெரிய வெற்றியை
அடைந்தவர். ரேகா அவருடைய வழியையே பின்பற்றினார்.

ஆரம்பகால வாழ்க்கை :

அவரது இளமைப் பருவத்தில், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தாலும், தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு, சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்குப் பின்னணியில் இருந்து வந்திருந்தாலும், வீட்டில் தெலுங்குப் பேசியதால், அம்மொழியையே தாய்மொழியாகக்
கொண்டார்.

அவர், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளை சரளமாகப் பேசும் வல்லமைப் பெற்றிருந்ததால், திரையுலகில் நுழைவதற்கு எளிதாக இருந்தது.

தொழில் :

1966 ஆம் ஆண்டில் ரங்குலா ரத்னம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றினார். 1969 இல் ரேகா ஆபரேசன் ஜாக்பாட் நல்லி சிஐடி 999 என்ற கன்னட வெற்றிப்படத்தில் ராஜ்குமாருடன் கதாநாயகியாகத் தோன்றினார்.


அதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் ‘அஞ்சனா ஸஃபர்’ என்ற ஹிந்தி படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் அவர் 180 படங்களில் நடித்து உள்ளார்.

இல்லற வாழ்க்கை :

அமிதாப் பச்சன், வினோத் மெஹ்ரா உட்பட பல பாலிவுட் நடிகர்களுடன் ரேகாவிற்கு தோல்வியடைந்த காதல் பின் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, அதாவது 1990ல், அவர் தில்லியைச் சார்ந்த
தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை மணமுடித்தார்.

அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் கழித்து, அவரது கணவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். தற்போது, ரேகா அவர்கள்,
மும்பையில் பாந்த்ராவிலுள்ள அவரது இல்லத்தில் வசித்து வருகிறார்.

அங்கீகாரம் :

1982ல் உம்ராவ் ஜான் என்ற படத்திற்கான சிறந்த நடிகைக்காக ‘தேசிய விருது’ பெற்றார். நான்கு முறை ஃபிலிம்ஃபேர் விருது. 2003ல் ‘வாழ்நாள் சாதனையாளர் விருதும்’ வென்றார்.


சர்வதேச விருதுகளான ‘சாம்சங் திவா விருதை’ 2003லும், ‘இந்திய சினிமாவின் ஒப்பற்ற சாதனைக்கான விருதினை’ 2012லும் பெற்றார்.

காலவரிசை :

1954: அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1966: ‘ரங்குலா ரத்னம்’ என்ற தெலுங்கு படத்தில், பேபி பானுரேகாவாக அறிமுகமானார்.

1969: ஹிந்தி படத்திலும் ஹீரோயினாக அறிமுகமானார்.

1982 : உம்ராவ் ஜான் என்ற படத்திற்கான சிறந்த நடிகைக்காக தேசிய விருது.

1990: தில்லியைச் சார்ந்த தொழிலதிபர் முகேஷ் அகர்வால் என்பவரை மணமுடித்தார்.

1991: அவரது கணவர் மரணமடைந்தார்.

சர்ச்சை :

படப்பிடிப்பில் ரேகாவின் முகத்தை கையிலேந்தி உருக்கமான காட்சியில் நடித்துக்கொண்டிருந்த நாயகன் பிஸ்வாஜி எதிர்பாராத தருணத்தில் நீண்ட முத்தம் ஒன்றை பதித்தார். இது ரேகாவுக்கு தெரிவிக்காமல் சூழ்ச்சியாக எடுக்கபட்ட காட்சியாகும்.

Leave a Comment