கொரோனா வைரஸ், 2019-NCOV என முதலில் பெயரிடப்பட்டு பின் COVID-19 (COronaVIrusDisease-2019) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
முதலில் வைரஸ் என்றால் என்னவென்று பார்க்கலாம். வைரஸ் என்பது நோய்களையும் நோய் தொற்றுகளையும் உருவாக்கும் ஓர் நுண்ணுயிரி ஆகும். வைரஸ் என்பது முழுமையாக உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரினமாகும்.
பொதுவாகவே மனித உடல்களில் பல வகையான வைரஸ் இருக்கும். அவை சளி, இருமல் போன்றவற்றில் இருக்கும் மற்றும் பல உறுப்புகளிலும் இருக்கும். அவற்றிற்கு வீரியம் குறைவு. ஆனால் கொரோனா வைரஸ் சற்று அதிக வீரியத்துடன் காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள ஊஹான் மாகாணத்தில் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது.இது சார்ஸ் வைரஸ் -2 வகையைச் சேர்ந்தது.
இந்த வைரஸ் ஒரு வகையான தண்ணி பாம்பின் மூலம் பரவி இருக்கக்கூடும் என சீன அரசு முதலில் கூறியது. பின் எறும்பு தின்னிகள் மூலமும், வௌவால்கள் மூலமும் பரவி இருக்கக்கூடும் என கூறுகிறார்கள்.
சீனாவில் ஒரு பெரிய அசைவ உணவு சந்தை உள்ளது. இங்கு 82-க்கும் மேற்பட்ட விலங்குகளின் இறைச்சி விற்கப்படுகிறது. இந்த இடத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவி இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கும் பின் மனிதர்களிலிருந்து மனிதர்களுக்கும் பரவி வருகிறது என்று சீன தேசிய சுகாதார கவுன்சில் உறுதி செய்துள்ளது.
சீனர்கள் விலங்குகளுடன் இணக்கமான தொடர்பு கொண்டவர்கள் என்பதால் சீனாவில் இந்த வைரஸ் விரைவாக பரவத்தொடங்கியது.
Che Guevara History in Tamil – சேகுவேரா வாழ்க்கை வரலாறு
கொரோனா என்ற சொல் லத்தீனில் உள்ள கொரீனா என்னும் சொல்லிலிருந்து உருவானது. இந்த சொல்லுக்கு கிரீடம் அல்லது ஒளிவட்டம் என பொருள். இந்த வைரஸின் மேற்சுவர், புரதத்தால் ஆன ஜெல்லி போன்ற கிரீடத்துடன் உள்ள அமைப்பில் காணப்படுகிறது. எனவே இந்த வைரஸுக்கு கொரோனா என பெயரிடப்பட்டது.
கொரோனா வைரஸ் தும்மல், இருமல் மற்றும் வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கி பழகும் போது அவர்களின் உமிழ் நீர் துளிகள் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவுகிறது.
இது கண், மூக்கு, வாய் என ஏதேனும் ஒரு வழியாக உடலுக்குள் சென்று பின் தொண்டை பாதித்து, நுரையீரலைத் தாக்கக் தொடங்குகிறது.
இந்த தொற்றால் தாக்கப்பட்டவர்கள் தொடும், பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் தொடும் பொழுது இந்த வைரஸ் எளிதாக பரவுகிறது. வைரஸ் காற்றின் மூலமாக பரவுவதை விட அதிகமாக உமிழ் நீர் துளிகள் மூலமாகவே பரவுகிறது.
ஆரம்ப கட்டத்தில் காய்ச்சல் இருமல் போன்ற அறிகுறிகளுடன் பரவிய வைரஸ் தொற்று நாளடைவில் எந்த அறிகுறியும் இல்லாமலேயே பலருக்கும் பரவி வருகிறது
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உபயோகித்த பொருட்களில் வைரஸானது 12 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். மேலும் குளிர் சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளில் அதிக நேரம் உயிருடன் இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் காற்றில் ஈரப்பதம் அதிகம் உள்ள பகுதிகளில் காற்றிலும் வைரஸ் பரவல் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதலில் தொண்டையில் வலி ஏற்பட்டு, பிறகு காய்ச்சல் உண்டாகி, அதன் பின் வறட்டு இருமல் ஏற்பட்டு ஒரு வாரத்திற்குள் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கிறது.
இது குழந்தைகளையும் முதியவர்களையும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையும் எளிதாகச் தாக்கிவிடுகிறது.
இந்த வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்த வைரஸ் பாதித்தவர்களின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை முதலிலேயே கண்டறிந்து அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டால் வைரஸ் தாக்காத்தில் இருந்து தப்பிக்க இயலும்.
கொரோனா வைரஸுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க வில்லை என்றாலும், ஏற்கனவே காய்ச்சலுக்கு பயன்படுத்திய சில மருந்துகளை பயன்படுத்துவதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உன் பக்கத்தில் இருப்பது யார்? அதுவே உன் வெற்றியை தீர்மானிக்கும்..! தன்னம்பிக்கை பற்றிய சிறுகதை
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பறவை காய்ச்சலுக்கான Fabipiravir என்ற மருந்தை பெருமளவு பயன்படுத்துகின்றார்கள். இது ஃப்ளூ காய்ச்சலுக்கு மருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் உலக சுகாதார மையமும் ரெம்டெசிவர் என்ற மருந்தினை கொரோனாவுக்கு பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறது. இந்த மருந்து சார்ட்ஸ், மெர்ஸ் மற்றும் எபோலா போன்ற வைரஸ்களுக்கு பயன்படுத்தப்பட்டுவந்தது.
கியூபாவில் Interferon Alpha 2B உள்பட 22 மருந்துகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த அரசு முடிவு செய்தது. இந்த மருந்து எச்.ஐ.வி, சார்ஸ், கேன்சர், மெர்ஸ் நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
கியூபாவின் கண்டுபிடிப்பான இம்மருந்து ஒப்பந்த அடிப்படையில் சீனாவில் தயாரிக்கப்படுகிறது. கொரோனா வைரஸை எதிர்த்துப் இது நல்ல பலனை தருகிறது.
கொரோனா வைரஸ் முதலில் அதிகம் விலங்குகளை மட்டுமே பாதித்தது. இப்போது மனிதர்களை பாதிக்கும் அளவிற்கு இந்த வைரஸ் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது (Mutation) பிறழ்வு அடைந்திருக்கிறது.
பிறழ்வு (Mutation) என்பது வைரஸின் DNA மற்றும் RNA வில் ஏற்படும் மாற்றங்களை குறிக்கும். இவ்வாறாக இது மாற்றம் அடையும் போது, இந்த வைரசுக்கு புதுபுது திறன்கள் கிடைக்கிறது. அதில் ஒருவகையான திறன்தான் காற்றின் மூலம் பரவுதல்.
மேலும் பிறழ்வு நடைபெறும் போது தான் இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மையை பெற்றது.மேலும் பத்திற்கும் மேற்பட்ட வகையில் கொரோனா வைரஸ் பிறழ்வு அடைய வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இது போன்ற வைரஸ்கள் காற்று மற்றும் பிற இடங்களில் இருக்கும் போது அரைகுறை உயிருடன் தான் இருக்கும் அது ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் நுழையும் போது தான் அபரிவிதமாக உயிர் கிடைக்கப்பெறும். இவ்வாறே கொரோனா வைரசும் உயிர் பெறுகிறது.
பொதுவாக வெப்ப சூழ்நிலையில் (வெயில்) வைரஸ் அதிக நேரம் உயிர் வாழ முடியாது. இதை போல் வெப்ப சூழ்நிலையில் அழியுமா என்பதை அறிய ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய முடிவு செய்து கொரோனா வைரஸை ஆய்வு கூடத்திற்கு எடுத்து சென்று அங்கு வெப்ப சூழ்நிலையை ஏற்படுத்திக் கொரோனா வைரஸை வைத்து சோதித்துப் பார்த்தனர்.
ஆராய்ச்சியின் முடிவு அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது. மற்ற கொரோனா வைரஸ் குடும்பத்தில் உள்ள வைரஸ்களை போல கொரோனா வைரஸ் அழியவில்லை. எனவே இதற்கு ஆயுட்காலம் அதிகம் என்பதையும் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனாவில் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக சீன அரசு கூறியிருந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி நிறுவனம் 2014-ஆம் ஆண்டிலிருந்து 2018-ஆம் ஆண்டு வரை மியான்மரில் வௌவால்கள் அதிகம் வாழும் பகுதிக்கு சென்று 11 வகையான வௌவால்களிடமிருந்து 750 மாதிரிகளை சேகரித்து ஆராய்ச்சி செய்தனர்.
ஆராய்ச்சியின் முடிவில் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய உண்மை தெரியவந்தது. அதன்படி மூன்று வகையான வௌவால்களுக்கு ஆறு வகையான வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
Covid-19, Cov-90, Cov-47, Cov-82, Cov-92, Cov-96 ஆகிய வைரஸ்கள் வௌவால்களிடம் இருந்தன. இத்தனை வைரஸ்கள் இருந்தாலும் அத்தனையும் மனிதனை பாதிக்காது என்றும் புதிய வைரஸ்களை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள்.
கொரோனா வைரஸ் நாட்டின் பல்வேறு இடங்களில் பரவி, பல உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் முதலில் கொரோனா பாதித்த சீனாவில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். அங்கு கொரோனா தாக்கம் குறைந்துள்ளது.
பிற நாடுகள் அளவிற்கு சீனாவில் கொரோனா வீரியம் இல்லை. இதனால் சீனா தான் இந்த வைரஸை திட்டமிட்டு உருவாக்கியுள்ளது என்று அமெரிக்கா சீனா மீது குற்றம் சாட்டி வருகிறது. மேலும் அதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளதாகவும் அமெரிக்க அரசு கூறி வருகிறது.
கொரோனா அதிகமாக பரவி வரும் இந்த நிலையில் கொரோனா நோயின் வீரியம் அதிகரிக்காமல் இருக்க குளிர்பானங்கள், குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்கும் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உடனடி உண்ணும் உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.
அதிலும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து இருக்கும் பொருட்களை ஆறிய பிறகு எடுத்து சாப்பிடுவது நல்லது. மேலும் இறைச்சிகளை நன்கு வேகவைத்து உண்ணுதல் அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் உணவுகளான மிளகு, சீரகம், பூண்டு, அன்னாசிப்பூ, முந்திரிப்பருப்பு, பாதாம், கீரைகள், கோவைக்காய் போன்ற உணவுகளையும் துத்தநாகம் அதிகமுள்ள உணவுகளையும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகரிக்க முடியும்.
இது கிருமிகள் வைரஸ்களை எதிர்த்து உடல் போராட உதவுகிறது. மேலும் கபசுர கசாயத்தை பயன்படுத்த அரசு கூறியுள்ளது. இதயே சித்த மருத்துவர்களும் பரிந்துரைத்து வருகின்றனர்.