அரவிந்த கிருஷ்ணா வெற்றி பயணம் – Aravind Krishnan Success Story

30 ஆண்டு பயணம் அரவிந்த கிருஷ்ணா, தனது பட்ட படிப்பை முடித்த பின் 1990ம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனத்தின் சேர்ந்துள்ளார்.

இவரை ஐபிஎம் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு ஒன்று சேர்ந்து 2020 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணாவை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது.

ஐபிஎம் நிறுவனத்திற்கு வருவதற்கு முன்பு அரவிந்த் கிருஷ்னா, கான்பூர் ஐஐடி-யில் இளங்கலை படித்து பட்டம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து அர்பானா-சாம்பெனில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் முடித்தார்.

பிறப்பு :

கிருஷ்ணா இந்தியாவின் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1962 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவரது தந்தை, மேஜர் ஜெனரல் வினோத் கிருஷ்ணா, இந்திய ராணுவத்தில்
பணியாற்றிய ஒரு இராணுவ அதிகாரி, இவரது தாயார் ஆரத்தி கிருஷ்ணா, இராணுவ விதவைகளின் நலனுக்காக பணியாற்றினார்.

பராக் அக்ரவால் வெற்றி பயணம்

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் :

1985 ஆம் ஆண்டில் கான்பூரில் உள்ள இந்திய தொழிநுட்பக் கழகத்தில் மின்பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெறுவதற்கு முன்பு தேராதூனிலுள்ள செயின்ட் ஜோசப் அகாடமி மற்றும் தமிழ்நாட்டின் குன்னூர் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.

பின்னர் இவர் 1990 இல் அர்பானா-சாம்பேனில் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியலில் முனைவர் பெற அமெரிக்கா சென்றார்.

தொழில் :

கிருஷ்ணா 1990 இல் ஐபிஎம்மில் தாமஸ் ஜே. வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தார். பின் இவரது முயற்சியால் நிறுவனத்தில் நிர்வாக பதவிகளுக்கு விரைவாக பதவி உயர்ந்தார்.


மேலும் 2015 ஆம் ஆண்டில் ஐபிஎம் ஆராய்ச்சியின் மூத்த துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் இவர் ஐபிஎம்மின் கிளவுட் மற்றும் அறிவாற்றல் மென்பொருள் பிரிவின் மூத்த துணைத் தலைவரானார்.

அது மட்டும் இல்லாமல் ஐஇஇஇ மற்றும் ஏசிஎம் பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்துள்ளார். செயற்கை நுண்ணறிவு, கிளவுட், குவாண்டம் கம்ப்யூட்டிங்
மற்றும் பிளாக்செயின் ஆகியவற்றில் ஐபிஎம் நிறுவனத்திற்கான புதிய சந்தைகளை உருவாக்குவதற்கும் விரிவாக்குவதற்கும் இவர் தலைமை தாங்கினார்.

ஐபிஎம் 34 பில்லியன் டாலர் ரெட் ஹட்டை கையகப்படுத்தியதன் பின்னணியில் இவர் ஒரு உந்து சக்தியாக இருந்தார். இது ஜூலை 2019 இல் மூடப்பட்டது.

இவர் ஏப்ரல் 6, 2020 முதல் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2012 முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கின்னி ரோமெட்டி 2020 ஆம் ஆண்டு பதவி விலகியதையடுத்து இவர் அப்பதவிக்கு வந்தார்.

இவர் அமெரிக்காவின் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாக சத்யா நாதெல்லா, சாந்தனு நாராயண் மற்றும் சுந்தர் பிச்சை ஆகியோருடன் சேர்ந்தார்.

ஐபிஎம் நிறுவனம் தன்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்குக் கடமைப்பட்டுள்ளேன் என்றும், உலக ஐபிஎம் ஊழியர்களுடன் இணைத்து பணிபுரிய ஆவலுடன் இருப்பதாகவும், ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்தார்.

சாதனை :

அரவிந்த் ஒரு பொறியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி இன்று IBM நிறுவனத்தின் நிர்வாக பதவிக்கு விரைவாக உயர காரணம் அவர் முயற்ச்சி மற்றும் படிப்பு.

34 பில்லியன் டாலர்களுக்கு Red Hat உடனான ஒப்பந்தத்தின் வடிவமைப்பாளராக இருந்ததே இவர் சாதனை.

நிகர மதிப்பு :

அரவிந்த் கிருஷ்ணாவின் நிகர மதிப்பு குறைந்தபட்சம் 509 கோடி ஆகும். இவர் ஒரு மாதம் 11 கோடி சம்பளமாக பெறுகிறார்.

Leave a Comment