நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஏப்ரல் 14, 1998 அன்று, உலகின் முதல்வீடியோ ஸ்ட்ரீமிங் தலமாக தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 30 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றினர்.
![](https://thumbnailsave.in/wp-content/uploads/2023/06/Netflix-Success-Story.jpg)
925 வீடியோ மட்டுமே இருந்தது , ஆனால் அந்த கால கட்டத்தில் அச்சிடப்பட்ட இறுவட்டுகளின் முழு எண்ணிக்கையே ஏறத்தாழ இவ்வளவு தான். ஆனால் கொரோனா நோய் பரவலுக்கு பிறகு.
நம்மில் பலர் வார இறுதியில் ரிலாக்ஸ் செய்துக்கொள்வதற்காக முதலில் தேடுவது நெட்ஃபிளிக்ஸை தான். அந்த அளவிற்கு நம்மை தன்வசப்படுத்தியுள்ள பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நம்மை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது.
தட் வில் நெவர் ஒர்க் :
நெட்ஃபிளிக்ஸ் வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனம் ஏப்ரல் 14, 1998 ஆண்டு மார்க் ராண்டல்ஃப் ‘Marc Randolph’ மற்றும் ரீட் ஹேஸ்டிங்ஸ் ‘Reed Hastings’
தொடங்கினர்.
மார்க் ஒவ்வொரு முறையும் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பிசினஸ் யோசனையைப் பற்றி கேட்கும்போதெல்லாம், அவருக்கு கிடைத்த பதில் “அது வேலை செய்யாது” என்று தானாம்.
பின் பல தோல்விகள், சறுக்கல்களுக்கு பின்பு படிப்படியாக உருவாக்கப்பட்ட ஒரு தளம் தான் நெட்ஃபிக்ஸ், ஆனால், தற்போது உலகளவில் 220.67 மில்லியன் பணம் செலுத்தும் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
இவ்வளவு தோல்விகளுக்கு பிறகும் இந்த உயரத்தை அடைந்ததற்கு
காரணத்தை தான் ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார் மார்க். நெட்ஃபிளிக்ஸை விட்டு வெளியேறிய 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.
இவர்கள் படிப்படியாக வளர்ந்து இன்று முதல் சமூகத்தை உருவாக்குதல் மற்றும் தோல்வி வரை ஒரு தொழில்முனைவோருக்கு தேவையான அத்தியாவசிய வணிகப் பாடங்களை தட் வில் நெவர் ஒர்க் ‘That Will Never Work’ என்ற தனது புத்தகத்தின் மூலம் கற்பிக்கிறார்.
இந்த புத்தகம் தொழில்முனைவோர்களிடையே பெரும் வரவேற்பை
பெற்று வருகிறது.
தட் வில் நெவர் ஒர் :
தட் வில் நெவர் ஒர்க் புத்தகத்தில், ஒரு நிறுவனத்தை ஜீரோ நிலையில் இருந்து தொடங்கி இன்று நெட்ஃபிளிக்ஸ் அடைந்துள்ள நம்பமுடியாத வெற்றியின் உச்சத்திற்கு எடுத்துச் செல்ல என்ன தேவை என்பதை புரிந்துக் கொண்டு தான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில், ஒரு பிசினஸை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல
உதவும் நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் படைப்பாற்றல் போன்ற முக்கிய நடைமுறைகளை பற்றி விரிவாகக் கூறுகிறார்.
வெற்றிகரமான வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்க ஒரு நல்ல ஐடியா இருந்தால் மட்டும் போதாது, அதை விரைவாகவும் எளிதாகவும் மலிவாகவும் அமைக்க வழிகளை கண்டுபிடிப்பதில் நீங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது” என்கிறார் மார்க்.
ரிஸ்க் எடுப்பதே அடிப்படை :
அனைத்து புதிய முயற்சிகளுக்கும் ரிஸ்க் எடுப்பதே அடிப்படை என்பது பிசினஸ் உலகில் அறியப்பட்ட உண்மை. பெரிய வணிக சாம்ராஜியத்தை உருவாக்க விரும்பினால், விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு யோசனையுடன் உங்க நிறுவனத்தை தொடங்கி, அதை வெற்றியடைய இலக்கு வைத்திருந்தால் மட்டும் போதாது. ஒரு நிறுவனம்
வளர்ச்சியடைய வேண்டுமென்றால்.
ஒவ்வொரு ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கும் குறைந்தது நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான யோசனைகளை கொண்டிருக்க
வேண்டும்.
சில சமயங்களில் அவை தோல்வியை தழுவும்போது, இந்த யோசனைகள் ஏன் வேலை செய்யாது என்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான யுக்திகளை வகுக்க வேண்டும்.
பொறுமை :
ஆர்வ கோளாறில் ஆரம்பத்தில் நீங்க எங்கு செல்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், ஒரு உறுதியான வணிக உத்தி ‘Solid business strategy’, வழக்கமான செயல்திறன் மதிப்பீடு ‘Regular performance assessment’, நிதி முன்னறிவிப்புகள் ‘Financial forecasts’ இல்லாமல், உங்களால் எதையும் செய்ய முடியாது.
எனவே, முதலீட்டாளர்களுடன் வெற்றிகரமாகத் தொடர்புகொள்வதற்கு உங்களுக்கு ஒரு உறுதியான வளர்ச்சிப் பாதையை கொண்டிருக்க வேண்டும்.
மார்க் நம்பிக்கை :
எல்லாருக்கும் ஐடியா இருக்கும், ஆனால் எல்லா ஐடியாவும் க்ளிக் ஆகும் என்று சொல்ல முடியாது. எனவே, முதலில் உங்க கருத்தை பற்றி யாராவது அக்கறை காட்டுகிறார்களா என்பதை கண்டறியுங்கள்.
ஒவ்வொரு தோல்வியும், அவமானமும் வெற்றியின் படிகள் என்பதை உணர்ந்தாலே உங்களுடைய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்கிறார் மார்க்.
வெற்றிகரமான வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்க ஒரு நல்ல ஐடியா இருந்தால் மட்டும் போதாது, அதை விரைவாகவும் எளிதாகவும் மலிவாகவும் அமைக்க வழிகளை கண்டுபிடிப்பதில் நீங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது” என்கிறார் மார்க்.