ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை வெற்றி பயணம் – Sridhar Vembu Success Story in Tamil

தமிழகத்தில் பிறந்து பெரும் தொழிலதிபராக சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதர் வேம்பு.

தற்போது தென்காசியின் மிகச்சிறிய கிராமத்தில் தங்கி தனது அலுவல் பணிகளை மேற்கொண்டிருக்கும் இவர் சிலிகான் வேலியில் தான் மிகப்பெரிய மென்பொருள்கள் தயாரிக்க முடியும் என்ற கோட்பாட்டை தகர்த்தெறிந்து கிராமப்பகுதியில் இருந்தும் கூட உலகின் சிறந்த மென்பொருள்களை தயாரித்து வழங்க முடியும் என நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்.

இளைஞர்களின் மனதில் நீங்காத இடம் கொண்டு இருக்கும் ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை வரலாறை பார்க்கலாம் வாங்க.

ஆரம்ப கால வாழ்க்கை :

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு விவசாயக் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்தான் ஸ்ரீதர் வேம்பு. இவர் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராபர் பணியில் இருந்தார். வேம்பு தனது கல்லூரிப் படிப்பை சென்னை ஐஐடியில் படித்தார்.

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஆய்வுப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். நியூ ஜெர்சியில் உள்ள ஃபிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1989ஆம் ஆண்டு மின் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

1994 இல் சான் டியாகோவில் இருக்கும் குவால்காமில் சேர்ந்தார். அங்கிருந்த போது . குறிப்பாக, CDMA, power control மற்றும் தொலைதொடர்பில் சிக்கலான பிரச்சனைகள் குறித்த வேலைகளில் ஈடுபட்டார்.

ஜெஃப் பெசோஸ் வெற்றி பயணம்

ஸ்டார்ட் அப் நிறுவனம் :

தற்போது மிகப்பெரிய தொழிலதிபராக வளம் வந்தபோதும் கூட சமூகத்தை பற்றிய அக்கறை கொண்டிருக்கும் ஸ்ரீதர் வேம்பு அவர்கள் இளம் வயதிலும் அவ்வாறே இருந்தார்.

இந்தியாவில் சோசலிசம் தான் மிகப்பெரிய பிரச்சனை என்பதை அறிந்துகொண்ட ஸ்ரீதர் வேம்பு அதனை சரி செய்திட விரும்பினார். அதற்கு ஏற்றாற்போல தனது தம்பி இந்தியாவில் நிறுவனம் துவங்குவது சம்பந்தப்பட்ட யோசனையுடன் வந்தபோது அதனை ஏற்று அவர் இந்தியாவிற்கு வந்தார்.

இதையடுத்து 1996ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை
(Vembu Software) தனது சகோதரருடன் இணைந்து தொடங்கினார்.ஆரம்பத்தில் ஒரு சிறிய அபார்ட்மெண்டில் தான் இவரது அலுவகம் செயல்படத்துவங்கியது. ஸ்ரீதர் வேம்புவின் மனைவி வீட்டை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

வேகமான வளர்ச்சி :

அன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு மிகவும் புதிதான இத்துறையில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டது இவரது வேம்பு சாஃப்ட்வேர் ஆகும். நிறுவனம் துவங்கப்பட்டபோது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் சேர்மனாக டோனி தான் இருந்தார்.

ஸ்ரீதர் வேம்பு நிறுவனத்தின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல் மற்றும் விளம்பரப்படுத்துதலில் ஈடுபட்டு இருந்தார்.

தொடக்கத்தில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும், மென்பொருள் சேவையிலும் முக்கியத்துவம் அளித்தார்.

இதனால் மிகக் குறுகிய காலத்திலேயே அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களும் மற்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு இவருக்கு வாடிக்கையாளர்களாக மாறின.

2000ஆம் ஆண்டிலேயே இந்நிறுவனம் மில்லியன் டாலர்களில் வர்த்தகம் மேற்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது. 2005ஆம் ஆண்டில் இந்நிறுவனம் அட்வென்ட்நெட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2009ஆம் ஆண்டில் அட்வென்ட்நெட் நிறுவனம் ஜோஹோ கார்பரேசன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகுதான் இந்நிறுவனம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது.

2015ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை 1.2 கோடியாக உயர்ந்தது. அந்த ஆண்டில் 30 கோடி டாலர் வருவாய் ஈட்டுமளவுக்கு ஜோஹோ நிறுவனம் வளர்ச்சி கண்டது.

Zoho கிளவுட் :

Zoho இன்று கிளவுட்-அடிப்படையிலான வாடிக்கையாளர் உறவு மேலாண்மை (CRM) தீர்வுகள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட பயன்பாடுகள், பிற செயல் பாடுகளுடன், ஆன்லைன் கணக்கியல், மனித வளம் மற்றும் சரக்கு மேலாண்மை ஆகியவற்றை வழங்குகிறது.

வாடிக்கையாளர் சேவை மென்பொருளான Zoho Desk உள்ளிட்ட சில தயாரிப்புகள் மத்தளம்பாறை அலுவலகத்திலிருந்து கட்டமைக்கப்பட்டுள்ளன, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்க நீங்கள் நகர்ப்புற மையங்களில் இருக்க வேண்டியதில்லை என்ற வேம்புவின் பார்வையை நிரூபித்தது.

88% பங்குகள் :

இந்தியாவில் தற்போது பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்தாலும். அதிலே அதிகபட்ச முதலீடுகளை செய்திருப்பது வெளிநாட்டு நிறுவனங்களாக இருக்கும். ஸ்ரீதர் வேம்பு இதில் ஒரு முன்மாதிரி, Zoho Corporation இல் பல முதலீட்டாளர்களும் முதலீடு செய்திட விருப்பம் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் எதற்கும் அசைந்துகொடுக்காமல் Zoho Corporation இன் 88% பங்குகளை வைத்திருக்கிறார் ஸ்ரீதர் வேம்பு.

59ஆவது மிகப் பெரிய பணக்காரர் வேம்பு :

2020 நிலவரப்படி, ஃபோர்ப்ஸ் பட்டியலில் சர்வதேச அளவில் 59ஆவது மிகப் பெரிய பணக்கார இந்தியர் ஸ்ரீதர் வேம்பு ஆவார். இந்திய அரசின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் சிறந்த தொழில்முனைவோர் போன்ற விருதுகளையும் இவர் வென்றிருக்கிறார்.

வாழ்க்கை முறை :

தென்காசிக்குச் செல்வதற்கு முன், வேம்பு சான் ஜோஸ் மற்றும் ப்ளெசண்டனில் உள்ள விரிகுடா பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்தார்.

அக்டோபர் 2019 வரை கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன்பு அவர் சிறிய நகரத்திற்கு பெரிய நகர்வை மேற்கொண்டார். 53 வயதான வேம்புவுக்கு, கிராமத்திலிருந்து வேலை செய்வது என்பது சில காலமாக ஒரு
பணியாக இருந்து வருகிறது.

ஸ்ரீதர் வேம்பு, மண், வைக்கோல் போன்றவற்றால் கட்டப்பட்ட மேல்பகுதியானது பனை ஓலையால் மூடப்பட்டிருக்கிறது. அதில் தான் அவர் வாழ்ந்து வருகிறார்.

சொத்து மதிப்பு :

ஸ்ரீதர் வேம்பு சொத்து மதிப்பு 31160 கோடி ஆகும்.

சமூக சேவை :

ஸ்ரீதர் வேம்பு எப்போதும் தமிழ் மக்களுக்கும். பெண்கள் பிரச்சனைக்கும் குரல் கொடுத்து கொண்டே இருக்கிறார். பல முறை சாதி ரீதியாக பெண்கள் ஒடுக்கு முறை பற்றியும் பேசியுள்ளார்.

இவர் பல முறை டிவிட்டர்ரில் ட்விட் போட்டு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். இவர் பல நல்ல காரியங்களையும் மக்களுக்கு செய்து வருகிறார்.

Leave a Comment