fbpx

Sathya Sai Baba History in Tamil – சத்திய சாய் பாபா வாழ்க்கை வரலாறு

சாய் பாபா இந்திய ஆன்மீக குருவாகப் போற்றப்பட்ட நபர்களில் ஒருவர். இவர் ஆன்மிக ஈடுபாட்டை கண்டு பக்தர்கள் அவரை கடவுளின் அவதாரமாகவே பார்த்தனர். இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் தன்னுடைய நிறுவனத்தின் மூலம் இலவசக் கல்வி, மருத்துவமனை மூலம் சேவைகள் செய்தார்.

இவர் பெயரில் 1200 க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றது. ஆன்மிகத்தின் உச்சத்தை கண்ட சாய் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் பெத்தவெங்கம ராயூ என்பவருக்கும், ஈசுவராம்மாவுக்கும் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சத்திய நாராயண ராயூ.

பாபா ராம்தேவ் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

புட்டபர்த்தியில் உள்ள ஒரு பள்ளியில் அவருடைய ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர், இளம் வயதிலேயே நாடகம், இசை, நடனம், மற்றும் கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.

சாய் பாபா செய்த அற்புதங்கள் மற்றும் சமூக சேவைகள் :

படிக்கும் காலக்கட்டத்தில் தன்னுடைய நண்பர்கள் ஏதாவது கேட்டால் தன்னுடைய மந்திரத்தால் வரவைத்து தருவராம். இதனால் அவரை சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் இருப்பார்கள்.

ஒரு நாள் அவருடைய வீட்டில் இருந்த அனைவரும் முன், கையில் கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை அவரை கண்டித்தார். அவர் சாய் பாபாவின் மறுஜென்மம் நானே என்றும் கூறினார்.

அவர் பேச்சும், செய்த அற்புதங்களும் பரவத் தொடங்கியது. விபூதி தருதல், மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம் போன்றவற்றை வரவழைத்து
அற்புதங்கள் நிகழ்த்தியதால். அவரை தேடி வர ஆரம்பித்தனர்.

1940 ஆம் ஆண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் வழங்கினார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவரை சாய் பாபாவின் மறுஜென்மம் என்று 1944 ஆம் ஆண்டு அவருக்கு கோயில்கள் எழுப்பினர்.

1954 ஆம் ஆண்டு, அங்கு மருத்துவமனையைத் தொடங்கி ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். இவருடைய பெயரில் பல தொண்டு
நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, இலவசக் கல்வி, மருத்துவம், பாடசாலைகள் என பல திட்டத்தை கொண்டு வந்தார்.

உலகில் சுமார் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் இவருடைய பெயரில்
தொண்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறது. சென்னை மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தெலுங்கு-கங்கை திட்டத்தை தொடங்கி. மக்களின் தாகத்தினை தீர்த்து வைத்தார்.

கொலைமுயற்சி :

ஜூன் 6, 1993 ஆம் ஆண்டு நான்கு இளைஞர்கள் கத்தியுடன் புட்டபர்த்தியில் உள்ள இல்லத்திற்குள் அவரை கொலை செய்ய முயன்றனர். இதில் 4 பணியாளர்கள் கொல்லப்பட்டனர். அத்துமீறிய நால்வரும் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் பாபா தப்பித்தார்.

இறப்பு :

2011 ஆம் ஆண்டு மார்ச் 28 தேதி சாய் பாபா உடல் நலக் குறைவு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதும் 2011 ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

உலகத்தில் மொத்தம் 100 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இவருக்கு இருந்தனர். பல தலைவர்களும், பிரதமர்களும், கிரிக்கெட் வீரர்களும்,
திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகளும் இவரை காண காத்து இருந்தனர்.


You may also like...

Leave a Reply

Your email address will not be published.