Peppa Foodie – Success Story

யூடியூப் Peppa Foodie சேனல்லின் உரிமையாளரின் வாழ்க்கை கதை :

ஆரம்ப வாழ்க்கை :

யூடியூப் Peppa Foodie கணேஷ் பிறந்தது தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை மாநகரத்தில். இவர் சிறுவயதில் எம்ஜிஆர் பள்ளியில் படிக்க தொடங்கினார். பின் 7 ஆம் வகுப்பை சென்னை பப்ளிக் பள்ளியில் தொடங்கினார். அங்கு அவர் ஆங்கிலம் பேசுவதற்க்கு மிகவும் தடுமாறினார்.

இவருக்கு மேடையில் பேசுவதற்க்கும் மற்றும் ஆங்கிலத்தில் பேசுவதற்க்கும் மிகவும் பயம் ஆகையால் பள்ளியில் யாருடனும் நெருக்கம் காட்டவில்லை.

இவருக்கு 17 வயது இருக்கும் போது K.G.R Beatbox என்ற யூடியூப் சேனல்லை தொடங்கி நடத்தி வந்தார். பின் அதை சில காரணத்திற்க்காக கைவிட்டார். அதே சமையம் இவர் 24 மணிநேரமும் கேம்ஸ் விளையாடும் சோம்பேறியாக இருந்தார்.

பல சமையம் பள்ளிக்கு செல்லாமல் கூட கேம்ஸ் விளையாடி கொண்டு இருந்தாராம்.

இந்த காரணத்தால் 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை . பின் பள்ளி தலைமை ஆசிரியர் இவருக்கு ஒரு வாய்ப்பு அளித்து உள்ளார்.

அந்த வாய்ப்புகளை இவர் சேரியாக பயன் படுத்தவில்லை பின் இவரை கண்டித்து 12 ஆம் வகுப்புக்கு அனுப்பியுள்ளார் தலை ஆசிரியர்.

இவர் 12 ஆம் வகுப்பை தொடங்கியதும் இவர் பள்ளியில் இருந்த ஆசிரியர் அனைவரும் இவர் தேர்ச்சி பெறமாட்டார் என்று சொல்லிவிட்டனர். பின் தன் சொந்த முயற்சியால் படித்து 80 சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

200 கோடி வெற்றி பயணம் ஹரிணி சிவகுமார்

கல்லூரியில் கணேஷ் :

பின் கல்லூரியில் சேர்ந்த அவர் சிறப்பாக படித்து வந்தார். அவருக்கு கேம்ஸ் மீது உள்ள ஆர்வத்தால் அவர் GTA 5 போன்ற விளையாட்டை விளையாடி யூடியூப் சேனல்லில் பதிவு செய்ய தொடங்கினார்.

அதை யாரும் விரும்பி பார்க்கவில்லை என்று அறிந்த பின்னர்.

சில மாதங்கள் அமைதியாக இருந்து உள்ளார். பின் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படிக்கும் போது இவருக்கு உணவு மீது உள்ள ஆர்வத்தால் ஒரு புதிய சேனல்லை உருவாக்கி உள்ளார் இன்ஸ்ட்டாகிராமில் .

முதல் முயற்ச்சி :

இவர் முதல் முதலில் சென்னையில் உள்ள ஏசியன் உணவகத்தில் வீடியோவை பதிவு செய்து உள்ளார். அந்த உணவகத்தில் உணவு சேரியில்லை என்று இவர் பதிவு செய்ததால். அந்த உணவக உரிமையாளர் இவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து பேசியுள்ளார்.

பின் உணவகம் சென்று விமர்சனம் செய்யாமல். zomato போன்ற செயலியில் உணவு வாங்கி விமர்சனம் செய்து வந்து உள்ளார். பிறகு இவர் செய்யும் விமர்சனத்தை கண்ட ஒரு உணவகம் இவருக்கு அழைப்பு விடுத்து உள்ளது. அங்கு சென்று அவர் உணவு உண்டு விமர்சனம் செய்து உள்ளார். அங்கு அந்த உணவக உரிமையாளர் சில அறியுரை இவருக்கு சொல்லியுள்ளார்.

இதனால் சோசியல் மீடியாவில் இவர் எப்போயுதுமே அவரை வெளிப்படுத்தி கொண்டே இருந்தார். அப்பொழுது தான் இவர் இன்ஸ்ட்டாகிராம் பேஜ் பெயரை Peppa Pig Foodie என்று வைத்து உள்ளார். இவர் பன்றி இறைச்சி சாப்பிடுவதால் தான் இந்த பெயரை வைத்து இருப்பதாக பலரும் நினைத்து உள்ளார்கள். இதனால் Peppa Foodie என்று பெயரை மாற்றியுள்ளார்.

TCS நிறுவனத்தில் வேலை :

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் தன்னை வெளிப்படுத்தி கொண்டு இருந்த இவர். பின் கொரோனவால் இவரால் வீடியோ பதிவு செய்ய முடியவில்லை. அதே சமயம் இவருக்கு கல்லூரி படிப்பு முடிந்து ஒரு வேலையும் கிடைத்து உள்ளது.

இவர் தாய் அவரை வேலை செய்து கொண்டே இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ பதிவு செய்ய சொல்லி இருக்கிறார். ஆனால் இவர் ஆசை முழு நேரம் இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது.

பின் TCS நிறுவனத்தில் சேர்ந்த இவர். இன்ஸ்ட்டாகிராமில் வீடியோ பதிவு செய்வதை யார் இடமும் சொல்லவில்லை. அங்கு நன்றாக வேலை செய்து வந்த அவர். தினமும் மாலை 5 மணிக்கு வீடியோ பதிவு செய்ய வெளியே சென்று விடுவார்.

பல முறை வேலையில் மேலாளர் தொலைபேசியில் அழைத்தால் கூட தொலைபேசியில் பேசி கொண்டே அவர் வீடியோவை பதிவு செய்து உள்ளாராம். ஒரு காலகட்டம் வரை இன்ஸ்ட்டாகிராமில் மட்டும் பதிவு செய்து வந்து இருக்கிறார்.

யூடியூப் சேனல் மற்றும் வெற்றி பயணம்

:

பின் யூடியூப்பில் சேனலை தொடங்கி அப்பொழுது புதியதாக அறிமுகம்
ஆனா Shorts விடியோவாக இவர் விடீயோக்களை பதிவு செய்து வந்துள்ளார். அதே நேரம் Blacksheep என்ற நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் இவர் தேர்வும் ஆனார்.

அதில் முதல் பதக்கத்தையும் வென்றார்.பல துன்பத்தையும் போராட்டத்தையும் கடந்து தான் இவர் அந்த முதல் விருதை வென்றார். அந்த விருதுக்கு பிறகு பலரும் இவர் இடம் நெருக்கமாக இருக்க ஆசைப்பட்டனர். விருதுக்கு முன் இவரை யாரும் மதிக்கக்கூடவில்லை.

விருது சிவகார்த்திகேயன் இடம் இருந்து வாங்கிய பின் இவர் சொந்தக்காரர்கள் கூட இவரை பாராட்ட தொடங்கினர். பின் இவர் சிங்கப்பூர் நண்பனோடு சேர்ந்து யூடியூப்பில் அனைத்தையும் கற்று கொண்டார். அவருடனே சேர்ந்து வீடியோ பதிவு செய்யவும் தொடங்கினார்.

துணிச்சல் முடிவு :

பிறகு IT மற்றும் யூடியூப் வேலை சேர்த்து செய்ய நேரம் இல்லாததால் பல எதிர்ப்புகளை தாண்டி IT வேலையை விட்டு வந்து யூடியூபில் முழு நேரம் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.


IT வேலையை விட யூடியூபில் பணம் நன்றாக வருவதாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் முயற்சி மட்டும் தான் யூடியூபில் ஒரு இடத்தை தரும் என்றும் கூறியுள்ளார்.

இன்று இவர் சேனல் 13 லட்சம் சந்தாதாரர்களை கொண்டு இருக்கிறது. பிப்ரவரி 20 ஆம் நாள் 1996 ஆம் ஆண்டு பிறந்த இவர் 26 வயதில் இந்த முயற்ச்சியில் ஈடுப்பட்டு உள்ளார். இவர் மாதம் 80 ஆயிரம் ரூபாயில் இருந்து 1 லட்சம் வரை சம்பாரித்து வருகிறார்.

Leave a Comment