நவீன் திவாரி வெற்றி பயணம் – Naveen Tewari Success Story

நவீன் திவாரி, உலகளாவிய மொபைல் விளம்பரம் மற்றும் தொழில்நுட்ப தளமான InMobi இன் நிறுவனர் மற்றும் இந்தியாவில் ஒரு தொழில்முனைவோர் ஆவார்.

2007ல் தொடங்கப்பட்ட mKhoj என்ற ஸ்டார்ட்-அப் பின்னர் ‘InMobi’ என்று பெயர் மாற்றப்பட்டு விளம்பர-டெக் உலகில் கால்பதித்து, முதலீடுகளைப் பெற்று இந்தியாவின் முதல் யூனிகார்ன் அந்தஸ்த்தை 2011ல் அடைந்தது. இந்த வெற்றி இவருக்கு எளிதில் கிடைக்கவில்லை.

நவீன் திவாரியின் ஆரம்ப பயணம் :

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்தவர் நவீன் திவாரி. இவர் டிசம்பர் 14, 1977 இல் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் டாக்டர் சச்சிந்தன். இவர் ஐஐடி-கான்பூரின் முன்னாள் பேராசிரியர் ஆவார்.

இதனால் நவீன் திவாரி கான்பூரில் உள்ள ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். இவருக்கு முதல் பணி கன்சல்டன்சி நிறுவனமான மெக்கின்சியில் கிடைத்தது. பின் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏவில் பொது நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.

எம்பிஏ முடித்தவர்களின் ஆஸ்தான கனவு, பிசினஸ் தொடங்குவதே.
அதே கனவின் அப்டேட் வெர்ஷனான ஸ்டார்ட்-அப் முயற்சியில் இறங்கினார் நவீன்.

அலக் பாண்டே வெற்றி பயணம்

தொழில் :

பின் பல விசியங்களுக்கு பிறகு mKhoj ஐடியா இவருக்கு தோன்றியது. எஸ்எம்எஸ் அடிப்படையிலான தேடலைப் பயன்படுத்தி தகவல் சிக்கலைத் தீர்ப்பதே இதன் கான்செப்ட்.


எளிதாகச் சொல்வதென்றால், எஸ்எம்எஸ் மூலம் சந்தேகங்கள் கோரினால், அதற்கான தகவல் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். இந்த கான்செப்ட் உடன் மும்பையில் அலுவலகம் திறந்தார் நவீன் மற்ற ஸ்டார்ட்அப் முயற்சிகளைப் போலவே, mKhoj நிறுவனமும் நிறைய ஏற்றத் தாழ்வுகளை கண்டது.

2007 வாக்கில் தோன்றிய இந்த ஐடியா புதிதாக இருந்தாலும், சந்தைக்கு வந்த சில மாதங்களுக்குப் பிறகு, இந்த மாடல் முன்பு எதிர்பார்த்ததுபோல் இல்லை.

இந்தியாவின் கலாச்சார அம்சத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள இந்நிறுவனம் தவறியதால் பயனர்களை கவர முடியவில்லை. இதனால், சேவைக்கான தேவை மிக அதிகமாக இல்லை என்பதால் வருமானம் என்பது குறைந்து கொண்டே இருந்தது.

சில மாதங்களில் இழுத்து மூடுவது என்ற கடினமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கான முடிவை எடுக்கும் மீட்டிங் மட்டும் 18 மணிநேரம் நடந்துள்ளது. இப்படியாக ஆரம்பித்து, எஸ்எம்எஸ் விளம்பர நெட்வொர்க்காக ஒருகட்டத்தில் இந்நிறுவனம் மாற்றம் கண்டது.

InMobi வளர்ச்சி :

மன உறுதியுடன் சம்பளம் எதுவும் இல்லாமல், இன்மொபி-க்காக அந்த எட்டு பேர் உழைக்க தொடங்கியுள்ளனர்.

இன்மொபி-யின் தொடக்க காலகட்டம் அவ்வளவு கடினமாக அமைந்த
அந்த நேரத்தில்தான் 8 பேரும் சிறந்த, அர்பணிப்பன உழைப்பை கொடுக்க, முதலீட்டாளர்கள் பார்வை நிறுவனம் பக்கம் திரும்பியுள்ளது.

2008ல் சிரீஸ் முதலீடாக $7.1 மில்லியனும், 2010ல் சிரீஸ் பி முதலீடாக $8 மில்லியனையும் 2019 வரை மொத்தம் 7 சுற்று நிதியாக மொத்தம் $320.6 மில்லியனை உயர்த்தி InMobi வளர்ச்சிப்பாதையில் பயணித்தது.

மூன்று ஆண்டுகளில் இன்மொபி செய்த சாதனையை, அதன் துணை நிறுவனமான ‘கிளான்ஸ்’ (Glance) தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் யூனிகார்ன் அந்தஸ்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கிளான்ஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விளையாட்டு, ஃபேஷன் போன்ற துறைகளின் தகவல்களை மொபைல் போன் லாக் ஸ்கிரீனில் வழங்குகிறது.

இன்மொபி ஆரம்பிக்கப்பட்ட ஓர் ஆண்டில் உலகின் 4 நகரங்களில் அலுவலகங்கள் திறக்கப்பட்டு, 8 பேராக இருந்த இந்த நிறுவனம் 50 பேர் என்ற எண்ணிக்கையை தொட்டது.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் விளம்பர நெட்வொர்க்குகளில் ஒன்றாக மட்டுமல்லாமல், இந்தியாவின் முதல் யூனிகார்ன் நிறுவனம் என்ற பெருமையையும் கொண்ட ஒரே நிறுவனம் இன்மொபி.

கொரோனா காலக்கட்டம் :

கொரோனா காலக்கட்டத்தில் எல்லாமே இணையமயம் ஆன சூழலில், அதை இயன்றவரை தனக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக் கொண்டது.

2022ல் இன்மொபி, 20-30 ஊழியர்களுடன் துபாயில் தனது அலுவலகக் கிளையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

பின் பல நிறுவனங்களிடம் இருந்து முதலீடை பெற்று 115 மில்லியனுக்கும் அதிகமான தினசரி பயனர்களுக்கு தனது சேவையை வழங்கி வருகிறது.

குடும்பம் :

அதிதி திவாரி மற்றும் நவீன் திவாரி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நவம்பர் 19, 2010 அன்று இவர்கள் திருமணம் செய்தனர். இவர்களுக்கு இரண்டு அழகான குழந்தைகள் பிறந்தனர்.

இவர் குழந்தை பருவ காதலியான அதிதி இவர் ஸ்டார்ட்-அப்களில் ஈடுபடலாம் என்று நினைத்தபோது, அக்சென்ச்சர் டெக் லேப்ஸில் விஞ்ஞானியாக வேலை செய்து குடும்பத்தை ஆதரித்தார்.

அதிதி திவாரி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு தகுதி வாய்ந்த விஞ்ஞானியாக இருக்கிறார்.

வரவிருக்கும் திட்டங்கள் :

பின் இவர் ‘Miip’ ஐ அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே ஒரு பெரிய நிகர மதிப்புடன், InMobi $500 மில்லியன் வருமானத்தை ஈட்டி வருகிறது.

நேர்காணல்களில், ‘Miip’ மொபைல் விளம்பரத்தை பயனர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களாக மாற்றும் என்று நவீன் அறிவித்தார். இது மீண்டும் பயனரின் கைகளில் அதிகாரத்தை செலுத்தப் போகிறது.

நவீன் திவாரி சுயவிவரத்தில் இருந்து, அவரது மகளின் வற்புறுத்தலின் பேரில்தான் Miip உருவானது என்று சுவாரஸ்யமான மேற்கோள்கள் வெளிப்படுத்தியுள்ளன.

நவீன் திவாரியின் InMobi இன் மிகப்பெரிய சாதனைகளில் Appstores.com, Sprout, MMTG Labs, Metaflow Solutions மற்றும் Overlay Media போன்ற நிறுவனங்களை கையகப்படுத்தியதும் அடங்கும்.

மதிப்பீடு :

நவீன் திவாரியின் சொத்து மதிப்பு 1,668 கோடி ஆகும்.

விருதுகள் :

2012 பிசினஸ் இன்சைடரின் மொபைல் பவர் லிஸ்ட் மூலம் 2வது மிக முக்கியமான நபராக பட்டியலிடப்பட்டது.

2014 சிறந்த ஸ்டார்ட்-அப்பிற்காக ஃபோர்ப்ஸ் இந்தியாவினால் இந்தியா லீடர்ஷிப் விருதைப் பெற்றது.

2014 உலகெங்கிலும் உள்ள 100 மிகவும் ஆக்கப்பூர்வமான நபர்களில் பெயரிடப்பட்டது.

2015 ஃபார்ச்சூனின் ‘40 வயதிற்குட்பட்ட 40’ வணிகத்தில் மிக முக்கியமான, செல்வாக்கு மிக்க மற்றும் சக்திவாய்ந்த நபர்களாக பட்டியலிடப்பட்டது.

2015 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் வழங்கப்படும் வருங்காலத் தலைவர்கள் விருதைப் பெற்றார்.

Leave a Comment