கனிகா டெக்ரிவால் வாழ்க்கை வெற்றி பயணம் – Kanika Tekriwal Success Story in Tamil

நான்கு வயதிலிருந்து விமானத்தில் பறக்க ஆசை பட்ட பெண் அவள் பெண் என்பதால் அந்த ஆசை அவள் குடும்பத்தால் கலைக்கப்பட்டது.

ஆனால் இன்று அந்த பெண் அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க தொடங்கி இருக்கிறார்.

இவர் தனியார் ஜெட்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தை தொடங்கி, பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் கனிகா டெக்ரிவால்.

கனிகாவின் கல்லூரி பருவம் :

1994 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய மார்வாடி குடும்பத்தில் தந்தை அனில் டேக்ரிவால் மற்றும் தாய் சுனிதாவுக்கு மகளாக கனிகா டெக்ரிவால் பிறந்தார். இவருக்கு ஒரு தம்பி உள்ளார். அவர் பெயர் கனிஷ்க்.

கனிகா சிறுவயதிலயே பைலட் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் இவள் பெண் என்பதால் அவர் வீட்டில் மறுத்தனர். இவரின் பைலட் கனவு கலைந்தாலும். விமான வடிவமைப்பு படிக்க குடும்பத்தில் அனுமதியும் வாங்கிக்கொண்டு மும்பைக்கு சென்றார்.

பின் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது இன்டர்ன்ஷிப்பிற்காக விமான வடிவமைப்பு நிறுவனம் ஒன்றில் பயிற்சி சேர்ந்தார். அந்த நிறுவனம் இவர் ஆர்வத்தை இன்னும் தூண்டி உள்ளது. இவர்க்கு அது தான் வாழ்கையின் முதல் படி என்று கூட சொல்லலாம்.

ஸ்ரீதர் வேம்பு வாழ்க்கை வெற்றி பயணம்

கேன்சரால் பாதிப்பு :

கனிகாவின் கனவு குறைவான கட்டணத்தில் விமான சேவை கொண்டு வருவது. பின் பல எதிர்ப்புகளை மீறி அவர் கனவை நிறைவு செய்ய லண்டன் சென்றார். அதனை செயல்படுத்த நிறுவனம் ஒன்றை தொடங்க நினைத்தவருக்கு பெரும், அதிர்ச்சியும் காத்துக் கொண்டிருந்தது.

அப்போது அவருக்கு உடல் நலம் சரயில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும் போது புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது இதனால் அவரால் வேலை செய்ய முடியவில்லை. பின் 1 வருடம் துயரம் பல கடினமான பிரச்சனை என பல எதிர்ப்புகளை அதிலும் மீண்டு வந்துள்ளார்.


கேன்சரில் இருந்து மீண்டு வந்த கனிகா, பல்வேறு நிறுவனங்களில் பணி விண்ணப்பம் அளித்தார். ஆனால், அனைத்து நிறுவனங்களும் கனிகாவினை நிராகரித்தனர். அப்போதுதான் சொந்தமாக ஏதாவது தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

ஜெட்செட்கோ தொடக்கம் :

முதலில் இவர் பல்வேறு சவால்களுக்கும் மத்தியிலும், விமான டிக்கெட்களை ஆன்லைனில் புக்கிங் செய்யும் தரவுத்தளத்தை உருவாக்கினர். அதற்க்கு ஜெட்செட்கோ (JetSetGo) என்று பெயர் அளித்தார்.

பின் பல பிரச்சனையை கடந்து சொந்த விமானங்களை வாங்க முடிவு செய்தார். ஆனால் அது சாதாரண காரியம் இல்லை என்பதை புரிந்து கொண்ட இவர். தனியார் விமானத் துறையில் உள்ள சிக்கல்களைக் சரிசெய்யும் வேலையில் இறங்கினார்.

அவர் இந்த துறையில் இருக்கும் பிரச்சனையை நேரடியாக பார்த்தார், மக்கள் விமான போக்குவரத்துக்கு அதிக தொகையை செலுத்து வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவதை உணர்த்தார்.

விமானப் போக்குவரத்துத்துறையில் நிலவும் இச்சிக்கலை கனிகா, குறைந்த விலையில் அனைவருக்கும் பலனிக்கும் வகையில் பிளைட் சார்ட் சேவை நிறுவனத்தை 2013ம் ஆண்டு தொடங்கினார்.

இது தனிப்பட்ட விமானங்களை, ஹெலிகாப்டர்களையும், அனைவரும் வாடகைக்கு கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.


இதுவே வருடத்திற்கு 150 கோடி ரூபாய் சம்பாதிக்கும் தொழிலதிபராகவும் கனிகாவினை மாற்றியுள்ளது.

கோவிட் பயண வெற்றி :

கோவிட்டுக்கு முன்பு வரை தனி ஜெட்களில் பயன்பாடு அதிகமாக மக்கள் விரும்பாவில்லை. தொற்றுக்காலம் மக்களின் மனநிலையை மாற்றியுள்ளது.

கனிகா அவள் நிறுவனத்திற்காக ஆப்பை உருவாக்கியபோது, ​​​​அவர் தந்தை அது ஒரு கேமிங் ஆப் என்று கேலி செய்தார். யாருமே அவரை பெரியதாக பார்க்கவில்லை.

சுய ஊக்கமே தாரக மந்திரமாக இருந்துள்ளது. “சில நாட்கள் மிகவும் கடினமாக இருக்கும். பல பிரச்சனையை ஒரு நாளில் இவர் சந்திக்கிறார்.

சொத்து மதிப்பு :

இன்று ரூ.420 கோடி சொத்து மதிப்புடன் 10 தனியார் ஜெட்களை கொண்டு வெற்றிகரமாக அவரது நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

எப்படியோ பல சவால்களுக்கும் மத்தியில். இந்த ஸ்டார்ட் அப் தற்போது இந்தியாவின் சிறந்த ஏர் டாக்சி நிறுவனமாகவும் உள்ளது.

கனிகா, 32 வயதில் 10 தனியார் ஜெட்டுக்கு உரிமையாளர் ஆகி உள்ளார். வாழ்கையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு இவர் ஒரு உதாரணம். தடைகளை எதிர்த்துப் போராடி சாதித்துக்காட்டிய கனிகா.

Leave a Comment