Devika Rani History in Tamil – தேவிகா ராணி வாழ்க்கை வரலாறு

திரைப்படத்துறையில் தேவிகா ராணி ஒரு புகழ்பெற்ற இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது அந்த அளவுக்கு இவர் திறமை படைத்தவர்.

இந்திய சினிமா துறையில் முதல் பெண் நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார் இவர். இந்திய திரையுலகில் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற முதல் பெண்மணிக்கு சொந்தக்காரர் ஆவர். அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

மார்ச் மாதம் 30 ஆம் நாள் 1908 ஆம் ஆண்டு , ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில், எம்.என் சௌத்ரி என்பவருக்கும், லீலாவுக்கும் தேவிகா ராணி மகளாகப் பிறந்தார்.

சிவகார்த்திகேயன் வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

சிறு வயதில் இருந்தே சிறந்த மாணவியாக இருந்த இவர் தேவிகா ராணி லண்டனில் உள்ள ரேடாவில் ஸ்காலர்ஷிப் பெற்றார். இவர் ஐக்கிய ராஜ்யத்தின் நாடகக் கலைக்கான இசை அகாதமியிலும் படித்தார்.

பின் கட்டிட வடிவமைப்பு, நெசவுப்பொருட்கள், உள்வடிவமைப்பு போன்ற வற்றிலும் கல்விக்கற்று வந்தார். இங்குதான் இவரின் வெற்றி படங்களில் திரைக்கதை எழுதிய நிரஞ்சன் பால் என்பவரை சந்தித்தார்.

திருமண வாழ்க்கை :

1929 ஆம் ஆண்டு நடிகருமான இமான்ஷூ ராயைத் திருமணம் செய்துகொண்டார். பின் நஜம் உல் அசனுடன் ஏற்பட்ட காதலால், 1936 ஆம் ஆண்டு தேவிகா ராணி நஜம் உல் அசனுடன் இணைந்தார். ஆனாலும், தேவிகா ராணி மீண்டும் அவரின் முதல் கணவரான இமான்ஷூ ராவிடமே தஞ்சம் அடைந்தார்.

திரைப்படத்துறையின் பயணம் :

முதன் முதலில் இந்தியா சினிமா துறையில் முத்த காட்சியில் நடித்த நடிகை இவர் ஆவர். 1933 ஆம் ஆண்டு வெளிவந்த கர்மா திரைப்படத்தில் தன் இமான்ஷூ ராயுடன் நடித்த “கர்மா” என்ற திரைப்படத்தில் நீண்ட நேரம் இதழோடு இதழ் முத்தக்காட்சியில் நடித்திருப்பார்.

இந்தக் காட்சி, இக்காலக் கதாநாயகிகளுக்குப் போட்டிபோடும் வகையில் நடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. 1934 ஆம் ஆண்டு தன்னுடைய கணவருடன் இணைந்து “பம்பாய் டாக்கிஸ்” என்ற திரைப்படத்தலத்தை சசாதர் முகர்ஜியுன் இணைந்து நிறுவினார்.

அந்தக் காலக்கட்டத்தில், பாம்பே டாக்கிஸின் வருகையால், இந்திய திரைப்படங்களுக்கு ஒரு உத்வேகம் கொடுத்ததாக அமைந்தது. இந்தியாவின் மிகப் பெரிய திரைப்பட நடிகை என அனைவராலும் பாராட்டப்பட்டார்.

பின் தன் கணவர் இமான்ஷூ ராய் இறந்த பிறகு, பாம்பே டாக்கிஸ் நிர்வாகத்தை, சசாதர் முகர்ஜியுன் பகிர்ந்து கொள்ள வேண்டியதாயிற்று.


ஆனால், சசாதர் முகர்ஜி மற்றும் அசோக்குமார் ஆகியோர் பாம்பே டாக்கிஸ் நிறுவனத்திலிருந்து பிரிந்து வந்து, பிலிம்ஸ்தான் என்ற திரைப்பட நிறுவனத்தை உருவாக்கினர். இதனால் பாம்பே டாகிஸின் வளர்ச்சி சற்று குறைந்தது எனக் கூறப்படுகிறது.

விருதுகள் :

இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம ஸ்ரீ” விருது 1958 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

1970 ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இறப்பு :

தேவிகா ராணி அவர்கள், 1994 மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி தன்னுடைய 86 வது வயதில் இறந்தார்.

Leave a Comment