ஆகாஷ் மஸ்கே மற்றும் ஆதித்ய கீர்த்தனே வாழ்க்கை வெற்றி பயணம் – Akash Maske and Aditya Keerthane Success Story in Tamil

ஊரடங்கு நேரத்தில் வேலை இல்லாமல் பலரும் கஷ்டத்தில் இருந்தோம். இதனால் பலரும் பொருளாதார சிக்கலில் இருந்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் இரண்டு நண்பர்கள் சேர்ந்து செய்த சொந்த தொழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இவர்கள் செய்த தொழிலால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் 10 கோடி ருபாய்க்கும் மேல் சம்பாதித்து சாதித்தனர். இவர்கள் இருவரும் கொரோன காலக் கட்டத்தில் வேலை இழந்த எப்படி 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதித்த சாதனையை பார்க்கலாம்.

ஆரம்ப காலம் :

நாம் அனைவரும் சந்தோஷமாக இருந்த கடைசி ஆண்டு 2019 தான். அதற்க்கு பிறகு நாம் எங்கு பார்த்தாலும் ஊரடங்கு தான். சொல்ல போனால் நண்பர்களை கூட நம்மால் பார்க்க முடியவில்லை. 2020 ஆம் ஆண்டு கோவிட்-19 காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது ஆகாஷ் மஸ்கே மற்றும் ஆதித்ய கீர்த்தனே இவர்களுக்கு வாழ்க்கையில் பெரும் சோகம் ஏற்பட்டது.

இவர்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருகிறார்கள். இவர்கள் சிறு வயதில் இருந்தே ஒன்றாக சேர்ந்து படித்து பொறியாளர் பட்டம் பெற்றார்கள்.

இப்படி இருக்கும் போது ஊரடங்கில் இவர்கள் இருவருக்கும் வேலை பறிபோனது. வேலையை இழந்த இருக்கும் போது கொஞ்சம் கூட கவலை இல்லாம முதல் ஒரு மாதத்தை திரைப்படம் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தாக.

ஆனால் கோவிட் தொற்று விரைவில் முடிவுக்கு வரவில்லை . இதனால் இவர்களுக்கு பொருளாதார பிரச்சனை ஏற்பட்டது.

சுனிதா கிருஷ்ணன் வாழ்க்கை வெற்றி பயணம்

சொந்த தொழில் :

இதனால் பல நிறுவனங்களுக்கு சென்று வேலை முயற்ச்சி செய்தனர். எவ்வளவு முயற்ச்சி செய்தும் இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை இதனால் அவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தார்கள்.

அனைவரையும் போல சொந்த தொழில் செய்வது எப்படி என்று புத்தகம் வாங்கி படிக்க தொடங்கினர். ஆனால் அனைவரும் போல் இல்லாமல் இவர்கள் அந்த புத்தகத்தில் இருந்து பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டனர்.

பின் அவர்கள் படித்த கல்லூரியில் நடந்த இறைச்சி மற்றும் கோழி பதப்படுத்துதல் குறித்த வகுப்பில் இருவரும் சேர்ந்தார்கள்.

பின் இவர்கள் இருவரும் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் இறைச்சி கடையை திறந்து நயமான விலையில் நல்ல சலுகையுடன் விற்க்க தொடங்கினர். இவர்கள் வியாபார யுத்தி வெளியில் இருந்து பார்க்க வித்தியாசமாக இருந்தாலும் ஆரம்பத்தில் இவர்கள் செய்யும் தொழிலை கண்டு அவர்கள் குடும்பம் இவர்களுக்கு ஆதரவு தரவில்லை.

குடும்ப ஆதரவு :

இவர்கள் செய்யும் தொழில் அவர்கள் குடும்பத்திற்க்கு பிடிக்கவில்லை இந்த தொழில் செய்தால் இவர்களுக்கு திருமணம் நடப்பது கடினம் என்று அவர்கள் குடும்பா உறுப்பினர்கள் நினைத்தார்கள்.

ஆனால் இவர்களுக்கு நடந்ததே வேறு கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் தொழிலில் வெற்றி பெற தொடங்கினார்கள். பின் அவர்கள் குடும்பம் இவர்களுக்கு ஆதரவு தர தொடங்கியது.

மாதம் சுமார் 4 லட்சம் ரூபாய் :

இவர்கள் இருவரும் இணைந்து வெறும் ரூ.25,000 முதலீட்டில் Apetitee என்ற பெயரில் இறைச்சி கடையை வெறும் 100 சதுர அடி அளவில் திறந்து அவர்களில் கடின முயற்சியால் மாதம் சுமார் 4 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து வருகின்றனர்.

ரூ.10 கோடிக்கு விற்பனை :

இவர்கள் இந்த தொழிலை பல நல்ல இறைச்சி விற்பனையாளர்கள் விட நல்ல லாபத்தில் நடத்தி வந்ததை பலரும் பார்த்து வியந்தனர். இதனால் இவர்கள் இடம் இருந்து கடையின் சில பங்குகளை ரூ.10 கோடிக்கு Fabi என்ற நிறுவனம் வாங்கியுள்ளது.

அது மட்டும் இல்லாமல் Fabi நிறுவனம் இவர்கள் இருவரையும் அதே நிறுவனத்தில் தொடர்ந்து பனி புரியவும் வற்புறுத்தியது. அவர்கள் செய்யும் வேலைக்கு சம்பளம் மற்றும் லாபத்தில் இருந்து 40 சதவிகிதம் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால் இவர்கள் ஒப்பந்தத்திற்கு பிறகும் இவர்களில் கடையின் பெயர் Apetitee என்ற பெயர் மாற்றாமல் அப்படியே விற்பனை செய்தது.

இவர்கள் நிறுவனம் இன்று அதிக லாபம் சம்பாரிக்க தொடங்கியது இவர்கள் பல புதிய தயாரிப்புகளை தயாரித்து சந்தையில் அறிமுகப்படுத்தினர்.

பின் இப்போது 3 ஆண்டுகளில் 100 கடைகள் திறக்க போவதாக கூறியுள்ளனர். மக்கள் ஆர்டர் செய்தால் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்லலும் அளவுக்கு இவர்கள் திட்டம் திட்டி வருகிறார்கள். இவர்கள் முழு நேர தொழிலதிபர் ஆகிவிட்டனர்.

Leave a Comment