பாபா ராம்தேவ் அனைவரும் அறிந்த நபர் இவர். இவரின் மூச்சுப் பயிற்சி, யோகா,ஆயுர்வேத மருத்துவ முறை, அரசியல் என அனைத்திலும் மயங்காத மக்களே இல்லை. சாதாரண ஒரு மனிதனாக பிறந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு ஆரோக்யத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி வருகிறார்.
![](https://thumbnailsave.in/wp-content/uploads/2023/06/Baba-Ramdev.jpg)
இவரின் கொள்கையே வேறு இந்தி மொழி முதன்மை மொழியாக இருக்க வேண்டும், இந்திய ஆயுர்வேத சிகிச்சை முறையை இந்தியர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார்.
ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்திற்கு எதிராகவும் போராடி வரும். பாபா ராம்தேவ் அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு :
1965 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி ராம் நிவாஸ் யாதவ் மற்றும் குலாபோ தேவி தம்பதியருக்கு மகனாக பாபா ராம்தேவ் ஹரியானா மாநிலத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமகிருஷ்ண யாதவ்.
ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும் :
அவருடைய ஆரம்பக்கால கல்வியை அலிப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தொடங்கினார். எட்டாம் வகுப்பிற்கு மேல் குருகுலத்தில் சேர்ந்தார். பலவிதமான குருகுல பயிற்சி மூலம் இந்திய இலக்கியம், யோகா மற்றும் சமஸ்க்ருதம் கற்க தொடங்கினார். குருக்குலங்களில் சன்யாசிகளிடம் பாடம் கற்ற அவர்.
அவரும் சன்யாசியாக போலவே மாற விரும்பினார். இதனால் காவி உடை அணிய ஆரம்பித்தார். அதற்க்கு பிறகு தான் இவரை பாபா ராம்தேவ் என்று அனைவரும் அழைத்தார்கள்.
பாபா ராம்தேவ் துறவி மற்றும் யோகா :
ஹரியானாவில் உள்ள கல்வா குருகுலத்தில் இருக்கும் போது அங்குள்ள கிராம மக்களுக்கு இலவச யோகா பயிற்சி கற்று கொடுத்தார். பிறகு வேதங்களைக் படிக்க ஆர்வம் வந்ததால் அவர் ஹரித்வாரில் உள்ள குருகுல காங்க்ரி விஸ்வவித்யாலயாவிற்குச் போனார்.
குருகுல பள்ளியில் அவர் பல ஆண்டுகள் தங்கி அங்கேயே யோகிக் சதன் என்ற புத்தகத்தைப் கற்றார். அந்த புத்தகத்தை கற்ற பின் இமயமலைக் குகை சென்று, சுய ஒழுக்கம் மற்றும் தியான பயற்சி செய்தார்.
தீவிர பயிற்சி பின் திவ்யா யோக் மந்திர் டிரஸ்ட் என்ற அமைப்பை உருவாக்கி , ஆச்சார்யா நிதின் சோனி அவர்களுடைய நிறுவனத்துடன் இணைந்து பல நல்ல திட்டங்களை மக்களுக்கு உருவாக்கினார். அவரின் முதல் யோகா பயிற்சி ஆஸ்தா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆனது.
இதனால் அமிதாப் பச்சன், ஷில்பா ஷெட்டி போன்ற பல திரை பிரபலங்கள் இவரிடம் யோகா கற்றனர். அது மட்டும் இல்லாமல் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும், முஸ்லீம் மத குருக்களின் கல்லூரியிலும் யோகா கற்றுக் கொடுத்திருக்கிறார்.பல நாடுகள் சென்றும் யோகா கற்றுக் கொடுத்திருக்கிறார்.
இவரது யோகா முறை, ஆயுர்வேத முறைகளாலும் பல நோய்கள் குணமடைவதை அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்தது.
அரசியல் மற்றும் சமூக பிரச்சாரங்கள் :
பாபா ராம்தேவ் ஊழலுக்கு, கருப்புப் பணத்திற்கு எதிரானவர். 2011 ஆம் ஆண்டு , ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 1 லட்சம் மக்களுக்கும் மேல் சேர்த்து பெரிய போராட்டத்தை நடத்தினார். பிறகு அதே ஆண்டு ஊழலைக் கட்டுப்படுத்தவும் உண்ணாவிரதம் இருந்தார்.
இதனால், போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர். பெங்களூர், மும்பை என பல இடங்களில் உண்ணாவிரதம் இருக்க தூண்டினார். பிறகு அரசு இவர் கோரிக்கையை ஏற்றதால் 9 வது நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
சர்ச்சைகளும், விமர்சனங்களும் :
பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து அவரது பதஞ்சலி யோகா டிரஸ்ட் மீது பல சர்ச்சைகள் எழுந்தன. அவர் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட பொருள்களை இந்தியாவில் விற்றதாகவும் சொல்லப்படுகிறது.
இவர் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் என ஆய்வுகள் முடிவில் வெளிவந்தது.