காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தி, இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால்நேருவின் கொள்ளுப்பேரன். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி இவரின் பாட்டி. படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி, ஐமுகூ தலைவர் சோனியாகாந்தியின் மகனான இவருக்கு, பிரியங்கா காந்தி என்ற தங்கையும் உள்ளார்.
2004ல் தனது அரசியல் வாழ்வை துவங்கிய ராகுல், தனது தந்தையின் தொகுதியான உத்திரபிரதேசத்தின் அமேதியில் முதல்முதலாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். 24 செப்டம்பர்2007 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமாகவும், நம்பிக்கை நாயகனாகவும் பார்க்கப்படும் ராகுல் காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.
பிறப்பு :
1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் நாள் புது தில்லியில் ராஜீவ்காந்திக்கும், சோனியா காந்திக்கும் மகனாகப் பிறந்தார் ராகுல் காந்தி. இவர், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் கொள்ளு பேரனும், இந்திராகாந்தியின் பேரனும் ஆவார். இவர் சகோதிரியின் பெயர் பிரியங்கா காந்தி.
என். எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :
இவர் தனது தொடக்ககல்வியை டெல்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியிலும் பின்னர் டேராடூனிலும் பயின்றார். 1991ல் ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக ப்ளோரிடாவின் ரோலின்ஸ் கல்லூரியில் ரவுல் வின்சி எனும் புனைப்பெயரில் இளங்கலை பட்டம் பயின்றார்.
பின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ட்ரைனிடி கல்லூரியில் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் எம்.பில் பட்டம் முடித்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார் ராகுல் காந்தி. பின் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, இந்தியா திரும்பினார்.
2002 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், சொந்தமாக ஒரு தொழிலை நடத்தினார்.
அரசியல் வாழ்க்கை :
பின் 2003 ஆம் ஆண்டில் இவர் தேசிய அரசியலுக்கு வரப்போவதாக ஊடகங்கள் பரவலாக செய்திகள் வெளியிட்டன.ஆனாலும் இவர் அதை உறுதிப்படுத்தவில்லை. இவர் தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.
பிறகு அரசியலில் தன்னுடைய வருகையை மார்ச் 2004 ஆம் ஆண்டு அறிவித்தார்.
இதன் அடிப்படையில் 2004 ஆம் ஆண்டு மே மாதம் அவர் தந்தையின் தொகுதியான அமேதியில் தேர்தலை சந்தித்தார்.
ராகுல்காந்தி, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினரானார் இவரின் முதல் படியே வெற்றியானது.
இந்தியாவின் தலைசிறந்த அரசியல் குடும்பத்தின் இளம் உறுப்பினர் என்ற முறையில் அவர்தான் அடுத்த தலைவர் என்று எதிர்பார்த்தனர்.
இருந்தாலும், தேர்தல் காலக்கட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு
ஆதரவாக, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த அவர்,காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதோடு மட்டுமல்லாமல்.
இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கும், ‘இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பிற்கும்’ செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளரை விட சுமார் 3 லட்சத்துக்கு மேற்பட்டட வாக்குகளைப் பெற்று, இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.
2014 மற்றும் 2019 தேர்தல் :
பின் 2014 ஆம் ஆண்டு தேர்தல் இவருக்கு தோல்வியை தந்தது.பதினேழாவது மக்களவைத் தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வழக்கமாக போட்டியிடும் அமேதியில் இசுமிருதி இராணியிடம் 292973 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.
அங்கு அவர் 413394 வாக்குகளும், இசுமிருதி இராணி 468514 வாக்குகளும்
பெற்றனர். எனினும், வயநாட்டில் 706367 வாக்குகள் பெற்று இந்திய பொதுவுடமை கட்சியின் சுனீரை தோற்கடித்தார். சுனீர் பெற்றவாக்குகள் 274597 ஆகும்.
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவி :
கடந்த 19 ஆண்டுகளாக சோனியா காந்தி வகித்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சமீபத்தில் ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எளிமையான விழாவில் இந்தப் பொறுப்பினை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரசு கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரசின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக முறைப்படி அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை :
2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் படிக்கும் போது கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் சென்றார் என்று குற்றம்சாட்டப்பட்டார். ஆனால் இவர்கள் நண்பர்களே ஆவார்.
தனித்துவமான அரசியல் நடவடிக்கைகள் :
அரசியலில் ஈடுபட்ட துவக்கத்தில், மிகவும் ஒடுக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வாழும் இடங்களில் தங்கி, உணவருந்தி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இவரால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.