Tamil Quotes

M.Karunanidhi History in Tamil – மு. கருணாநிதி வாழ்க்கை வரலாறு

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களின் ஒருவரான முத்துவேல் கருணாநிதி. திராவிட முன்னேற்ற கழகத்தை 1969 ல் இருந்து வழி நடத்தி வருகிறார். சமூகப் பணியில் இருந்த ஆர்வம். அவரை தமிழ்நாட்டின் தலைச்சிறந்த முதலமைச்சராக செயல்பட வைத்தது.

60 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் அவர். கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட வழிநடத்துகிறார். தமிழ் இலக்கியத்தில் அவருடைய இலக்கிய பங்களிப்பைத் இனி இவரைப்போல யாராலும் தர முடியாது. இவரால் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம் ஏழை மக்களுக்கு இன்று வரை உதவியாக இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி, தொழில்துறையில் பல சீர்திருத்தங்கள் என பல சாதனைகள் செய்து உள்ளார். கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் சிறு கிராமத்தில் ஜூன் 3ஆம் தேதி, 1924ஆம் ஆண்டு, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார்.

சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

இவருடைய குடும்பம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தது. வறுமையின் காரணமாக அவரது இளமைக் காலத்தில் கோவிலில் நடன கலைஞராக இருந்தார்.

இவர் இயற்பெயர் தட்ஷிணாமூர்த்தி, பின்னர் அவர் பெயரை முத்துவேல் கருணாநிதி என்று மாற்றிக்கொண்டார். இவர் சிறுவயதில் பள்ளிக்கு செல்லவில்லை என்றாலும் அவர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகவும் பற்றுடையவராக இருந்தார்.அதில் சிறந்தும் விளங்கினார்.

திரையுலக வாழ்க்கை :

தமிழ் இலக்கியத்தின் மீது உள்ள ஆர்வத்தால் தமிழ் மொழி திரைப்படங்களுக்கு கதை-வசனம் எழுதுபவராக இருந்தார். இவரது வசனங்கள் மூலம் பலரையும் ஈர்த்தார். அவர் எழுதிய அணைத்து கதைகளும் தீண்டாமை அழிப்பு மற்றும் சுய மரியாதை திருமணம் ஒழிப்பு போன்றவற்றை சார்ந்தே இருக்கும்.

பிராமண சமூகத்தின் ஆதிக்கத்தின் எதிர்மறை அம்சங்களை இவரது படமான பராசக்தியில் பிரதிபலித்தார். பல சர்ச்சைகள் இருந்தாலும் இந்த திரைப்படத்தை பலரும் ரசித்தார்கள்.

திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதுவதைத் தவிர, கருணாநிதி அவர்கள், பல்வேறு கவிதைகள், கடிதங்கள், புத்தகங்கள் என பல விதத்தில் தமிழ் திரையுலகை ஆண்டுள்ளார். திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கட்டடக்கலைக் குவியலான வள்ளுவர் கோட்டத்தை நிறுவினார்.

தனிப்பட்ட வாழ்க்கை :

கருணாநிதி மொத்தம் மூன்று முறை திருமணம் செய்தார்.முதல் மனைவியின் பெயர் பத்மாவதி இவர்களுக்கு எம்.கே. முத்து என்று ஒரு மகன் பிறந்தார். பத்மாவதி இறந்த பிறகு இரண்டாவது மனைவியான தயாளு அம்மாவை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு பிறந்தவர்களே அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்கு பிறந்தவர் தான் கனிமொழி.

அரசியல் வாழ்க்கை :

நீதி கட்சியின் உறுப்பினரான அழகிரிஸ்வாமியின் சமூகநல காரணங்களைப் பற்றிய உரையை கேட்ட கருணாநிதி.அந்த உரையினால் ஊக்குவிக்கப்பட்டார். அவர் முதன் முதலில் மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற பெயரில் தொடங்கினார். இதுவே அவர் தொடக்கமாக அமைந்தது.

தனது வேலைகளை விளம்பரம் செய்ய பத்திரிக்கை என்னும் சக்தியை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். இதனால் 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதி “முரசொலியை” தொடங்கினார். அப்பொழுது முதல், இந்த
பத்திரிகையின் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வருகிறார். எழுத்துத்திறன் மூலம் தனது பத்திரிகையால் தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார்.

கள்ளக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து. பிறகு தான் ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தார். 1957ல், அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து, முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1961ல், தி.மு.க. கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். 1967 ஆம் ஆண்டு அண்ணாதுரை திடீர் மரணம் அடைந்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு பின், அண்ணாதுரை வகித்த தலைமையமைச்சர் பதவியை மு.கருணாநிதி ஏற்றார்.

அதன் பின், அவர் 1971, 1989, 1996 மற்றும் 2006 ல் மீண்டும் தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாதனைகள் :

கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், ஐ.டி துறையை டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கினார்,ஒரகடத்தில் மஹிந்திரா மற்றும் நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள் வர காரணமாக இருந்தார்,தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பு,அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்.

மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது, SIPCOT உருவாக்கியது கலைஞர்,சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது என பல சாதனைகள் செய்துள்ளார்.

விருதுகள் :

டாக்டர் பட்டம் வழங்கியது அண்ணாமலை பல்கலைக்கழகம்.

தமிழ் பல்கலைக்கழகம் தென்பாண்டி சிங்கம் என்ற புத்தகத்திற்கு ராஜா ராஜன் விருதை வழங்கியது.

தமிழ்நாடு முஸ்லீம் மக்கள் கட்சி, அவருக்கு முஸ்லீம் சமூக நண்பர் என்ற பட்டதை வழங்கியது.

இறப்பு :

2016-ஆம் ஆண்டு முதல் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனைக்குச் சென்று உடலைப் பரிசோதித்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பிரச்சனை இருந்ததால். ஆகஸ்ட் 07, 2018 அன்று சிகிச்சை பலனின்றிச் சென்னையில் காலமானார்.

Exit mobile version