Tamil Quotes

Dhirubhai Ambani History in Tamil – திருபாய் அம்பானி வாழ்கை வரலாறு

திருபாய் அம்பானி என்ற பெயர் இந்தியாவின் வரலாறு. இந்தியாவின் தொழில்துறை உலகத்தை ஆண்டான் மன்னன் என்று அவரை அழைப்பார்கள். மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தொடங்கிய அவர் வாழ்க்கை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற மாபெரும் நிறுவனத்தை உருவாக்கி இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கினார்.

ஆசியா வீக் வெளியிட்டஇதழில் ஆசியாவின் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தை தன்னுடைய வர்த்தகப் பங்குகளை வைத்து இவரால் உயர்த்தவும் முடியும் வீழ்த்தவும் முடியும். திருபாய் அம்பானி வாழ்க்கை வரலாறை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு :

டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி 1932 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென் என்பவருக்கும் மகனாக திருபாய் அம்பானி பிறந்தார். இவர் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பமாக தான் இருந்தது இவர் பிறக்கும் வரை.

நடிகர் பிரபுதேவா வாழ்க்கை வரலாறு

ஆரம்ப வாழ்க்கை :

ஹீராசந்த் கிராமத்தில் பள்ளியில் ஒரு ஆசிரியராகத் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய திருபாய் அம்பானி. சிறிது காலம் கழித்து ஆசியாவில் உள்ள ஏமனுக்கு சென்று ஏ.பெஸி & கோ நிறுவனத்தில் பணிப்புரிந்தார்.

அவர் பணியில் பல பொறுப்புகளில் பணியாற்றி பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். ஏமனில் தன்னுடன் வேலைப்பார்த்து வந்த சமபக்லால் தமானி என்பவருடன் இணைந்து, ‘மஜின்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தை பிரபல படுத்த மிகவும் கடினமாக உழைத்தார்.

இந்த நிறுவனம் முதலில் பாலிஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதி செய்ய தொடங்கினார். பின் சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த நிறுவனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனியாகப் பிரிந்த திருபாய் அம்பானி அவர் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கை :

திருபாய் அம்பானி, கோகிலா பென் என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு, முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி என இரண்டு மகன்களும்,நிதா கோத்தாரி அம்பானி மற்றும் நினா சல்கோகர் அம்பானி என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

வெற்றிப் பயணம் :

துணி வியாபாரத்தில் நல்ல லாபம் இருப்பதை 1970 ஆம் ஆண்டு தெரிந்து கொண்ட அவர், தன்னுடைய முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் தொடங்கினார். விமல் என்னும் பெயரில் துணிகளை விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், நாளுக்கு நாள் வளர்ச்சியை அடைந்து கொண்டே போனது.

பின்பு இரண்டாவது தொழிலாக ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் ​​இன்ஜினியர்ஸ்
பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 55000-க்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள் திருபாய் அம்பானியை நம்பி இருந்தார்கள், நாளுக்கு நாள் சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக இது மாறியது.

குறிப்பாக 1982 ஆம் ஆண்டுக்கு பிறகு, அவர் பங்கு சந்தையில் தன்னுடைய அணைத்து பங்குகளின் விலையை பல மடங்கு அதிகப்படுத்தி இந்தியாவில் மன்னனாக விளங்கினார். பல பிரச்சனைகள் வந்தாலும், அவர் கனவை நினைவாக்க தொடர்ந்து தன்னுடைய வணிகத்தை பல மடங்கு விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

பெட்ரோலிய உற்பத்தி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை எனப் பல தொழிலை உருவாக்கி பல நாடுகள் இவரை திரும்பி பார்க்கும் அளவுக்கு இந்தியாவின் வர்த்தகத்தில் வலுவாக வளர்ந்தார்.

இறப்பு :

சிறு வணிகராக தன்னுடைய வாழ்க்கைப் தொடங்கிய திருபாய் அம்பானி 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் தேதி 69-வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

விருதுகள் :

1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டு ஆசியா வீக் இதழ் வெளியிட்ட மிகவும் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.

2001 ஆம் ஆண்டு தி எக்கனாமிக் டைம்ஸ் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.

இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டார்.

2000 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் மிகப்பெரும் சொத்து உருவாக்க சாதனையாளராக தேர்வு செய்யப்பட்டார்.

Exit mobile version